Editor's Choice

ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றாக இருக்கும் நைஜீரியா உலகிலேயே ட்விட்டரை தடை செய்த முதல் நாடாக ஆகியுள்ளது. ட்விட்டரின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அதிருப்தி நிலவி வரும் இந்த நேரத்தில், இது மிகவும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகம்மது புஹாரி, டிவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில், பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இந்நிலையில், நைஜீரியா அதிபர் ட்விட்டரில், ‘இன்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பலருக்கு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்த விழிப்புணர்வோ, புரிதலோ இல்லை. 30 மாதங்களாக போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஈடுபப்ட்டு வரும் அதிகாரிகள் பலர், இந்த உள்நாட்டு போரைச் சந்தித்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான்,  பிரிவினைவாதிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள், " என ட்வீட் செய்திருந்தார். 

புஹாரியின் இந்த ட்வீட், சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் ‘தவறான நடத்தை' என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

சர்வாதிகார போக்குடன் செயல்படும் ட்விட்டரின் செயல்பாட்டினால் கடுப்பான, நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரி (President Muhammadu Buhari), எங்கள் நாட்டை எப்படி நடத்துவது என்பதற்கு எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை தனது டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளார். தங்கள் நாட்டில் ட்விட்டர் இயங்க காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடக தளமான ட்விட்டர் இந்தியாவிலும் (India) சட்டத்தை பின்பற்றாமல், சர்வாதிகார போக்குடன் செயல்படுவதினால், அதிருப்தியை எதிர்கொள்ளும் நேரத்தில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக உலக அளவில் பார்க்கப்படுகிறது. சமூக ஊடக தளங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் இந்த ஆண்டு மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், ட்விட்டர் வழிகாட்டுதல்களை இன்னும் பின்பற்றவில்லை. இந்திய அரசு ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளுக்கு இணங்காமல் இருப்பதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்ததோடு, ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டது. இந்த விவகாரம் தில்லி உயர் நீதிமன்றத்தை எட்டிய நிலையில், வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

Editor's Choice

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தின.  இதனால் பல தொழில்கள் முடங்கின.  வருவாய் இழப்பு, பொருளாதார தேக்கம் ஆகியவை ஒருபுறம் பாதிப்புகளை ஏற்படுத்தின.  மறுபுறம் கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்தன.

இந்நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் கடந்த ஆண்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  சர்வதேச அளவில் ஏற்பட்ட பெருந்தொற்றால் பலரது திருமணமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு 8 லட்சத்து 40 ஆயிரத்து 832 குழந்தைகளே பிறந்தன.  இது அதற்கு முந்தின ஆண்டை காட்டிலும் 2.8 சதவீதம் குறைவு ஆகும்.  கடந்த 1899ம் ஆண்டில் இருந்து மிக குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
 
இதேபோன்று உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்த குழந்தைகளின் விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது.  இதனால், தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ள கடந்த வாரம் அந்நாட்டு அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது.
 
தென்கொரியாவிலும் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து உள்ளது.  கடந்த 2020ம் ஆண்டில் முதன்முறையாக புதிதாக பிறக்கும் எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் அதிகம் காணப்பட்டன.
 
இதனிடையே, இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. சீனாவின் மக்கள்தொகை 2025-க்குப் பிறகு குறையத் தொடங்கும். அப்போது சீனா உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்குச் சூட்டிவிடும். அப்போது இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த மனிதவளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப நம்முடைய திட்டங்களைக் கூர்மைப்படுத்த வேண்டும். கல்வியையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது நல்ல தொழில் சமூகம் உருவாகும். அப்போது நம் மனிதவளத்தின் மதிப்பும் உயரும்.
Editor's Choice

தமிழர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக ‛தி பேமிலி மேன்-2' வெப் சீரிஸ்க்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் ப்ரைமில் வெளியானது. 

