Editor's Choice

வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகியுள்ளது. புதிய தளம் ஜூன் மாதம்  7ம் தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வருமான வரித் துறையில்  மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்தது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வெளியீட்டின்படி, புதிய இனையதளமான incometax.gov.in  ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.

வரி செலுத்துவோர் உடனடி தகவல்களை பெறும் வண்ணம் நிலுவையில் உள்ள நடவடிக்கை உட்பட அனைத்து வகையான பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம் என்று சிபிடிடி மேலும் கூறியுள்ளது. எனினும், வரி வருவாய் தாக்கல் அம்சம் ஜூன் 18 அன்று தான் செயல்பாட்டிற்கு வரும்.

வரி செலுத்துவோர் புதிய இணையதளத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிபிடிடி தெரிவித்துள்ளது. "புதிய இணையதளம் குறித்து புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகலாம், எனவே புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும் என சிபிடிடி வலியுறுத்தியுள்ளது.  

ஐ.டி.ஆர் 1 மற்றும் 4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் ஐ.டி.ஆர் 2 (ஆஃப்லைன்) வரி வருவாய் படிவங்களை பொறுத்தவரை, புதிய போர்டலில்  வருமான வரி தாக்கல் தொடர்பான மென்பொருள் இலவசமாக கிடைக்கும். ஐடிஆர் 3, 5, 6, 7  படிவங்களை பொறுத்தவரை, வரி தாக்கல் தொடர்பான வசதிகள் விரைவில் கிடைக்கும் என சிபிடிடி மேலும் வலியுறுத்தியது.

Editor's Choice

லினெட்டெஹோம் (Lynetteholm) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோடு, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்படும்.

டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள இந்த 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கவிருக்கிறது.

இத்தீவின் கட்டுமானத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து, சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

லினெட்டெஹோம் திட்டத்தில் ஒரு அணை அமைப்பும் உள்ளது. துறைமுகத்தை கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அவ்வணை அமைக்கப்பட இருக்கிறது.

திட்டமிட்டபடி கட்டுமானம் தொடங்கப்பட்டால், தீவின் பெரும்பாலான அஸ்திவாரங்கள் 2035ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும், 2070ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

லினெட்டெஹோம் கட்டுமானத்துக்கு எதிரான வழக்கு, சுற்றுச்சூழல் குழுக்களால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலை வழியாக பொருட்களைக் கொண்டு செல்லும் பிரச்னையும் இதில் அடங்கும்.

அத்தீவின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய உடன் மூலப்பொருட்களை வழங்க, கோபன்ஹேகன் வழியாக ஒரு நாளைக்கு 350 லாரிகள் பயணிக்க வேண்டும் என ஒரு சுற்றுச்சூழல் மதிப்பீடு தெரிவிக்கிறது.

சுமார் 400 கால்பந்து ஆடுகளங்களின் அளவிலான செயற்கைத் தீவைக் கட்டுவதற்கு முன், தீபகற்ப நிலப்பரப்பை மட்டும் உருவாக்க 80 மில்லியன் டன் மண் அப்பகுதிக்கு தேவைப்படும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடல் படிமானங்களின் இயக்கம் மற்றும் நீரின் தரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன.

இந்த திட்டத்திற்கு 85 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் பெற்று வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து கோபன்ஹேகனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், என டென்மார்கின் தொலைக்காட்சியான டிஆர் கூறியுள்ளது.

"கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம், தேர்தல் காலங்களுக்கு இடையில் நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ள அதிக வாய்ப்பில்லாத காலத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது".

டென்மார்க்கின் சாலை வழி சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவரான கெரினா கிறிஸ்டென்சன், லினெட்டெஹோம் கட்டுமானத்திற்கான பொருட்கள் போக்குவரத்தின் போது பருவநிலைக்கு உகந்த போக்குவரத்து முறைகள் ஒரு விருப்பமான தேர்வாக இருந்தன. ஆனால் அதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என கூறினார்.

"எடுத்துக்காட்டாக எலக்ட்ரிக் லாரிகளில் CO2 உமிழ்வு இருக்காது, சத்தத்தைக் குறைக்கும், ஆனால் அதற்கு பதிலாக செலவு அதிகரிக்கும், அதிக டிரிப் அடிக்க வேண்டி இருக்கும்" என அவர் கூறினார்.

