Editor's Choice

விருஷ்கா என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் தற்போது கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

தங்கள் ரசிகர்கள் கொரோனா நிவாரண பணிகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.  

சமூக ஊடகங்களில் கோஹ்லியும் அனுஷ்காவும் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்,  இந்தியாவில் கோவிட் -19 துரிதமாக பரவுவது குறித்து தங்கள் கவலைகளை பகிர்ந்துக் கொண்டனர்.

"கோவிட் -19 பரவத் தொடங்கியதில் இருந்து, நம் நாடு கடுமையான கால கட்டத்தை எதிர்கொண்டுள்ளது. நமது சுகாதார அமைப்புகளுக்கு சவால் எழுந்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது இந்தியாவுக்கு உதவ வேண்டும்" என்று கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார். 

"அனுஷ்காவும் நானும் கெட்டோவில் (Ketto) கோவிட் -19 நிவாரண நிதி திரட்டுவதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினோம், உங்கள் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அது அளவில் மிகவும் குறைந்ததே."

"COVID-19 க்கு எதிரான போரை நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால்" வெல்ல முடியும் என்று தங்கள் ரசிகர்களுக்கு உறுதியளித்த கோஹ்லி மற்றும் அனுஷ்கா "தங்கள் இயக்கத்தில் இணைய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

"ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம், ஆனால் இதை எதிர்த்துப் போராட உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. எங்கள் இயக்கத்தில் நீங்கள் அனைவரும் சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டைப் பாதுகாப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க எங்கள் பங்கைச் செய்வோம். நன்றி. இந்த பதிவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்" என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கோஹ்லி எழுதினார்.

"இந்தியாவுக்கு கொரோனா பரவல் மிகவும் கடினமாக இருக்கிறது, மேலும் நம் நாடு இப்படி பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என் வீடியோவில் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

Editor's Choice

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.‌ இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கின. இந்த சூழலில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அதன்படி டிரம்ப் தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டிரம்பின் ஆலோசகர் ஜாசேன் மில்லர் முன்னர் கூறியதுபோல இது ஒரு சமூக வலைத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வேலையிழந்து, தங்க இடமும் இன்றி, குப்பை தொட்டிகளில் உணவைத் தேடி, கூலித் தொழிலாளி ஒருவர், பெங்களூரில் அலைவது, பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பவரல் காரணமாக, மாநிலத்தில், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஆலூர் மாவட்டத்தில், விவசாய பண்ணை ஒன்றில், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ராஜு. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அவருக்கு வேலையில்லை; சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல், தங்குவதற்கு இடமும் இன்றி பாதிக்கப்பட்டார். .

பணம் இல்லாததால், பட்டினி கிடந்த ராஜு, குப்பை தொட்டிகளில் உணவு இருக்குமா என, தேடி அலைந்தார். இதை பார்த்த சதீஷ் என்பவர், அவருக்கு உணவு வழங்கினார். இதன்பின், ராஜு தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஊரடங்கு முடிந்தபின், ராஜுவை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக, சதீஷ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், ஊரடங்கு காரணமாக வேலையின்றி, தங்க இடமும் இன்றி, பஸ், ரயில் நிலையங்கள், சாலையோரங்களில் பலர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தினமும் ஒரு வேளை உணவு வழங்கி வருகின்றனர்.

Editor's Choice

சுற்றுலா விசாவில் அமீரகம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை மந்திரியும், துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் பொது இயக்குனருமான ரீம் அல் ஹாஷெமி தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா பரவலில் வரும் 5 மாதங்களில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தையும், ஒரு தெளிவான நிலையும் வரும்.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதையும் நம்மால் காணமுடிகிறது. தடுப்பூசி என்பது அனைவரும் ஊக்குவிக்கும் விஷயமாக உள்ளது. எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இயல்பான சூழ்நிலையை மீட்கமுடியும் என நம்புகிறோம். எனவே நாட்டில் வசிப்பவர்கள், குடியிருப்பு விசா பெற்றவர்களை கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறோம். ஆனால் சுற்றுலா விசாவில் வருகை தருபவர்கள், பார்வையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை. அது குறித்த எந்த விதிமுறையையும் நாங்கள் அவர்கள் மீது விதிக்கவில்லை.

தற்போது துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ உலக கண்காட்சிக்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்கு வந்த போது பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இது மிக விரைவாக ஒரே நாளில் செய்யப்பட்ட பரிசோதனை ஆகும்.

பரிசோதனை முக்கியமானது. ஆனால் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது என்பதுதான் நோய் பரவலை தடுக்கும். நிச்சயமாக வருகிற அக்டோபர் 1-ந் தேதி திட்டமிட்டபடி உலக கண்காட்சியானது தொடங்கும். ரத்து செய்யப்பட வாய்ப்பு எதுவும் இல்லை.

