Editor's Choice
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பூங்காவுக்கு செல்லும் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.    
 
இந்நிலையில், சாலைகள் வாகனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் எந்த வித பதற்றமும் இன்றி சாலைகளில் அங்கும் இங்கும் செல்கின்றன. 
 
10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்தன. இதை, அப்பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.
 
ஊரடங்கால் பூங்கா சாலைகள் எந்த வித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.    
Editor's Choice

இந்தியாவில்  Battlegrounds Mobile India முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக, உங்கள் Android போனில் நீங்கள் Google Play Store க்குச் சென்று PUBG Mobile இன் இந்திய பதிப்பைத் தேடி முன்பதிவில் கிளிக் செய்யவும். வாக்குறுதியளித்தபடி, கிராப்டன் உங்கள் கணக்கிற்கான முன் பதிவுசெய்தால் உடனடி வெகுமதிகளைப் பெறலாம்.

PUBG IP இன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான கிராப்டன் அதன் வெளியீட்டு தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற பல தகவல்கள் விரைவில் போர்க்களம் மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். சில ரசிகர்கள் ஜூன் 10 ஆம் தேதி போர்க்கள மைதானத்தை அறிமுகப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.

முதலில் Google Play Store க்குச் செல்லவும். அதில், Battleground மொபைல் இந்தியா அல்லது கிராப்டன் எனத் டைப் செய்து அதை Install செய்யவும். அதில், சரியான பயன்பாட்டில், விளையாட்டின் பெயரையும் கிராஃப்டன் என எழுதப்பட்ட டெவலப்பர் பெயரையும் காண்பீர்கள். முன்பதிவு பொத்தானைத் கிளிக் செய்யவும். பிறகு கிராப்டன் உங்கள் கணக்கில் நான்கு ரிவார்ட் பாய்ண்ட் சேர்ப்பார். இவை  Recon Mask, Recon Outfit, Celebration Expert Title மற்றும் 300 AG ஆகும். இந்த வெகுமதிகள் விளையாட்டுகள் வெளியான பிறகு  Mobile India கணக்கில் கிடைக்கும்.

இந்த நான்கு வெகுமதிகளைத் தவிர, ராயல் பாஸ், UC, ஸ்கின் மற்றும் ஆடைகளை உள்ளடக்கிய உங்கள் சரக்கு, இவை  Battlegrounds Mobile India வில்  கிடைக்கும்.

உங்களிடம் குறைந்தது 2 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் தொலைபேசி இருக்க வேண்டும். இது தவிர, நீங்கள் ஒரு நிலையான இணைய இணைப்பு வைத்திருக்க வேண்டும், இதன் மூலம் உங்கள் தொலைபேசியில் Battlegrounds Mobile India  பதிவிறக்கம் செய்து இயக்கலாம்.

Editor's Choice

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்று முதல் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய இ-பதிவு (E-Registration) முறை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இ-பதிவு முறையும், கடந்த வருடம் நடைமுறையிலிருந்த இ-பாஸ் (E-Pass) முறையும் முற்றிலும் வெவ்வேறு ஆகும். அதாவது இ-பாஸ் முறை ஆனது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் போன்ற விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள், ஒருவேளை தேவையற்ற காரணங்களாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.

இ-பதிவு முறை ஆனது முற்றிலும் வேறுபட்டது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயோ செல்ல வேண்டும் என்றால் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பின்பு அந்த நகலைஎடுத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த தடையுமின்றி செல்லலாம் என்று கூறப்படுகிறது. அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பயணம் செய்வோருக்கு தொற்று எற்பட்டால் அவர்களை உடனடியாக டிராக் செய்ய இந்த இ-பதிவு முறை உதவும் என்று கூறப்படுகிறது. 

எனவே அத்தியாவசிய பணிகாளன மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம், முதியோர்களுக்கான தேவை, நேர்காணல் போன்ற சில தேவைகளுக்கு இ-பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பதிவை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Editor's Choice
பொதுவாக கரப்பான் பூச்சிகள் வெதுவெதுப்பான, ஈரப்பதமான இடங்களையே விரும்பும். அதனால் தான் சில சமயங்களில் கரப்பான்பூச்சிகளை உணவிலும் காண முடிகிறது. மேலும் கரப்பான்பூச்சிகள் வீட்டுச் சமையலறை மற்றும் கழிவறையில் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் அதிகம் இருந்தால், அதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கரப்பான் பூச்சிகள் ஈ.கோலி பாக்டீரியாவை பரப்பி சால்மோனெல்லாவை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் அடிக்கடி கரப்பான்பூச்சியைக் காண நேரிட்டால், உடனே அதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். 
 
