மீன்களை எப்பொழுதும் பிடித்தவுடன் உண்ண வேண்டும். சில மீன்களை பதபடுத்தியும் உட்க்கொள்ளப்படுகிறது. மீன்களை பதப்படுத்தும் போது சில மீன் மற்றும் இறால் உறுப்புகளை அகற்றிவிட வேண்டும். அதேபோல் கழிவு மற்றும் சுவையற்ற மீன்கள் உணவுக்கு ஏற்றதல்ல. இந்த வகையான பயனற்ற மீன்களை வைத்து மீன் உபபொருட்களை தயாரிக்கலாம்.
ஒரு முழு மீனில் இருந்து கிடைக்கின்ற புரதக்கலவை ஒரு திடப்புரதக்கலவையாகும். மீனிலிருந்து தண்ணீர், எண்ணெய், எலும்புகள், மற்றும் இதர பொருட்களை அகற்றுவதால் மீன் புரதம் அதிகரிக்கிறது.
மீன் புரதக் கலவையின் முன்னேற்றத்தால் முழு மீனிலிருந்து பெறப்படுகின்ற புரதக்கலவை மனிதனின் ஊட்டச்சத்துக்கு ஏற்றது.
மீன் புரதக்கலவை கரகரப்பான, நிறமில்லாத, மனமில்லாத மற்றும் சுவையில்லாத ஓரு தூள். இந்த தூளை எந்தவித சுவைமணமும் குறையாமல் அறை வெப்ப நிலையிலே 3-4 வருடங்கள் வைத்திருக்கலாம். ஏறத்தாழ கூட்டான மீன் புரதக்கலவையாக பயன்படுத்தலாம். அதிக அளவுடைய உயர்ந்த செரிமான புரதம், லைசின் மற்றும் கனிமம் இவை அனைத்தும் நிறைந்ததுதான் மீன்புரதக்கலவை.
மீன் புரதக் கலவையை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆதலால் சாப்பிடும் உணவுடன் சோர்த்து சாப்பிட வேண்டும். ரொட்டியில் 5-10% மற்றும் பிஸ்கட்டில் 10% மீன் புரதக் கலவை சேர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 35கி மீன் புரதக் கலவையை உணவில் சேர்த்துக்கெரள்ள வேண்டும். மீன் சதையில் 15-20% புரதம் உள்ளது. சில மீன் இனங்களில் அதிகமான எண்ணெய் உடலில் இருக்கும்.(எ.க.சூறா,காட்) இது ஈரல் எண்ணெய்க்கு மூலகாரணம் உள்ளது.
மீன் பதப்படுத்துதல் மற்றம் எலும்பற்ற மீன் துண்டு தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் உபயோகமற்ற மீன்களில் நிறைய புரதம், கொழுப்பு மற்றும் கனிமம் உள்ளது.
மீனின் உபபொருட்கள், மீன் உணவு, மீன் தூள், மீன் உடல், மீன் ஈரல் எண்ணெய், பதப்படுத்திய மீன் சுவாசப்பை, இன்னும் பல. ஈரல் மற்றும் நண்டிலிருந்து புற்த்தோட்டின் மூலப்பொருள் கிடைக்கின்றது. உயிர் வேதியியல் மற்றும் மருந்து சார்ந்த பொருட்கள், பித்த நீர் உப்பு, இன்சுலின், குலுகோசமையின் மற்றும் பல.
மீன் ஈரல் எண்ணெயில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளது. சில மீனினங்களில் வைட்டமின் ‘டி’ இருக்கும். வைட்டமின் ‘ஏ’ ஈரலில் உள்ளது. சில பெரிய வகை மீன்களில் ஈரல் மற்று உறுப்புகளில் இருக்கும். சுறா மீனில் கறுப்பு நிற ஈரல் இதில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருக்கும். மற்ற நிற ஈரலை விட சூரை மற்றும் காட் ஈரல் மீன் எண்ணெயில் 250000,500/கி எண்ணெய்.
