தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.
விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். எஸ்பி ஜனநாதன் இயக்கும் அரசியல் த்ரில்லர் திரைப்படம் லாபம்.
படப்பிடிப்பின்போது மீடியாவுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், நாட்டின் நிலைமை சிறப்பாக இல்லை. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் போராடுகிறோம். மெதுவாகவும் படிப்படியாகவும் லாக்டவுன் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது என கூறினார்.
லாக்டவுன் இருந்தாலும், சில நகரங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் வீட்டில் தங்க அறிவுறுத்தினாலும், வயிற்றை நிரப்பவும், தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்ளவும், பிற காரணங்களுக்காகவும் மக்கள் வேலைக்கு செல்கிறார்கள். எனவே நான் வேலை செய்வது பெரிய விஷயம் இல்லை என்று ஸ்ருதி ஹாசன் சொல்கிறார்.
பணத் தேவை இருக்கும் வேறு எவரையும் போலவே எனக்கும் செலவுக்கு பணம் தேவை. அதனால் நான் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நான் முடிக்க வேண்டிய பிற தொழில்முறை கடமைகளையும் முக்கியமானதாக நினைக்கிறேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறினார்.
தனது சொந்த பில்களை செலுத்த வேண்டும் என்பதற்காக வேலை செய்வது அவசியம் என்கிறார் ஸ்ருதி.
நான் குழந்தை இல்லை எனது சொந்த விருப்பப்படி வாழ்வேன் என்று சொல்லும் ஸ்ருதி, "எனக்கு வரம்புகள் உள்ளன. என் அப்பா அல்லது மம்மி எனக்கு உதவி செய்யவில்லை" என்று கூறுகிறார். தான் வாழ்க்கையில் எடுத்த ஒவ்வொரு முடிவிற்கும் பெருமைப்படுவதாக சொல்கிறார்.
"நல்லதோ, கெட்டதோ, நானே நான் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளேன். தொற்றுநோய்க்கு ஒரு வீட்டை வாங்கினேன் எனவே, எனக்கு அடிப்படை நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளன" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.
லாக்டவுன் மற்றும் பல காரணங்களால் வெளியில் செல்வதும், பணியிலும் முடக்க நிலை ஏற்பட்டதால், ஸ்ருதிஹாசன் வீட்டிலேயே தங்கி தனது இசை ஆர்வத்தை பூர்த்தி செய்வது மற்றும் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.