ராஜ், டிகே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்து, ஹிந்தியில் உருவான, 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ்க்கு டிரைலர் வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில், ராஜி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். அவரை பயங்கரவாதி போலவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்டியுள்ளனர். குறிப்பாக, தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பல தமிழ் அமைப்புகள் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்தனர்.

தமிழர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும், 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ் பல எதிர்ப்புகளை மீறி 'அமேசான் ப்ரைம்' ஓ.டி.டி., தளத்தில் வெளியானது. இது பலருக்கும் இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இத்தொடரையும், அமேசான் ஓடிடி தளத்தையும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக FamilyMan2_against_Tamils, BoycottAmazon, Raji, LTTE, போன்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். அமேசானின் சேவைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்போவதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதனால்  இந்த விவகாரம் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் இடம்பெற்றது.

Editor's Choice

சீனாவில், 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று மனிதநேயம் கொல்லப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் (1989 Tiananmen Square massacre), ஜனநாயக கோரிக்கையுடன் சீனாவில் ஒரு மகத்தான இயக்கம் நடந்தது.

சீன மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1989 ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய போராட்டம் வலுப்பெற்று, அதே ஆண்டு ஜூன் 4, அன்று, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில், மாணவர்கள் பெருமளவில் கூடினர். ஆனால் சீன அரசு இந்த போராட்டத்தை ராணுவ டாங்குகளாலும், துப்பாக்கிகளாலும் நசுக்கியது. பெய்ஜிங்கின் வீதிகளில் அப்பாவி மாணவர்களின் இரத்தம் வீதியில் ஆறாக ஓடியது.

1989 ஜூன் 4, அன்று அப்போதைய சீன கம்யூனிச அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையில் எத்தனை பேர் இறந்தார்கள்  என்பது இது வரை தெரியவில்லை. சீனாவின் சர்வாதிகார அரசு, இந்த அடக்குமுறையில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறியது. ஆனால், சீனாவில் இருந்த ஒரு இங்கிலாந்து பத்திரிகையாளர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினார். ஜனநாயகத்தை நசுக்கும் இத்தனை பயங்கரமான நடவடிக்கை வரலாற்றில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் நடக்கவில்லை.

சீனாவின் சீர்திருத்தவாதியான ஹு யோபாங்கின் மறைவில், சதி உள்ளதாக, ஜனநாயக ஆதரவு மக்கள் சந்தேகித்தனர். ஆகவே, அப்போதைய சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், இந்த போராட்டம் உச்சம் அடைந்த போது, கம்யூனிச சக்தி சீனாவிலிருந்து ஒழிந்து விடும் என்று உலகம் நினைத்தது. ஆனால் சீனாவின் மனிதாபிமானம் அற்ற கம்யூனிச அரசு, இராணுவத்தை பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்து, போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியது.

படுகொலை நடந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எந்தவொரு கம்யூனிஸ்ட் தலைவரும் இன்று வரை இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. எந்த கம்யூனிஸ்ட் தலைவரோ அல்லது அரசோ அதன் விமர்சனத்தை பற்றி கூட கவலைப்படவில்லை. அதோடு மட்டுமல்ல, அந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில், தான் பேசி வருகின்றனர்.

தியனன்மென் சதுக்கம் அமைந்த வரலாறு குறித்து அறிந்துகொள்வோம்

1415 இல் மிங் வம்சத்தின் போது இம்பீரியல் நகரத்தில் தியனன்மென் சதுக்கம் ("பரலோக அமைதியின் நுழைவாயில்") கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில், லி சிச்செங்கின் கிளர்ச்சிப் படைகளுக்கும் மஞ்சு தலைமையிலான சிங் வம்சத்தின் படைகளுக்கும் இடையிலான சண்டை இச்சதுக்கத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது அல்லது அழித்தது எனலாம். மீண்டும் 1651 ஆம் ஆண்டில் தியனன்மென் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. பின்னர் 1950 களில் அதன் அளவை விட நான்கு மடங்கு பெரிதாகிவிட்டது.