உடல் நலம் மற்றும் உலக சுகாதாரம் ஆகியவற்றுடன் ஒரு சமநிலையை அடைவதற்கான முயற்சியை ஏற்படுத்தி வருகிறோம். வாழ்வாதாரங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் கொரோனா வைரசுடன் பொறுப்புடன் வாழ கற்றுக்கொள்வது அவசியம் என ரீம் அல் ஹாஷெமி  கூறினார்.

Editor's Choice

டிஜிட்டல் – அச்சு எனும் இரண்டு வகைப்பட்ட வாசிப்பு அனுபவங்களின் முதன்மையான வேறுபாடு என்னவென்றால் அச்சு வாசிப்பில் வாசிக்கும் போது நீங்கள் அந்த புத்தகத்தின் கனத்தையும் வார்த்தைகளின் நீளத்தையும் உணர்கிறீர்கள். அச்சு புத்தகத்தினுடனான நேரடியான தொடர்பு அந்த புத்தகத்தின் எழுத்து மற்றும் கருத்து ரீதியான வரைபடத்தை நமது மூளை உணருமாறு செய்கிறது. மேலும் நாம் என்ன வாசிக்கிறோம் என்பதை நின்று நிதானித்து புரிந்து கொள்வதற்கும் அச்சு புத்தகம் உதவுகிறது. மறுபுறத்தில் டிஜிட்டல் வாசிப்பு என்பது நமது கண்களுக்கு அதிக அழுத்தத்தையும் வேலையையும் கோருவதால் வாசிப்பு என்பது கடினமாகிறது.

இதன் பொருட்டே நவீன தொழில்நுட்பம் நமது கண்களுக்கு அதிக வேலையை கொடுக்காத வண்ணம் திரைகளை கண்ணுக்கினியதாக மாற்றி வருவதும் உண்மைதான். அதன்படி கிண்டில் (Kindle) வாசிப்பு கணினித் திரை வாசிப்பை விட மேம்பட்டதாக இருக்கிறது. அதில் கண்கள் வெண்திரை வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. மேலும் அதன் திரை கண்ணாடிக்கு பதில் வேறு ஒரு பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் ஒளியின் எதிர்விளைவு (ரிஃபிளக்சன்) என்பது நிகழ்வதில்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது.

எதை டிஜிட்டலில் வாசிக்க வேண்டும் எதை புத்தகத்தில் வாசிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் அதை ஆழமாக அசைபோட்டு படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில் இரண்டு வாசிப்பையும் முரண்படாமல் பயன்படுத்த முடியும்.

இந்த கட்டுரையை நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் தான் வாசிக்கிறீர்கள் ஆனால் இது உங்களிடம் மேலோட்டமான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ஆழமான அசைவுகளை ஏற்படுத்துகிறதா யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையை கணினி சாராமல் பிரிண்ட் அவுட் போட்டு படித்துப் பார்த்தால் இதன் உள்ளடக்கம் இன்னும் மேம்பட்ட அளவில் நம்மில் உள்ளிறங்கும் என்பது உண்மைதானே?

டிஜிட்டல் வாசிப்பை விட புத்தக வாசிப்பு தான் மேம்பட்டது என்ற கருத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்று நவீன உண்மையை மறுக்கிறதா? ஏனெனில் இதற்கு முன் பல துறைகளில் இந்த பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

இணையப் பத்திரிகைகள் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன என்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதன் பொருட்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளெல்லாம் விளம்பரங்களை இழந்து மக்களிடையே நன்கொடை பெற்று ஊடகத்தை நடத்தும் நிலையைப் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் புத்தக துறையில் மட்டும் அச்சுப் புத்தகம் மட்டும் அதிகம் இருப்பதும் வாசிப்பதும் சாத்தியமா?

இப்போதைய கணினி வாசிப்பும் இருவேறுபட்ட திறன்களை கோருகிறது. எதிர்காலத்தில் இது குறித்து நாம் ஒரு தெளிவான புரிதலை பெற முடியும். அதாவது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பின் போது எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பது போல இருக்காது,

வாசகர்கள் டிஜிட்டல் வாசிப்பு குறித்து சிக்கலான மனநிலையை உருவாக்கிக் கொள்வதில்லை. மேலும் அவர்களது பார்வையின்படி டிஜிட்டல் வாசிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு வாழ்க்கையை கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி என்கிறார்கள். இரு வேறுபட்ட வகைகளில் நாம் வாசிப்பது என்பது பிரச்சினை இல்லை. மாறாக எப்போது நாம் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

டிஜிட்டல் வாசிப்பு மட்டுமே அச்சு வாசிப்பை விட வேகமாக வாசிக்கக்கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அதே நேரம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும் பொருள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை டிஜிட்டலில் இருந்து அச்சில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது நல்லது. ஆகவே நாம் என்ன கற்கும் முறையை ஏற்கிறோம் என்பது எதை எப்படி கற்கப் போகிறோம் என்பதோடு தொடர்புடையது.

டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அது பேஸ்புக் ஆகவோ வாட்ஸ்அப் ஆகவோ அல்லது விவாதிக்கும் குழுமங்கள் ஆகவோ இருக்கலாம். இது குறித்து 180-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் 33 நாடுகளில் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

இதற்கான விடை என்பது வாசிப்பு என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இத்துறையில் இது குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட வரையறையை பொறுத்தே அமைகிறது. 

