- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 174
இத்தாலியில் சாலை விபத்தில் இறந்த ஒரு நபரின் மனைவி மற்றும் காதலி என இருவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் வடகிழக்கில் டுரின் நகரைச் சேர்ந்த 39 வயது நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.
அந்த மனிதருடன் தொடர்ந்து உறவில் இருந்த பெண்ணுக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்றாலும், அவருக்கும் உரிமை இருப்பதாக காதலியின் வழக்கறிஞர் வாதிட்டார். தன்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவரை இழந்த பெண் இழப்பீடு பெற தகுதியுடையவர் என்று காப்பீட்டு நிறுவனத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நெடுஞ்சாலை விபத்தில் இறந்த நபரின் உடலை அடையாளம் காண, காதலியை போலீசார் அழைத்தனர். இந்த செய்தியை லா ஸ்டாம்பா செய்தித்தாள் உறுதி செய்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் விபத்தில் இறந்தவரின் மனைவி பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தார்.
இறந்துபோன அந்த நபர் வாரத்தில் மூன்று நாட்கள் காதலியுடனம், நான்கு நாட்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வு ஏற்பட்டதால், காப்பீட்டு நிறுவனம், மனைவிக்கும், காதலிக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்கியது.
இந்த செய்தி மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று அனைவரும் கருதுகின்றனர். இந்த வழக்கை மேற்கோள் காட்டி, எதிர்காலத்தில் இதுபோல் திருமணத்தை தாண்டிய உறவுகளுக்கும் இழப்பீடுகள் கொடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன.


















