Editor's Choice

அமெரிக்காவின் அலபா மாகாணத்தின் அரசு பள்ளிகளில் 28 ஆண்டுகளாக தொடர்ந்த யோகாவுக்கான தடை நீங்கியது. இந்தத் தடையை நீக்க முயற்சி எடுத்தவர் ஜெர்மி கிரே (Jeremy Gray) என்ற நாடாளுமன்ற உறுப்பினர். அதற்காக அவர் அலபாமா மாகாணத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

யோகா மீதான தடையை நீக்கக் கோரி அலபாமா மாகாணத்தில் அவர் கோரிக்கையை முன்வைத்தபோது, மக்கள் அவருக்கு ஆதரவாக சேரத் தொடங்கினர், இப்போது, மாகாண ஆளுநர்  தடையை ரத்து செய்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி, யோகாவை இனிமேல் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கலாம்; பயிற்சி செய்யலாம். ஆனால், மந்திரங்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

"யோகாவின் பயிற்சிகள், போஸ் மற்றும் உடலை வளைத்து பயிற்சி செய்யும் நுட்பங்களை மட்டுமே மாகாணத்தில் செய்யவேண்டும்" என்று சட்டம் கூறுகிறது. "மந்திர உச்சாடனங்கள், முத்திரைகள், ஹிப்னாடிக் நிலைகளின் தூண்டுதல், ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அதிலும் நமஸ்தே என வாழ்த்து சொல்வது வெளிப்படையாக தடைசெய்யப்படும்" என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி செய்யும் போது, அதன் அசல் சமஸ்கிருத பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது, போஸ்களை ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும் "downward dog" மற்றும் "the warrior"போன்ற பெயர்களில் அழைக்கலாம், சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்களை பயன்படுத்தக்கூடாது.

யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யும் குழந்தைகளை 'வேறு மதத்திற்கு மாற்றப்படலாம்' என்ற சந்தேகத்தில் இந்தத் தடை கடந்த 28 ஆண்டுகளாக நீடித்தது. பழமைவாதிகள் விதித்த தடை இது என்று ஜெர்மி கிரே (Jeremy Gray) கூறுகிறார். 

Editor's Choice
ஹாரி அண்மை காலமாக அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அரச குடும்பம் பற்றியும் அரச குடும்பத்தில் தனது வாழ்வு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசி வருகிறார். 
 
தனது தாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தாகவும், ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக நேர்ந்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் தனது மனைவி மேகன் சமூக ஊடகங்களின் துன்புறுத்தலுக்கு மத்தியில் தற்கொலை எண்ணங்களை கொண்டிருந்தபோது அரச குடும்பம் அவரை முற்றிலும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
 
 ‘‘நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்ந்தேன். எனது குடும்பம் எனக்கு உதவும் என்று நினைத்தேன். என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கேள்வியும், கோரிக்கையும், எச்சரிக்கையும் அது எதுவாக இருந்தாலும் மொத்த மவுனம் அல்லது மொத்த புறக்கணிப்பை சந்தித்தது” என்று அவர் கூறினார். 
 
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி தங்களது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice
விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். அதன் பலன்களை என்?
 
குடும்ப ஒற்றுமைக்கு உமா மகேஸ்வர விரதம்
 
கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். இந்த நாளில் சிவன்- பார்வதியை வழிபாடு செய்ய வேண்டும்.விரதமுறை: காலை உணவை மட்டும் தவிர்த்து, சிவாலயம் சென்று சிவ-பார்வதி தம்பதியரை வணங்கி வர வேண்டும்.

கல்வியில் சிறக்க விநாயக சுக்ரவாரம் விரதம்
 
வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டிற்குரிய தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார்.
விரதமுறை: பகலில் உணவை தவிர்த்து, இரவு நேரத்தில் பழம், இட்லி சாப்பிடலாம்.

எதிரி பயம் நீங்க மங்கள வாரம் விரதம்
 
தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வாழ்நாள் முழுவதும் செவ்வாய்க்கிழமை தோறும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரத நாளில் பைரவர் மற்றும் வீரபத்திரரை வழிபட வேண்டும்.
விரதமுறை: பகலில் ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
 
குழந்தை பாக்கியம் கந்த சஷ்டி விரதம்
 
ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான 6 நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார்.
விரதமுறை: முதல் 5 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, 6-வது நாளில் மூன்று வேளை உணவையும் நீக்கி விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட வேண்டும். அதன் பிறகு மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஒன்றை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
 
முதியோர் ஆசி கிடைக்க தை அமாவாசை
 
தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டுக்குரிய தெய்வம், சிவபெருமான்.
விரதமுறை: காலையில் உணவருந்தாமல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். மற்ற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்த முடியாமல் போனவர்கள், இந்த ஒரு நாளில் தர்ப்பணம் செய்தாலே, அதற்கான பலன் கிடைத்து விடும்.
 
 
Editor's Choice

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியசுக்கு அருகிலுள்ள சீஷெல்ஸ் தீவில் 61 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போது மீண்டும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சீஷெல்ஸ் தமிழ் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு தீவு நாடு. தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். கொரோனா சேதம் இங்கேயும் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தொகையில் 61.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே நீக்கப்பட்டன. நாட்டின் வருமானத்தில் 72 சதவீதம் சுற்றுலாவைப் பொறுத்தது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்தது.

