Editor's Choice

ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவடைந்த பின்னர் 1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சுதந்திரம் பெற்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஓடும் ஆறு தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வந்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேவும் எல்லை பிரச்சினையும் தீர்க்கப்படாமல் இருந்து வந்தது.

நீர்நிலையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டை ஏற்பட்டது. அந்த சண்டை தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனைக்கு வழிவகுத்தது.
 
இரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய கிர்கிஸ்தான் நாட்டின் பேட்கன் பகுதியில் இன்று மோதல் வெடித்தது. இரு நாடுகளின் வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் அரங்கேறியது.
 
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கிர்கிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்,150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மோதலில் தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் வசித்துவந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
 
இரு நாட்டு எல்லையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல் போருக்கு வழிவகுக்காமல் தடுக்கும் வகையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  
Editor's Choice

டிராவிட்டின் சுள்ளென்ற கோபத்திற்குப் பிறகு, இளைஞர் குழு ஒன்றின் கிரிக்கெட் புனைவுகள் இணையத்தில் வைரலாகின்றான.

இதுவரை யாரும் பார்த்திராத ராகுல் டிராவிடின் ‘angry’ அவதாரத்திற்குப் பிறகு, வெங்கடேஷ் பிரசாத்தின் புதிய பாய்பேண்ட் “வெங்கபாய்ஸ்” இணையத்தை புயலாய் தாக்கியுள்ளது. 'Meet the Venkaboys' விளம்பரத்தில், மணீந்தர் சிங், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் சபா கரீம் ஆகியோருடன் வெங்கடேஷ் பிரசாத் ஒரு பாடலை பாடுகிறார்.

பெங்களூரை தளமாகக் கொண்ட கிரெடிட் கார்டு பில் கட்டணம் செலுத்தும் தளத்திற்கான விளம்பரத்தில் இடம்பெறும் நடிகர் ஜிம் சர்ப், மேடையில் வழங்கப்படும் வெகுமதிகளை "உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்" இடம்பெறும் பாய்பேண்டுடன் ஒப்பிடுகிறார். விளம்பரத்தில், "90 களில், நாங்கள் உண்மையான OG களாக இருந்தோம்" என்று "வெங்கபாய்ஸ்" பாடுவதைக் காணலாம்.

இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, "கிரிக்கெட் களத்தில் ஒரு பயிற்சியாளர்காக கேட்டிருக்கிறேன், தற்போது, களத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும்போது நீங்கள் பாடுவதைக் கேட்கிறேன். Venky bhai.... இது ஒரு பயணம்" என்று கவித்துவமான வரிகளால் Venky bhaiக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Editor's Choice
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் கனடாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காரணமாக தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கைகளும் சாதனை அளவை எட்டி வருகின்றன. கொரோனாவின் 2வது அலையைக் காட்டிலும் தற்போதைய பாதிப்பு 3 - 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போல உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைவதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடவசதி இல்லாமலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழியும் வீடியோக்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும் தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றன. தேவையான மருத்துவ உதவிகளையும், மருத்துவ தளவாடங்களையும் அனுப்பி வைத்து இந்தியா மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் நட்பு நாடான கனடாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி கொரோனாவிற்கெதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கஃலிபா, இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது குறப்பிடத்தக்கது.

Editor's Choice

இந்தியாவில் ஓவ்வொரு தேர்தலின் போதும் EVM என்பது பேசு பொருளாகிறது. ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில்  நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாறிய பின், காட்சிகள் மாறின. இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2-3 மணி நேரங்களிலேயே நிலவரம் தெரிந்து விடுகிறது. மாலைக்குள் முடிவுகளே வந்து விடுகின்றன. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட வளர்ந்த நாடான அமெரிக்காவே இதில் திணறுவதை பார்த்தோம். ஆனால், இந்தியாவில், தேர்தல் ஆணையம் இதனை சாத்திய மாக்கியுள்ளது. 