வீடு சுத்தமாக இருந்தால், கரப்பான்பூச்சி பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். கரப்பான்பூச்சிகளுக்கு அசுத்தமான இடங்கள் பிடிக்கும் என்பதால், குறிப்பாக உணவுக் குப்பைகளை போடும் குப்பைத் தொட்டியை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

கரப்பான்பூச்சிகளை விரட்ட ஒரு பாட்டில் ஹேர் ஸ்ப்ரே இருந்தால் போதும். அதற்கு அந்த ஹேர் ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சியின் மீது தெளித்தால், அதனால் நகர முடியாது. ஏனெனில் ஹேர் ஸ்ப்ரேயானது அதன் கால்கள் மற்றும் இறக்கைகளை ஒட்டிக் கொள்ளும். பின் அது மெதுவாக மூச்சு திணறி இறந்துவிடும். ஒருவேளை மீண்டும் நகர ஆரம்பித்தால், மறுபடியும் அதன் மேல் ஹேர் ஸ்ப்ரேயை அடியுங்கள்.
 
கரப்பான்பூச்சிகளுக்கு பிரியாணி இலையின் வாசனை பிடிக்காது. எனவே உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் எவ்விடத்தில் அதிகம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அவ்விடத்தில் பிரியாணி இலையை நொறுக்கிப் போடுங்கள். இதனால் அந்த வாசனைப் பிடிக்காமல் கரப்பான் பூச்சி வேறு இடம் தேடி வெளியே சென்றுவிடும்.
 
அம்மோனியாவின் வாசனை சற்று கடுமையாகத் தான் இருக்கும். இருப்பினும், இந்த வழியை முயற்சிக்கும் முன் மற்ற வழிகளை முயற்சித்துப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் வாசனையைப் பொருட்படுத்தாவிட்டால், அம்மோனியாவால் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். அதற்கு 2 கப் அம்மோனியாவை ஒரு வாளி நீரில் கலந்து, சுத்தம் செய்யுங்கள். இதனால் கரப்பான்பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

ஒட்டும் டேப் ட்ரிக் இது மிகவும் எளிமையானது. அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும். அதுவும் இரண்டு பக்கம் ஒட்டும் நல்ல தரமான டேப்புகளை வாங்க வேண்டும். பின் அதை ஒரு போர்டில் ஒட்டி, இரவு தூங்க செல்லும் முன் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் வையுங்கள். ஏனெனில் நாம் தூங்க சென்ற பின்பு தான் கரப்பான்பூச்சிகள் வெளியே வரும். எனவே இச்சமயத்தில் செய்வதே நல்லது. இதனால் மறுநாள் காலையில் கரப்பான்பூச்சி சிக்கியுள்ள அந்த போர்டை தூக்கி எறிந்துவிடலாம்.
Editor's Choice

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 31 ஆண்டுகள் சகோதரர்கள் இருவர் சிறையில் கழித்தனர்.

தென் அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் நடைபெற்ற சம்பவம் இது.  ஆனால் உண்மை வெளியானவுடன் செய்யாத குற்றத்துக்காக 31 வருட தண்டனை அனுபவித்தவரின் வழக்கறிஞர் சும்மா இருக்கவில்லை. 

தவறிழைக்காத சகோதரர்கள் இருவருக்கும் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

1983 ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஹென்றி லீ மெக்கோலம் (Henry Lee McCollum) மற்றும் அவரது ஒன்றுவிட்ட  சகோதரர், லியோன் பிரவுன் (Leon Brown) இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், சகோதரர்கள் இருவரின் ஐ.க்யூ மிகவும் குறைவு, அதாவது அவர்கள் திட்டமிட்டோ அல்லது அறிவார்ந்தோ செயல்பட முடியாதவர்கள்  (intellectually disabled).

குற்றம் சாட்டப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடைபெற்று இருவரும் கைது செய்யப்பட்ட போது ஹென்றியின் வயது 19, பிரவுனின் வயது15. இருவரும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மற்றொரு மனிதன் இருந்ததாக டி.என்.ஏ ஆதாரங்கள் (DNA evidence) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் இந்த சகோதரர்களின் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு மெக்கோலம் மற்றும் பிரவுன் சிவில் உரிமைகள் வழக்கைத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நடுவர் அவர்களுக்கு இழப்பீடு, சேதங்கள் மற்றும் வட்டி என மொத்தம் 84 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை வழங்கி தீர்ப்பளித்தார்.  

வழக்கில் வெற்றிப் பெற்றதில் சகோதரர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்த நடுவர் மன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Editor's Choice

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சரித்திரப் பதிவு செய்தார் ரபேல் நடால்.

உலக டென்னின்ஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் (Rafael Nadal), தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) தோற்கடித்து பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் 7-5, 1-6, 6-3 என்ற செட்களில் Novak Djokovicஐ வீழ்த்தினார் நடால். இந்த ஆண்டு இத்தாலிய ஓபன் 2021 பட்டத்தை வென்ற நடால், King of Clay என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்தார்.

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (Italian Open tennis series) ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை ஆட்டக்காரர்   ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடாலும் மோதினார்கள். 

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-1 கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிச். மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  

மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று 10 முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஓபன் பட்டப் போட்டிகளுக்கு முன்னதாக ரஃபேல் நடால் இந்த வெற்றியை பதிவு செய்திருப்பது, அவருக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது.

பக்கம் 19 / 90