Editor's Choice

தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நோய் கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 610) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்  தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முக கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14270) அபராதம் விதித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக பாங்காக் கவர்னர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.
Editor's Choice

கடற்கரையில் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கும் சங்கைப் பார்த்தவுடன், அதைக் காதருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படியே கடல் அலை ஓசை போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் நாம் இருந்தாலும் கூட, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது அதே கடல் அலை சத்தம் தான் கேட்கும். காலங்காலமாகக் கடலிலிருந்து வந்ததால் தான் சங்கிலிருந்து அலை ஓசை சத்தம் வருகிறது என்று கூட சில சமயம் நினைத்திருப்போம். உண்மையில் அந்த சத்தத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சங்கில் கடல் அலை ஓசை கேட்பதற்குக் காரணம், சங்கு கடலிலிருந்து வந்தது என்பது கிடையாது. தான் இருந்த இடத்தின் ஒலியைக் காலம் முழுக்க வெளிப்படுத்தும் வினோத சக்தி எதுவும் சங்கிடம் இல்லை. சரி அப்போது உண்மையான காரணம் என்ன?

சங்கிலிருந்து வரும் இந்த சத்தத்திற்குக் காரணம் என்று ஆரம்பத்தில் இரண்டு விளக்கங்கள் நம்பப்பட்டது. அதில் ஒன்று, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது, நம் காதில் உள்ள இரத்த நாளங்களில் பாயும் இரத்த ஓட்டத்தின் சத்தம் என்ற விளக்கம். சரி அது உண்மை தானா என்பதை அறிய வழக்கம் போல் விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது அது உண்மை இல்லை என்பது விளங்கியது. இரத்த ஓட்டத்தின் சத்தம் என்பது உண்மையாக இருந்தால் ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்தவுடன் சங்கை தன் காதருகில் வைக்கும் போது அந்த சத்தம் அதிகமாகக் கேட்க வேண்டும்.காரணம் உடற்பயிற்சி செய்தவுடன் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் எந்த மாற்றமும் இருக்காது. உடற்பயிற்சிக்கு முன் எப்படி சத்தம் இருந்ததோ அப்படி தான் உடற்பயிற்சிக்குப் பின்னும் இருக்கும்.

சங்கின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து இந்த சத்தத்தில் சில வேறுபாடுகள் இருக்கும் !!

சங்கின் உள்ளே செல்லும் காற்று தான் இப்படி ஒரு சத்தத்தை எழுப்ப வேண்டும் என்ற அனுமானமும் பலரால் நம்பப்பட்டது. ஆனால் அதுவும் உண்மை அல்ல. ஏனெனில் ஒரு ஒலி ஊடுருவா அறையில் (Sound Proof Room) நாம் நின்று கொண்டு சங்கை காதருகில் வைத்தால், சங்கிலிருந்து எந்த சத்தமும் கேட்காது. சங்கில் கேட்கும் சத்தத்திற்குக் காற்றோ அல்லது காதருகில் பாயும் இரத்த ஓட்டமோ தான் காரணம் என்றால் ஒலி ஊடுருவா அறையிலும் சத்தம் கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கு அறைக்கு வெளியில் இருக்கும் ஒலியால் தான் உள்ளே ஊடுருவ முடியாது. மற்றபடி கூட எல்லா இடங்களைப் போலவே காற்றும், நம் உடம்பில் பாயும் இரத்த ஓட்டமும் இருக்கும். ஆனால் ஒலி ஊடுருவா அறையில் சங்கில் எந்த சத்தமும் கேட்பதில்லை. எனவே சங்கில் செல்லும் காற்றோ இரத்த ஓட்டமோ சத்தத்திற்குக் காரணம் அல்ல என்பது தெளிவாகிறது.

இந்த சத்தத்திற்கான உண்மையான காரணம் சுற்றுப்புறத்தில் உள்ள சத்தம் தான். சங்கு நம்மைச் சுற்றி இருக்கும் ஒலி அலைகளை அப்படியே கிரகித்துக் கொள்கிறது. வெளியிலிருந்து சங்குக்குள் வரும் ஒலி அலைகள் சங்கின் கடினமான பரப்பைத் தாக்கும் போது பல பிரதிபலிப்புகள் ஏற்பட்டு மோதி உட்குழிவான பகுதியில் ஒத்ததிருந்து எதிரொலிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் அதிர்வுறும் ஒன்று மற்றொன்றை அதே அதிர்வெண்ணுடன் அதிர்வுறத் தூண்டுவது ஒத்ததிர்வு (Resonance) எனப்படும். பொதுவாக ஒரு பொருள் அதிரும் போது அது ஒலியை ஏற்படுத்தும். அது ஒரு பென்சிலை தரையில் போடும் போது வரும் அதிர்வோ அல்லது ஒரு வயலின் கம்பியை இழுத்து உருவாகும் அதிர்வோ, எதுவாக இருந்தாலும் அது ஒரு ஒலியை ஏற்படுத்தும். அதே சமயம் அவை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் அல்லது அதிர்வெண்களின் தொகுப்பில் அதிர்வுறும். அதே போலச் சங்கிற்கும் அது அதிரும் ஒரு இயற்கையான அதிர்வெண் தொகுப்பு இருக்கும்.