சுற்றுலாவுக்கு அனுமதியளிக்கும் முன், அந்த நாட்டில் 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு, 9,184 ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,700 சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்; இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம், 'புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 33 சதவீதம் பேர் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி போடவர்கள். தடுப்பூசி போட்டும் தொற்றுக்குள்ளான யாரும் இறக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கடந்த வாரம் பள்ளிகளை மூடுவது, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட தடைகளை மீண்டும் விதித்துள்ளோம். மீண்டும் சுற்றுலாவுக்கு தடை விதித்தால், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். பொருளாதார நெருக்கடியை அரசால் சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice
மொரோக்கோ நாட்டின் அங்கமாக உள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு மொரோக்கோவில் செயல்பட்டு வருகிறது.
 
இந்த அமைப்பின் தலைவராக பஹ்ரிம் ஹலி என்பவர் செயல்பட்டு வருகிறார். மேற்கு சஹாரா பகுதி தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்ற நிலைப்பாட்டில் மொரோக்கோ உறுதியாக உள்ளது. 
 
இந்த நிலையில் பொலிசரியோ முன்னணி அமைப்பின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொரோக்கோவில் போதிய வசதி இல்லாததால் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கும் படி அந்நாட்டு அரசிடம் பஹ்ரிம் ஹலி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
அந்த கோரிக்கையை ஏற்ற ஸ்பெயின் அரசு பஹ்ரிம் ஹலி தங்கள் நாட்டில் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்ன்னர் சம்மதம் தெரிவித்தது. இதற்கு மொரோக்கோ அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், கடந்த சில நாட்களாக ஸ்பெயின் - மொரோக்கோ இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மொரோக்கோவுடன் எல்லையை பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில் கடல் மற்றும் தரை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைகின்றனர். கடலில் நீச்சல் அடித்தும், தரைவழியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை தாண்டியும் அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.
 
அவ்வாறு அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் விதமாக சியோட்டா நகரின் எல்லையில் ஸ்பெயின் தனது ராணுவத்தை களமிறக்கியுள்ளது. கடல் மற்றும் நிலம் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் அகதிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு மீண்டும் மொரோக்கோ நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
 
தற்போதுவரை ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள் 6 ஆயிரம் பேர் மொரோக்கோ நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், மொரோக்கோவில் இருந்து கடல்வழியாக ஒரு அகதி நீச்சல் அடித்து ஸ்பெயின் எல்லைக்குள் வந்துள்ளார். கடலில் நீச்சல் அடித்து ஸ்பெயின் கரையை வந்தடைந்த அந்த அகதி உடல் வலிமையிழந்து கடற்கரையில் சுருண்டு விழந்தார். 
 
அப்போது, அங்கு தன்னார்வு பணிகளை மேற்கொண்டிருந்த லூனா ரியஸ் தன்னார்வல பெண்மணி கடற்கரையில் விழுந்த அந்த அகதிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். மேலும், அந்த அகதியை அணைத்து ஆறுதல் கூறினார். அப்போது, அந்த அகதியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும், மொரோக்கோவில் இருந்து ஒரு அகதி தனது குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு கடலில் நீந்தி வருது போன்ற புகைப்படமும் வைரலாகி வருகிறது. 
 
பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக ஆப்ரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து கடல் மற்றும் நிலம் வழியாக கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி ராவத் மற்றும் மகள் ஜீவாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தோனியின் வாழ்க்கையின் சோகமான ஒரு பின் கதையைப் பற்றி பலருக்கு தெரியாது. 

தோனி, சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பு, தோனியின் வாழ்வில் மற்றொரு பெண் இருந்தார். அவரை தோனி மிகவும் நேசித்தார். ஆனால் விதி அவர்கள் இருவரையும் பிரித்தது. தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தயாரிக்கப்பட்ட 'எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தோனியின் முன்னாள் காதலியின் பெயர் பிரியங்கா ஜா. தோனி அவரை மிகவும் நேசித்தார். திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரியங்கா ஒரு கார் விபத்தில் இறந்தார். 

தோனி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் தோனியுடன் இருக்கும் பெண் பிரியங்கா ஜா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா ஜா இந்த உலகை விட்டே சென்று விட்டார் என்பதை தோனி அறிந்ததும், அவர் மிகவும் வேதனை அடைந்தார். அந்த செய்தி அவரை வெகுவாக பாதித்தது. தோனியின் நெருங்கிய நண்பர்கள், இந்த துக்கம் காரணமாக தோனி சில காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் தோனி அதை தனது பலவீனமாக்கிக் கொள்ளாமல் தனது முழு கவனத்தையும் கிரிக்கெட் விளையாட்டில் செலுத்தினார். அதன் பிறகு அவர் இந்திய அணியை வழி நடத்தி உலகக் கோப்பையை நாட்டுக்கு பெற்றுத்  தந்தார்.

பக்கம் 16 / 90