Editor's Choice

சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டுப் பாலும், நம் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும், இரண்டிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protien) நாட்டுப் பசுவில் A2 Beta – Casein ஆகவும், சீமை மாடுகளில் A1 Beta – Casein ஆகவும் மாறுபடுகிறது.

இதில் A1 Beta – Casein புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்பொழுது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். BCM7 என்னும் புரோட்டீன் மூலக்கூறு சீமை மாட்டுப் பாலில் பல வியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. மார்பின், ஓபியம் போதைப்பொருளோடு ஒப்பு நோக்கக்கூடிய ரசாயண மூலக்கூறுகளாகும்.

இதற்கு சரியான உதாரணம், நாட்டுப் பசுவின் கன்றுகள் பால் குடித்தவுடன் உற்சாகமாக துள்ளி விளையாடும். ஆனால் சீமை மாட்டுக் கன்றுகள் சோர்ந்து தூங்கும்.

இந்த சீமை மாட்டின் பாலை மனிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்க குழந்தையின் மூளை வளர்ச்சி மந்தத்தன்மையுடன் வளரும், மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்காது. குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் உண்டாகுகின்றது, மனித உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சம நிலையை தடுமாற செய்கின்றது.

இதன் தாக்கம் பிட்டியூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை என அனைத்தும் தடுமாறச் செய்கின்றது. இதன் மூலம் புதுப்புது வியாதிகள் பெருகிக்கொண்டே போகின்றது.

சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது.

இன்னும் ஒரு மோசமான, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிராத நோய் ஆட்டிசம் ( சதை பிறழ்வு நோய்) இந்த சீமை மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து தருவதால் அவர்களது உடலையும், மூளையையும் ஒரு சேர தாக்குகின்ற கொடிய நோய் ஆகும்.

சீமை மாட்டுகளின் உடலில் ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் சம நிலையில் இல்லை. பெரும்பாலும் பெண் (கிடாரிகள்) மாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஊசிகள் மூலமே நடைபெறுவதினாலும், அவைகளில் ஆண் (காளை) மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மந்தமானதாகவும், பசு மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மிகுதியாகவும் உடையதாகவும் உள்ளது.

இது போன்ற குறைபாடுள்ள சிமை மாட்டுப் பாலை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய், கர்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.

சீமை மாட்டுப் பால் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் போல. அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டிற்கு வந்த புதிதில் சரிவிகிதமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய கால கட்டங்களில் தெரியவில்லை. தற்பொழுது நம் நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஒழிந்து, சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோய்களின் பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.

எனவே முடிந்தால் நாட்டுப் பசுவின் பாலை அருந்துங்கள், அல்லது தற்பொழுது கிடைத்து வரும் சீமை மாட்டுப் பால், பால் பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.

Editor's Choice

உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தநிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த வாரம் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் ஷாங்காய் நகரில் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஷி ஜென்ஹூவாவை நேரில் சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ‌ ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.

அமெரிக்கா மற்றும் சீனா காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன. இந்த பருவநிலை பிரச்சினை தீவிரத்தன்மை மற்றும் அவசரத்துடன் கவனிக்கப்பட வேண்டும். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன‌‌. அத்துடன் குறைந்த கார்பன் ஆற்றலுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்கு நிதியளிக்க இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல தரப்பு செயல்முறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன.

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டை இரு நாடுகளும் எதிர்நோக்குகின்றன.

இதனிடையே வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பதும், இதில் கலந்து கொள்ளும்படி சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக தலைவர்கள் 40 பேருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அமெரிக்காவும், பிற நாடுகளும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் தேசிய இலக்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Editor's Choice

இங்கிலாந்தில் நிக் ஜேம்ஸ் என்ற நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த சில ஆப்பிள்களுக்கு பதிலாக ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுகாடிப்போனார்.

” நாங்கள் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தோம், ஆனால், ஒரு ஆப்பிள் ஐபோன் கிடைத்தது! என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! ” என்று ஜேம்ஸ் கூறினார்.

டெஸ்கோ மொபைல் என்ற நிறுவனம் விளம்பர உத்தியாக “super substitute”  என்ற  விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு  ‘click and collect’  என்ற பரிசு திட்டத்தின் கீழ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களது ஆர்டர்களுக்கு பதிலாக, வேறு விலை உயர்ந்த பொருளை பரிசாக அனுப்பி வைத்தது. 