சங்கின் வடிவம் அதை ஒரு ஒத்ததிர்வு அறையாக செயல்பட வைப்பதால், சங்கு சுற்றுப்புற சத்தத்தின் ஒலிபெருக்கியாகச் செயல்படுகிறது !!

சங்கின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து இந்த சத்தத்தில் சில வேறுபாடுகள் இருக்கும். அதே போல அதிக ஒலி அல்லது இரைச்சல் உள்ள இடத்தில் நின்று கொண்டு சங்கைக் காதருகே கொண்டு சென்றால் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கும்.

சங்கின் அளவு பெரியதாக இருந்தால் ஒலி அலைகள் பல அதிர்வுகளுக்கு உள்ளாகி அதன் பிறகே கேட்கும். அதுவே சிறிய சங்கில் சில அதிர்வுகளை மட்டுமே ஒலி அலைகள் உள்ளாகும். அதனால் திரும்பி வரும் ஒலி சற்று அதிக சத்தமாக இருக்கும். அதனால் தான் பெரிய சங்கை விடச் சிறிய சங்கில் ஒலி அதிகமாகக் கேட்கும்.
சங்கைக் காதை ஒட்டி வைக்கும் போது கேட்பதை விடச் சிறு இடைவெளி விட்டு வைத்தால் தான் சத்தம் அதிகமாகக் கேட்கும். சங்கைக் காதை ஒட்டி இறுக்கி வைக்கும் போது உள்ளே அதிக ஒலி அலைகள் நுழைய முடியாது. அதனால் சத்தம் மிக மிகக் குறைவாக இருக்கும்.

கடற்கரை போன்ற இரைச்சல் உள்ள இடம் என்றில்லாமல் பெரிதாகச் சத்தம் இல்லாத அறையில் கூட சங்கிலிருந்து சத்தம் கேட்கும். இதற்கு காரணம் உண்மையில் அங்கும் குறைந்த அளவுள்ள ஒலி இருக்கும் என்பதே. அதாவது காற்று, மின்சார ஒலி, தொலைதூர போக்குவரத்து இரைச்சல், எனச் சுற்றி இருக்கும் எல்லாம் சேர்ந்த கலவை ஒலி. ஆனால் இந்த ஒலிகளை நம் காதால் கேட்க முடியாது. இது எங்கும் நிறைந்திருக்கும் ஒலி என்பதால் நம் மூளை அதைத் தவிர்த்து விடும்.

உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கும் இந்த சத்தத்தைக் கேட்க சங்கு தான் தேவை என்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் காலியான ஒரு காபி கப்பைக் காதருகே வைத்துக் கேட்டால் கூட சங்கிலிருந்து கேட்கும் அதே சத்தம் தான் கேட்கும். காதிலிருந்து கப் இருக்கும் கோணம் மற்றும் தூரத்தைப் பொறுத்து இந்த சத்தத்தின் அளவு வேறுபடும். அதே போல காலியான கிண்ணங்கள், காலி பாட்டில்கள் ஏன் நம் உள்ளங்கையை கப் போன்ற வடிவத்தில் கூப்பி வைத்து காதருகில் வைத்தால் கூட இந்த சத்தம் கேட்கும். ஆனால் இவைகளை விட சங்கின் உட்குழிவான விசித்திர வடிவம் இந்த சத்தத்தை இன்னும் அதிகமாகக் கேட்க வைக்கும். மொத்தத்தில் சங்கில் இருந்து நாம் கேட்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கும் பின்னணி ஒலியில் உள்ள சில அதிர்வெண்களின் பெருக்கம் தான்!!

Editor's Choice

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் SEBI நிறுவனத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அங்கு Whole Time Member பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SEBI
பணியின் பெயர் Whole Time Member
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SEBI பணியிடங்கள் :

Whole Time Member பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Whole Time Member வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

SEBI கல்வித்தகுதி :

இப்பணியிடத்திற்கு திறன், நேர்மை, சிக்கல்களைக் கையாள்வதில் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல், நிர்வாகம் போன்றவற்றில் நல்ல திறனுடன் முன் அனுபவமும் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

ஊதியமாக அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SEBI தேர்வு செயல்முறை :

Merit அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Editor's Choice

வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மனம் தளராமல் போராட பல பிரபலங்கள் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரருமான டுவைன் பிராவோ, கொரோனாவுக்கான ஒரு விழிப்புணர்வு பாடலை பகிர்ந்துள்ளார்.