மின்னணு வாக்குபதிவு இயந்திரஙக்ள் என்பது,  ஸ்டாண்ட் அலோன் மெஷின் (Stand Alone Machine), அதாவது கால்குலேட்டரை போல், இதனை எதனுடனும், எதன் மூலமாகவும் இணைக்க முடியாத ஒரு கருவி.  இந்த கருவியை, வைஃபை (WiFi) , ப்ளூடூத் (Bluetooth) போன்றவற்றின் மூலம் ஹேக் செய்ய முடியாதபடி, தொழில்நுட்ப ரீதியாக, மிக வலுவான  பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனை ஹேக் செய்வது என்பது இயலாத காரியம். 

அது மட்டுமல்லாமல், VVPAT எனப்படும் வோட்டர் வெரிபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரைல் (Voter Verifiable Paper Audit Trail)  என்ற இயந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான் தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். இதில் சேகரிக்கப்படும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி , அந்த குறிப்பிட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் கணக்கிட்டு, இரண்டும் சரியாக உள்ள என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடியும்.

2019 தேர்தலுக்கு பிறகு, சில தொகுதிகளை ஆங்காங்கே ராண்டமாக தேர்ந்தெடுத்து, தேர்தல் ஆணையம் எண்ணிப் பார்த்ததில் வாக்கு எண்ணிக்கை மிக துல்லியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடுமையான வழிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றி, போட்டியிடும் வேட்பாளர்களின் உரிமையை பாதுகாக்க  இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. 

வாக்கு பதிவு முடிந்த பின், பூத் ஏஜென்டுகள் முன்னில்லையில்,  EVM பாதுகாப்பாக மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. 

தேர்தலில் (Election) போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்த தவறும் நடைபெறவில்லை என உறுதிபடுத்தப்படும்.

பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில்,  சீல் திறக்கப்படும். 

அதோடு, வாக்கு எண்ணிக்கை நடை பெறும் இடங்களுக்கு தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கும் ஒவ்வொரு டேபுளுக்கும் செல்ல அனுமதியுண்டு. எனவே முறைகேடு நடைபெற வாய்ப்பு ஏதும் இல்லை.

இதிலிருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டுவது வெறும் அரசியல் மட்டுமே என்பது தெளிவாகிறது.

Editor's Choice

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் சிக்கித் தவிக்கும் நிலையில், அடுத்தகட்டத்திற்கு உலகை எடுத்துச் செல்லும் முயற்சிகளும் பரிசோதிக்கப்படுகின்றன. 

இதன் அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாக இரண்டு நாள் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் பொது இடங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்கலாம் என்பதற்கான ஒரு முன்முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இங்கிலாந்தின் லிவர்பூலில் இரவு விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு விருந்துக்கு வந்தனர். COVID-19 தொற்றுநோய் இங்கிலாந்தில் குறைந்து வருவதால் வெகுஜன பார்வையாளர்களின் நிகழ்வுகளை மறுதொடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த முன்முயற்சி பரிசோதனை (pilot scheme) மேற்கொள்ளப்பட்டது.

18 முதல் 20 வயதுடைய சுமார் 3,000 பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள், முகக்கவசங்களை அணியாமல் warehouse ஒன்றில் ஒன்றுகூடி இசைக்கு ஏற்ப நடனமாடினார்கள்.

லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் (London’s Wembley stadium) ஞாயிற்றுக்கிழமை 8,000 பேர் கலந்து கொள்ளவிருக்கும் கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியும் இந்த பைலட் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

சமூக இடைவெளி மற்றும் காற்றோட்டம் தொடர்பான அணுகுமுறைகள்  கொரோனா வைரஸின் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவதானிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வுகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை பயன்படுத்துவார்கள்.