Editor's Choice

மீண்டும் கர்ப்பமடைந்த ஹாரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், பிரபல நடிகையுமான மேகனும் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கடந்த ஆண்டு அரசு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்த ஹாரி தம்பதி கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு, ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார் மேகன். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹாரி- மேகன் தம்பதியர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதில் டயானா என்பது ஹாரியின் தாயார் பெயர். லில்லிபெட் என்பது ராணி எலிசபெத்தை சிறுவயதில் அழைத்த பெயராகும்.

இந்த தம்பதிக்கு, ஆர்ச்சி என்ற, 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்கள், அரச குடும்ப பொறுப்புகளை துறந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

 

Editor's Choice

Model Tenancy Act நம் நாட்டைப் பொறுத்தவரை வீட்டை வாடகைக்கு எடுப்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பின்னரே வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதேபோல் சொந்த விட்டை வைத்திருப்பவர்களுக்கும் நல்ல நபரை வாடகைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருக்கிறது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. 

குத்தகை சட்டம் (Model Tenancy Act) அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் வரைவு இனி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்படும். புதிய சட்டத்தை உருவாக்கியோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்தோ இதைச் செயல்படுத்தலாம். மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்க ஒரு திட்டம் உள்ளது. வாடகை சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாக தீர்க்க மாநில அரசுகள் வாடகை நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களை அமைக்கலாம். 

அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் வீடுகளை வாடகைக்கு எடுப்பது தொடர்பான சட்ட கட்டமைப்பை சீரமைக்க மாதிரி குத்தகை சட்டம் உதவும். இதன் மூலம் இத்துறையில் மேலும் வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பல இன்னல்களை அனுபவிகின்றனர். வரம்பில்லாமல் வாடகையில் ஏற்றம், அதிகப்படியான வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பித்தலில் உள்ள சிக்கல், வீட்டை காலி செய்வதில் ஏற்படும் சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.   

வீட்டை வாடகைக்கு எடுத்து வசிப்பவர்களின் நலனுக்காக இந்த சட்டத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாடகைக்கு வருவோரிடம் 2 மாத வாடகைக்கு மெல் வாடகை முன்பணம் வாங்க முடியாது. வாடடைக்கு வருபவர்களோ அல்லது வீட்டு உரிமையாளரோ விரும்பினால் வாடகை ஒப்பந்த நகலை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் இனி ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும்.  ஒப்பந்தம் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ பதிவு செய்யப்படலாம். 

ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டால், இரு தரப்பினரும் நிவாரணம் கோரி நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது. ஒப்பந்தம் போடப்படாவிட்டால், வீட்டு உரிமையாளருக்கு மட்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கான அனுமதி வழங்கப்படும். புதிய சட்டத்தின் படி, வாடகையில் இருப்பவர் வீட்டை காலி செய்யாவிட்டால், சட்டப்படி வீட்டு வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு. வீடுகளின் உரிமையாளர்களுக்கும் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் புரிதலை உருவாக்கவும், சிக்கல்களை எளிதாக திர்க்கவும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும். 

Editor's Choice

ஒரு விமானம் ஒலியை விட வேகமாக பயணித்தால் அதை சூப்பர்சோனிக் விமானம் என்கிறோம். 60,000 அடி உயரத்தில் மணிக்கு 1,060 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க வேண்டும்.

பொதுவாக பயணிகள் விமானங்கள் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில்தான் பறக்கும். ஆனால் ஓவர்ச்சர் மணிக்கு 1,805 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேகத்தில் பறந்தால், லண்டன் - நியூயார்க் இடையிலான பறக்கும் நேரத்தை பாதியாகக் குறைக்கலாம். ஓவர்ச்சர் விமானத்தில் இந்த வழித்தடத்தை 3.5 மணி நேரத்தில் பயணித்துக் கடக்கலாம். பயண நேரத்தில் 3 மணி நேரத்தை குறைக்கலாம் என்கிறது பூம் நிறுவனம்.