கொரோனா காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த அவர் எடுக்கும் முதல் முயற்சி அல்ல இது. கடந்த ஆண்டும், கொரோனா தொற்று பரவியிருந்த சூழலில், பிராவோ மக்களை மனம் தளராமல் இருக்கக்கோரி ஒரு பாடலை உருவாக்கி அதைப் பகிர்ந்தார். தற்போது கொரோனாவின் கோரத் தாண்டவம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பிராவோ மீண்டும் தனது அந்த பாடலை பகிர்ந்துள்ளார். 

IPL-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ்  கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில், தனது பங்களிப்பை அளித்துள்ளார். 

இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொள்ள உதவ, 'பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு' 50,000 டாலர் நன்கொடை அளிப்பதாக பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். IPL போட்டிகள் தொடர்ந்து நடப்பதை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இந்த கடினமான நேரத்தில் இந்த போட்டிகள் மக்களுக்கு 'சில மணிநேர மகிழ்ச்சியை' அளிக்கின்றன என அரசு நம்புவதாகவும் தான் அறிந்து கொண்டதாக கம்மின்ஸ் தெரிவித்தார். 

கம்மின்சைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீயும் கொரோனா பிடியில் சிக்கியுள்ள மக்களுக்காக, ஆக்ஸிஜன் வாங்க உதவ, 41 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியா தனது இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார். தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சியில் இருந்தபோதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் தன் மீது அபார அன்பையும் பாசத்தையும் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Editor's Choice

மெட்ராஸ் பல்கலைக்கழகம் Project Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 03.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் யூனிவர்சிட்டி காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகத்தில் Project Fellow பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

யூனிவர்சிட்டி கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்லைக்கழத்தில் இருந்து M.Sc., Computer Science/MCA/M.Sc., Nanoscience முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யூனிவர்சிட்டி தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய சி.வி.,யை தொடர்புடைய சான்றிதழ்கள் நகல்களுடன் The Group Leader & Principal Investigator, Department of Statistics, University of Madras, Chepauk Campus, Chennai என்ற முகவரிக்கு 03.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Editor's Choice

கொரோனா காலத்தில் ஆன்லைன் வங்கி மற்றும் பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன. இது பல நன்மைகள் இருக்கும் அதே சமயத்தில் தீமைகளும் உள்ளன. ஆன்லைனில் மோசடி செய்யும் ஹேக்கர்கள் வங்கி போன்ற URL ஐ உருவாக்குகிறார்கள். இதற்குப் பிறகு, அந்த வங்கியின் பெயரை உள்ளிடும்போது, கவனக்குறைவால், அந்த வங்கியின் வலைதளம் என நினைத்து, அதனுள் சென்றால், உங்கள் கணக்கில் இருக்கும் பணம் பறி போகலாம். எனவே, கூகிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வங்கியைப் பற்றிய தகவல்களை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்தவொரு கஸ்டமர் கேர் எண் வேண்டும் என்றாலும்,  கூகிளில் தேடுகிறோம். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மோசடிக்கு பலியாகின்றனர். ஹேக்கர்கள் நிறுவனத்தின் போலி வலைத்தளத்தை உருவாக்கி, அவர்களின் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி தகவல்களை பதிவிடுகிறார்கள், நாங்கள் தேடிய தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறோம் என்று வலையை விரிக்கிறார்கள். எனவே, எப்போதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை. நோய் குறித்த தகவல்களை சேகரிப்பது தவறல்ல, ஆனால் கூகிளில் காட்டப்படும். எந்தவொரு வலைத்தளத்தில் பரிந்துரைப்படி,  சிகிச்சை அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கிறது. அனைத்து திட்டங்கள் பற்றிய தகவல்களும் இணையத்தில் கிடைக்கிறது. இந்த திட்டங்களுக்கு அரசின் சொந்த வலைத்தளம் உள்ளது, அந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் அதில் நீங்கள் பெறலாம். பெரும்பாலும் இணையத்தில் நடக்கும் குற்றவியல் மோசடிகள் அரசாங்க வலைத்தளங்கள் போன்ற போலி வலைத்தளங்களை பயன்படுத்துவதால் நடக்கின்றன. இதை நாம் தவிர்க்க வேண்டும்.

பக்கம் 36 / 90