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் லாக்டவுன் முழுமையாக நீக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தனது பெரும்பாலான ஐரோப்பியர்களை வேகமாக COVID-19 தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுத்துவருகிறது. இதுவரை இங்கிலாந்தில் 127,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளது. இது உலகளவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பட்டியலில் ஐந்தாவது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏ.சி. உற்பத்தியாளர்கள் குளிர்சாதனங்களின் இயல்பு வெப்பநிலையை 24 டிகிரி செல்சியல் அளவில் வைத்திருக்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இயல்பு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.

20 டிகிரி வெப்பநிலையில் இருந்து 24 டிகிரி வெப்பநிலையை உயர்த்தும்போது ஒவ்வொரு டிகிரிக்கும் சுமார் 6 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏ.சியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் வெப்பநிலையை ஒரே அளவில்தான் பராமரிக்க வேண்டும். ஏ.சியை அதன் இயல்பு வெப்பநிலையில் தேர்வு செய்தால் 24 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.

டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதனால் ஏ.சி.யை 10 டிகிரி குறைவாக வைப்பது சிறப்பானது. ஏனெனில் உடலின் வெப்பநிலை சராசரியாக 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதற்கும் குறைவான வெப்பநிலை நிலவும் அறைகளில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை நிலவும். ஏ.சியை இயல்பு வெப்பநிலையில் இருந்து குளிர்ச்சிக்காக குறைக்கும் ஒவ்வொரு டிகிரிக்கும் 6 சதவீதம் அதிக மின்சாரம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆதலால் ஏ.சியை 18 டிகிரி வெப்பநிலைக்கு குறைப்பதற்கு பதிலாக 23-24 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றிவிடுவது பலன் தரும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் இந்த வெப்பநிலை கூட நன்றாக இருப்பதை மனம் ஏற்றுக்கொண்டுவிடும்.

குளிர்சானங்களை உபயோகிக்கும்போதெல்லாம் அறையின் கதவுகள், ஜன்னல்கள் இறுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறாது. ஜன்னல்களில் திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். அது சூரிய வெப்பம் அறைக்குள் நுழைவதை தடுத்துநிறுத்திவிடும்.

பிரிட்ஜ், டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் அதிக வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டவை. அதனால் குளிர்சாதன பெட்டி, ஏர்கூலரை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை அணைத்துவிடுவது நல்லது. அறைக்குள் குளிர்ச்சி நிலவிய பிறகு அவற்றை மீண்டும் ஆன் செய்துவிடலாம்.

உடல் குளிர்ச்சியில் நடுங்கும் வரை ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது. இரண்டு மணி நேரம் உபயோகித்துவிட்டு பிறகு அணைத்துவிடலாம். பின்னர் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் உபயோகிக்கலாம். அது அறைக்குள் போதுமான வெப்பநிலை நிலவுவதற்கு வழிவகை செய்யும். மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

ஏ.சி.யை ஆன் செய்ததும் நிறைய பேர் மின் விசிறியை அணைத்துவிடுவார்கள். மின் விசிறி யையும் உபயோகிக்கும்போது குளிர்ந்த காற்று அறையின் மூலைமுடுக்கெல்லாம் சட்டென்று பரவிவிடும். அறையும் விரைவாகவே காற்றோட்டமான சூழலுக்கு மாறிவிடும். குளிர்ச்சி நிலவ தொடங்கியதும் மின்விசிறியை அணைத்துவிடலாம். அறையில் உள்ள சூடான காற்றும் வெளியேறிவிடும்.

ஏ.சி.யின் துவாரங்கள், உள்பகுதிகளுக்குள் படர்ந்திருக்கும் அழுக்குகளை குறிப்பிட்ட இடைவெளியில் அப்புறப்படுத்த வேண்டும். அது குளிர்ந்த காற்று வெளிப்படுவதற்கும் இடையூறாக அமையும். அவற்றை அகற்றுவதன் மூலம் ஏ.சி.யின் பயன்பாடு 5 முதல் 15 சதவீதம் குறையும்.

பக்கம் 32 / 90