சதுக்கத்தின் மையத்திற்கு அருகில் உள்ள "கிரேட் மிங் நுழைவாயில்", என்பது நகரத்தின் தெற்கு வாயில் ஆகும். குயிங் வம்சத்தின் போது இந்த நுழைவாயில் என்றும் குடியரசுக் காலத்தில் " சீனாவின் நுழைவாயில்" என்றும் பெயர் மாற்றப்பட்டது. பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் மற்றும் ஜெங்யாங்மென் போன்ற மற்ற வாயில்களைப் போலல்லாமல், இது முற்றிலும் சடங்குகள் மேற்கொள்ளும் நுழைவாயிலாக இருந்தது. இதில் மூன்று வளைவுகள் இருந்தன. ஆனால் கோபுரங்கள் இல்லை. மிங் கல்லறைகளில் காணப்படும் சடங்கு நுழைவாயில்களைப் போலவே இந்த வாயில் "தேசத்தின் நுழைவாயில்" என்று ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொண்டிருந்ததை அதன் அடுத்தடுத்த பெயர்களில் இருந்து காணலாம். பேரரசர் கடந்து சென்ற நேரம் தவிர இது பொதுவாக மூடப்பட்டிருந்தது. பொதுவான போக்குவரத்து முறையே சதுரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு முனைகளில் பக்க வாயில்களுக்கு திருப்பி விடப்பட்டது. போக்குவரத்தில் இந்த திசைதிருப்பலின் காரணமாக, இந்த வாயிலின் தெற்கே பெரிய, வேலி அமைக்கப்பட்ட சதுரத்தில் "செஸ் கிரிட் சந்தைகள்" என்று அழைக்கப்படும் ஒரு பரபரப்பான சந்தை உருவாக்கப்பட்டது.

1860 ஆம் ஆண்டில், இரண்டாம் ஓபியம் போரின்போது, ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் பெய்ஜிங்கை ஆக்கிரமித்தபோது, அவர்கள் வாயிலுக்கு அருகே முகாமிட்டனர். மேலும் வாயிலையும் முழு தடைசெய்யப்பட்ட நகரத்தையும் எரிக்க நினைத்தனர். பின்னர், அவர்கள் தடைசெய்யப்பட்ட நகரத்தை விட்டுவிட்டு அதற்கு பதிலாக பழைய கோடைகால அரண்மனையை எரிக்க முடிவு செய்தனர். சியான்ஃபெங் பேரரசர் இறுதியில் வெளிநாட்டு துருப்புக்களை அனுமதிக்க அனுமதித்தார் . 1900 ஆம் ஆண்டில் குத்துச்சண்டை கிளர்ச்சியின் போது எட்டு நாடுகளின் கூட்டணியின் படைகள் பெய்ஜிங்கை முற்றுகையிட்டபோது, அவர்கள் அரசு வளாகங்களை மோசமாக சேதப்படுத்தினர் மற்றும் பல அமைச்சக கட்டிடங்களை எரித்தனர். குத்துச்சண்டை கிளர்ச்சி முடிவடைந்த பின்னர், அந்த பகுதி வெளிநாட்டு சக்திகளுக்கு தங்கள் இராணுவப் படைகளை ஒன்று சேர்ப்பதற்கான இடமாக மாறியது.