இதன்படி ஒவ்வொரு நாளும் நாம் மின்னஞ்சல்கள், அரட்டை செய்திகள், நடப்பு செய்திகள், அலுவலக ஆவணங்கள், பதிவுகள், விவாதங்கள் அனைத்தையும் படிக்கிறோம். சுவாரஸ்யமான முறையில் இசையும் சினிமாவும் கூட முற்றிலும் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதை ஒப்பிடும் போது பல நாடுகளில் டிஜிட்டல் புத்தகங்கள் என்பது ஒட்டுமொத்த இணைய உலகில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வாசிப்பின் அளவு அதிகரித்து வந்ததோடு தற்போது அது ஒரு முக்கியமான துறையாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

கிண்டில் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் தற்போது கிடைத்திருந்தாலும் அது இணையத்தோடு இணைக்கப்பட வில்லை என்றாலும் வாசகர்களைப் பொறுத்தவரை அச்சுப் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இதில் அடைவதில்லை.

மிக நீண்ட கட்டுரைகள் நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை படித்து உள்வாங்குவதற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு படிப்பதற்கும் பலரும் மாணவர்களும் கூட அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறார்கள். குறுகிய கட்டுரைகள் என்றால் அப்போது நிலைமை வேறாக இருக்கிறது

முதலில் நாம் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லையேல் இந்த அச்சு, டிஜிட்டல் பிரச்சினையே இல்லை. அப்படி படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு இரு வகைகளுக்கும் ஏற்ற மாதிரி நமது வாசிப்பு பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். 

Editor's Choice

சீலிங் பேன் விஷேச நாட்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் பொருள் என்பதால், அதில் தூசுகள் நிறைந்திருக்கும். உடனடியாக நீக்குவதற்கும் கடினமாக இருக்கும்.  அதனை ஈஸியாக சுத்தம் செய்யலாம்.

சீலிங் பேனை தூசுகள் பறக்காமல் அல்லது முகத்தின் மீது விழாமல் சுத்தம் செய்ய ஏதுவான ஒன்று தலையணை உறைகள். நீங்கள் சீலிங் பேனை சுத்தம் செய்ய முடிவெடுத்த பிறகு, வீட்டில் இருக்கும் பழைய தலையணை உறையை எடுத்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் முகத்தில் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பின்னர், சீலிங் பேனின் இறக்கைகளை தலையணை உறையால் கவர் செய்து கொள்ளுங்கள். இறுக்கமாக அந்த உறையை இறக்கையை சுத்தம் செய்யுமாறு பிடித்துக்கொண்டு மெதுவாக உறையை வெளியே இழுங்கள். தற்போது சீலிங் பேனின் இறக்கைகள் மீது இருக்கும் தூசிகள் தலையணை உறைக்குள் இருக்கும். சீலிங் பேனும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்.

 வேக்யூம் கிளீனரைக் கொண்டு உங்களுடைய சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். மிகப்பெரிய குச்சியில் வேக்யூம் கிளீனரை இணையுங்கள். முகத்தை நன்றாக மூடிக்கொண்ட பிறகு, வேக்மயூம் கிளீனரை பயன்படுத்தி சீலிங் பேனை சுத்தம் செய்யுங்கள். பேன் இறக்கைகள் மீது இருக்கும் தூசுகள் காணாமல் போய் இருக்கும்.

கிளீனிங் வேலை நடைபெறும் நாட்களில் சீலிங் பேன்களை சுத்தம் சாக்ஸ் செய்ய உபயோகமாக இருக்கும். முதலில் பழைய சாக்ஸ் ஒன்றை எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் நனைத்த பிறகு சாக்ஸை சீலிங் பேனின் இறக்கை மீது வையுங்கள். சாக்ஸின் இரண்டு முனைகளையும், தங்களது இரு கைகளால் பிடித்துக்கொண்டு மெதுவாக தூசியை சுத்தப்படுத்துங்கள். சீக்கிரம் சீலிங் பேன் சுத்தமாகும்.

காப் வெப் பிரஷ் அல்லது ஸ்பைடர் பிரஷ் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். இந்த பிரஷ் இருந்தால் சீலிங் பேனை ஈஸியாக சுத்தம் செய்துவிடலாம். ஏனென்றால், சிலந்தி வலையைப் போல் இந்த பிரஷ்ஷின் அமைப்பு ரவுண்டாக விரிதிருக்கும் என்பதால், ஒட்டடை மற்றும் தூசுகளை சுத்தம் செய்வதற்கு எளிமையாக இருக்கும். நீளமான குச்சி ஒன்றின் முனையில் இந்த பிரஷ்ஷைக் கட்டிவிடுங்கள். மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை துணியால் மூடிக்கொண்ட பிறகு, அந்தக் குச்சியை கொண்டு சீலிங் பேனின் இறக்கைகளை சுத்தம் செய்யுங்கள்.

பக்கம் 28 / 90