காட் ஈரல் எண்ணெய் காட் மீன் வகையிலிருந்து எடுக்கப்படுகிறது. சூரிய ஒளி படும் போது வைட்டமின் ‘ஏ’ அழிந்துவிடும். மற்றும் காற்று படும் போது எண்ணெய் கெட்டியாகும். இந்த வைட்டமின்கள் குறையாமல் இருக்க நார்டிஹய்டரோ குவாலடிக் அமிலம் (0.05%) மற்றும் அஸ்கார்பியல் பால்மிட்டேம் (0.01%). குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியம். காயம் மற்றும் எரிச்சலுக்கு போடலாம்.
இந்தியாவில் சுறா மீன்கள் மிகவும் அதிகம். இதில் நிறைய வைட்டமின் ‘ஏ’ உள்ளது. ஒரு மீனிலிருந்து 300000/கி எண்ணெய் எடுக்கலாம். புதிதாக எடுக்கப்பட்ட எண்ணெய் மஞ்சள், ஆரஞ்சு, அல்லது பொடி கலரில் உள்ளது. இந்த எண்ணெயுடன் கடலை எண்ணெயை சேர்த்தால் வைட்டமின் ‘டி’ கிடைக்கும்.
மீன் மாவு தூள் என்பது மீனிலிருந்து எடுக்கப்படுகின்ற தூள். இதை கோதுமை அல்லது மக்காசோள மாவுடன் கலந்து ரொட்டி, பிஸ்கட், கேக், இனிப்புகள் மற்றும் சோப்பில் சேர்க்கலாம். இது புரதச்சத்துக்கு பொருத்தமானது.
லோமியா மற்றும் கெளுத்தி மீனிலிருந்து சீவல்/அப்பளம் தயாரிக்கலாம். மீன் சதைகளை வேகவைத்து, மைதாவுடன் கலந்து உப்பு சேர்த்து, சீவல்/அப்பளம் செய்யலாம்.
மீன் கேக் தயாரிக்க சுறா மற்றும் கெளுத்தி மீன்கள் சிறந்தது. மீனை சுத்தம் செய்து அதை வேகவைத்து தனித்தனி பாகமாக வைக்க வேண்டும். வேகவைத்த உருளை கிழங்கை உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து மீன் பாகங்கள் நடுவில் வைத்து வேகவைக்கவும்.
மீனுடைய புரதம் செரிமானம், உயிரியல் மற்றும் வளர்ச்சி ஊக்க மதிப்பளவு போன்றவற்றை தருகிறது. மனித ஊட்டத்தில் இது பெரிய அங்கம் வகிக்கிறது. மீன் புரதத்தில் லைசின் மற்றும் மித்தியோனின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமுள்ளது. முட்டை வெள்ளைக் கரு, பீன்ஸ் புரதம் மற்றும் கேசின் போன்ற புரதத்தை விட மீன் புரதம் உயர்வானது. கோழி புரதத்துக்கு சமமானது.
15-20% புரதம் மீன் தசையிலிருந்து எடுக்கப்படுகிறது. மீன் துண்டுகள் மற்றும் மீன் கழிவுகளை சோடப்புடன் சேர்த்தால் கொழுப்பு வெளியேறும். இந்த துண்டுகளை காய வைக்கவும். அதன்பின் அரைத்தால் மீன் நாற்றம் இல்லாமல் வெள்ளை பொடி/தூள் கிடைக்கும். இதில் 80-90% புரதம் உள்ளது. ரொட்டி, இனிப்புகள், ஐஸ் கிரிம் மற்றும் மருந்துப் பொருட்கள் செய்யும் போது முட்டை வெள்ளை கருவுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
சுறா துடுப்புகளை அடிபக்கத்தில் வெட்டி அதை கடல் நீரில் சுத்தம் செய்து மரச் சாம்பளுடன் எலுமிச்சை சாறு கலந்து வெயிலில் காயவைக்க வேண்டும். அதன்பின் முறுகலான மற்றும் மிருதுவானதாக கிடைக்கும் இஇதை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள்.