1954 ஆம் ஆண்டில், சீனாவின் நுழைவாயில் இடிக்கப்பட்டது. இது சதுக்கத்தை விரிவாக்க அனுமதித்தது. நவம்பர் 1958 இல், தியனன்மென் சதுக்கத்தின் ஒரு பெரிய விரிவாக்கம் தொடங்கியது. இது ஆகஸ்ட் 1959 இல் 11 மாதங்களுக்குப் பிறகு நிறைவடைந்தது. இது சதுரத்தை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அற்புதமானதாக மாற்றுவதற்கான மா சே துங்கின் பார்வையைப் பின்பற்றியது, மேலும் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. இந்த செயல்பாட்டில், ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. அதன் தெற்கு விளிம்பில், மக்கள் மாவீரர்களுக்கான நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஒத்திசைவாக, 1958 மற்றும் 1959 க்கு இடையில் கட்டப்பட்ட பத்து பெரிய கட்டிடங்களின் ஒரு பகுதியாக, சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி), மக்களின் பெரிய மண்டபம் மற்றும் புரட்சிகர வரலாற்று அருங்காட்சியகம் (இப்போது சீனாவின் தேசிய அருங்காட்சியகம் ) ஆகியவற்றின் பத்து ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டது. இது சதுரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் அமைக்கப்பட்டன.

Editor's Choice
டெல்லியில் சைபர் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நள்ளிரவில்  இ-மெயில் ஒன்று வந்துள்ளது.  அமெரிக்காவில் இருந்து செயல்பட கூடிய பேஸ்புக் அலுவலக முகவரியுடன் வந்த மெயிலில், டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இதனால், பேஸ்புக் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  அதன்பின் பாலம் வில்லேஜ் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான தகவல்கள் பகிரப்பட்டன.
 
இதனை தொடர்ந்து டெல்லி போலீசிடம், தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடம், அவரது பேஸ்புக் லைவ் வீடியோ பதிவு ஆகியவையும் பகிரப்பட்டு உள்ளன.  இதனை தொடர்ந்து அவசரகால பொறுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை உடனடியாக சம்பவ பகுதிக்கு புறப்பட்டன.
 
இதன்பின் போலீசார், அந்நபரின் முகவரி உள்ள இருப்பிடத்திற்கு சென்றனர்.  அந்த நபர், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார்.  அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்பு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  தீவிர சிகிச்சைக்கு பின்பு அந்த நபர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.
 
Editor's Choice

சமூக ஆர்வலர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் சமீபத்தில் பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். திருமணம் குறித்த யூசுப்சாயின் கருத்துக்கள் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது. அதோடு, மலாலா இடம்பெற்றிருந்த பத்திரிகையின் அட்டைப்படமும் வைரலானது. 

செய்தியாளரிடம் பேசிய மலாலா யூசப்சாய், அரசியல், கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கை என பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். இருப்பினும், திருமணம் குறித்த அவரது கருத்துக்கள் பாகிஸ்தானில் பலருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.  

திருமணத்தைப் பற்றி பேசிய யூசுப்சாய், எல்லோரும் தங்கள் உறவுக் கதைகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைப் பார்ப்பது கவலை ஏற்படுவதாக தெரிவித்தார். "நீங்கள் ஒருவரை நம்ப முடியுமா இல்லையா என்பதே தெரியாத நிலையில்... நீங்கள் எப்படி உறுதியாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் வரவேண்டும் என்று விரும்பினால், ஏன் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்? அவர் ஏன் ஒரு கூட்டாளராக இருக்க முடியாது (திருமணம் செய்துக் கொள்ளாமல்)? ".

இந்த கருத்துக்கள் பழமைவாத பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி இருக்கிறது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான மலாலா, "பொறுப்பற்ற" அறிக்கைகளால் இளைஞர்களின் மனதை சிதைக்க முயற்சிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். "மேற்கத்திய கலாச்சாரத்தை" நகலெடுக்கிறார் மலாலா என்றும் திட்டித் தீர்க்கின்றனர். புனிதமான திருமணத்தின் புனிதமான விதிகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பியதற்காக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார்.

பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படம் வைரலாகிய சில நாட்களுக்குப் பிறகு, ‘marriage’ மற்றும் Malala  என்ற ஹேஷ்டேக்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின. அதில் பல கருத்துக்கள் பாலியல் ரீதியானதாகவும், அவதூறு பேசுவதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 8 / 90