"டெஸ்கோ மொபைல் ஏப்ரல் 18 வரை மொத்தம் 80 பொருட்களை ஒரு சில கடைகளில் கொடுத்துள்ளது. வெற்றியாளர்கள் குலுக்கல்  முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், மேலும் ஒரு “super substitute”, அதற்கு பதிலாக வேறொரு விலை உயர்ந்த பொருளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற நீங்கள் சில பொருட்களை வாங்க வேண்டும்,” என்று இந்த பரிசு திட்டம் குறித்து அந்த நிறூவனம் விளக்கியுள்ளது.

’சூப்பர்மார்க்கெட் மற்றும் மொபைல் உலகங்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு ஆச்சரியமான விஷயங்கள் நிகழக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்காக இந்த பரிசு திட்டம் ஏற்படுத்தப்பட்டது” என்று டெஸ்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களில் சிலருக்கு ஏர்பாட்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி சாதனங்கள் ஆகியவற்றை பரிசாக பெற்றனர்.

Editor's Choice
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், வரும் 20ம் தேதி இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
 
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
 
மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
 
எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
 
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
 
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
 
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
 
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.
 
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
 
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.
 
*  அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
 
* அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
 
* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
 

 
* கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
 
* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனைசுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
 
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக/தேநீர் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
 
* கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். 
 
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள்அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
Editor's Choice

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை கொலை செய்வதாக மிரட்டியதாக அமெரிக்க மாகாணமான  புளோரிடாவில், 39 வயது செவிலியர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உளவுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது

பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை அமெரிக்காவின் துணை அதிபரை கொலைசெய்வதாக பெல்ப்ஸ் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார் என்று புளோரிடாவின் அமெரிக்க தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள தனது கணவருக்கு பெல்ப்ஸ் வீடியோக்களை அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மீது வெறுப்பை உமிழும் வகையில் அவர் பேசுவதைக் காணலாம்.

ஆனால், கைது செய்யப்பட்ட பெல்ப்ஸ் இது பற்றி கூறுகையில், அவர் துணை அதிபராக பதிவியேற்றுக் கொண்ட போது தான் அவர் மீது கோபம் கொண்டதாகவும், இப்போது அவர் மீது கோபம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.

Editor's Choice

கியூபா கம்யூனிஸ்ட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ராவுல் காஸ்ட்ரோ, 89, அறிவித்துள்ளார். இதன் மூலம் கியூபா கம்யூ., கட்சியில், 60 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக, காஸ்ட்ரோ குடும்பம் சாராத ஒருவர், தலைவராகும் சூழல் உருவாகியுள்ளது.

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கியூபாவில், ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இங்கு, தலைநகர் ஹவானாவில், ஆளும் கம்யூ., கட்சி மாநாடு நடந்தது. இதில், ராவுல் காஸ்ட்ரோ, ''கட்சி தலைவர் என்ற முறையில், கியூபாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட திருப்தியுடன், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, பதவி விலக முடிவு செய்துள்ளேன்,'' என, தெரிவித்தார்.

அவர் பேச்சு, உடனடியாக, கியூபா, 'டிவி'யில் ஒளிபரப்பானது. புதிய தலைவர் யார் என்பதை, ராவுல் காஸ்ட்ரோ தெரிவிக்கவில்லை. எனினும், 2019 முதல், கியூபா அதிபராக உள்ள, மிகல் டையஸ் கேனல், 60, கம்யூ., கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 1959ல், பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படை, கியூபாவின் சர்வாதிகாரி, புல்ஜென்சியோ பட்டிஸ்டாவை விரட்டி, ஆட்சியை கைப்பற்றியது. 1965ல், பிடல் காஸ்ட்ரோ, கியூபா கம்யூ., கட்சி தலைவர்ஆனார். அதன்பின் கியூபாவின் அசைக்க முடியாத சக்தியாக, 2006ல் நோய்வாய்ப்படும் வரை திகழ்ந்தார். துவக்கம் முதல் பிடல் காஸ்ட்ரோவுக்கு பக்கபலமாக, அவரது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ விளங்கி வந்தார்.

பிடல் காஸ்ட்ரோ, 2008ல், கியூபா அதிபர் பதவியை, ராவுலிடம் ஒப்படைத்தார். அதன்பின், 2011ல், கம்யூ., கட்சி தலைவர் பொறுப்பையும், ராவுல் ஏற்றுக் கொண்டார். 2016ல், பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்.ராவுல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா உடன் நட்பு பாராட்டினார். அதனால், கியூபா மீதான பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.

கியூபாவில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை, ராவுல் கொண்டு வந்தார். எனினும், தற்போதுள்ள உணவுப் பஞ்சம், மக்களிடையே அதிகரித்துள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு போன்றவை, ஆளும் கட்சி தலைவருக்கு சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கம் 41 / 90