1976-ல் பயணிகள் விமான சேவையில் நுழைந்த கான்கார்ட் விமானம் மணிக்கு 2,180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாக இருந்தது.

இந்த சூப்பர்சோனிக் விமானப் பயணங்களில் இரு பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. இரைச்சல் மற்றும் மாசுபாடு.

ஒலியை விட வேகமாக பறக்கும் போது, விமானம் சோனிக் பூம் எனப்படும் பேரொலியை ஏற்படுத்தும். தரையில் இருப்பவர்களுக்கு அது ஏதோ இடி இடிப்பது போலவோ, பெரிய வெடிச்சத்தம் போலவோ கேட்கும்.

சூப்பர்சோனிக் விமானங்கள் எங்கு பறக்கலாம் என்பதை பூம் நிறுவனம் வரையறுக்கிறது. இவ்விமானங்கள் கடல் பகுதியை அடையும் வரை, மக்களிடமிருந்து தொலைவாக செல்லும் வரை குறைந்த வேகத்தில் பறக்க வேண்டும் என்கிறார்கள்.

சூப்பர்சோனிக் விமானங்கள் பறக்கத் தொடங்கும் போதும், தரையிறங்கும் போதும் தற்போது நடைமுறையில் இருக்கும் நவீனகால பயணிகள் விமானங்களை விட அதிக ஒலியை எழுப்பாது என நம்புவதாக பூம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. விமானத்தின் வடிவமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சோனிக் பூம் சத்தத்தையும் குறைக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பூம் நிறுவனம்.

அடுத்த பெரிய பிரச்சனை எரிபொருள் நுகர்வு.

"சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்க வேண்டும் என்றால், அதிக சக்தி தேவை. அதற்கு அதிக எரிபொருள் தேவை".

"ஒட்டுமொத்த விமான துறைக்கும் தேவையான பயோ டீசலைத் தயாரிப்பதற்கு தேவையான உற்பத்தி திறன் வசதிகளில் உலகம் மிகவும் பின் தங்கி இருக்கிறது." இது ஒரு பெரிய பிரச்சனை என கூறுகிறார் அவர்.

கான்கார்டில் பயணிப்பது ஒரு சொகுசான பயணமாகக் கருதப்பட்டது. சாதாரண விமானங்களில் முதல் வகுப்பை விட கான்கார்ட்டில் பயணிக்க அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது.

பயணிகள் வேகத்தை விரும்புவதாகவும், அதிவிரைவு விமானங்கள் மனிதர்களுக்கு மத்தியிலான இணைப்பை ஆழப்படுத்தும் எனவும், வியாபார ரீதியிலான உறவை வலுப்படுத்தும் எனவும், பூம் நிறுவனத்தின் ஆய்வு கூறுவதாக சவிட் கூறினார்.

ஓவர்ச்சரின் பயணக் கட்டணத்தை வழக்கமான பிசினஸ் வகுப்பு கட்டணம் அளவுக்கு வசூலித்தால்கூட லாபம் கிடைக்கும் என பூம் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இருப்பினும், விமான கட்டணத்தை தீர்மானிக்கப் போவது யுனைடெட் விமான சேவை நிறுவனம்தான். அந்நிறுவனம் ஒரு விமானத்துக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது, அதற்கான லாபத்தை பார்க்க விரும்புகிறது.

Editor's Choice

டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது என நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனையில் (GB Pant Hospital) உள்ள மையம் ஆகும். இங்கே பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு  அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கு  செவிலியர்கள் மட்டுமல்லாது பலவேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனை, இந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் இந்த சுற்றறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, 'மலையாளம் வேறு எந்த மொழியையும் போலவே இந்திய மொழி' என்றார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி சுகாதாரத் துறையும் ஜிபி பந்த் மருத்துவமனைக்கு மெமோ அனுப்பியுள்ளது. மறுபுறம், ஜிபி பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லிலதர் ராம்சந்தானி கூறுகையில், மருத்துவமனையில் மலையாள மொழி பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நோயாளி சுகாதாரத் துறை மூத்த அதிகாரிக்கு புகார் அளித்ததையடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'சுற்றறிக்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுடன் சங்கம் உடன்படவில்லை' என்று கூறினார்.

பக்கம் 7 / 90