அத்திப்பழம் என்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கமாட்டார்கள். அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், அதன் வரத்து குறைந்துள்ளது; விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதரணமாக இந்த பழம் கிடைப்பதில்லை.
ஆனால் உலர வைக்கப்பட்ட அத்திப்பழமானது நாட்டு மருந்து கடைகளிலும், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைகிறது. விலை சற்று அதிகம்தான் என்றாலும் தயங்காமல் வாங்கி சாப்பிடுங்கள். உலர் அத்தியை பாலில் கலந்து ஜூஸ் போட்டு பருகலாம். மெல்லிய சுவையுடன் இருக்கும்.
உலர் அத்தியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
கலோரியும், கொழுப்பும் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தை ஜூஸாக பருகலாம். பசியும் அடங்கும்.
அதிகளவு பொட்டாசியமும், குறைந்தளவு சோடியமும் கொண்டிருக்கும் பழம் என்பதால் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் வல்லமை வாய்ந்தது இப்பழம்.
விட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்தியை தினமும் உட்கொண்டு வருவோருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் வளமாக கிடைக்கும்.
இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்ததாகும்.
இரும்புசத்து நிறைந்த அத்திப்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதையும் தடுகிறது.
அத்திப்பழம் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது உலர் அத்திப்பழமோ இரண்டுமே அதிகமாக எடுத்துகொள்ள கூடாது. இது நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் இது செரிமானப்பிரச்சனையை உண்டாக்கிவிடக்கூடும். அத்தி நார்ச்சத்தும் வைட்டமினக்ளும் தாதுக்களும் நிறைந்த மூலமாகும்.
தீமைகள்
ஆய்வுகளின் படி அத்திப்பழங்களை அதிகமாக உட்கொள்வது அபாயகரமான சுகாதார பிரச்சனைகளை உண்டாக்கும். இது மருத்துவ சிகிச்சை எடுக்கும் அளவுக்கு தீவிரமாகவும் வர வாய்புண்டு. அத்திப்பழத்தை சரியான முறையில் எடுத்துகொள்வது அவசியம். அத்திப்பழம் என்ன மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
அத்தி இலகுவானதாகவும் ஜீரணிக்கவும் எளிதாக இருக்கும். ஆனால் இவை கடினமானவை. உண்மையில் அத்திப்பழங்களை அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது வயிற்று வலியை உண்டாக்கும். அதோடு இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் மிகுந்து இருப்பதால் அதிகமாக எடுக்கும் போது இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்கிவிடும்.
இது வயிறு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகின்றன. அத்திப்பழத்துக்கு பிறகு வயிறு உப்புசம் வயிறு வலி ஏற்பட்டால் சோம்பு நீர் அல்லது சீரக நீர் மூலம் வலி உபாதையை குறைக்கலாம். அதே நேரம் தொடர்ந்து எடுத்துகொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
அத்திப்பழம் விதைகளால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும் இதை சாப்பிடும் போது இதன் விதைகளை மெல்லுவதை காட்டிலும் விழுங்குவது தான் அதிகம் செய்கிறோம். இதனால் ஜீரணிப்பது கடினமாகிறது. இந்த விதைகள் குடல்களில் அடைப்பை உண்டு செய்கிறது .உலர்ந்த அத்திப்பழங்கள் வயிறு வீக்கம் போன்று கல்லீரலுக்கும் குடலுக்கும் தீங்கு விளைவிக்க செய்கிறது. மேலும் இது சூடாக இருப்பதால் மலக்குடலில் இரத்தப்போக்கு உண்டாகலாம்.
தொடர்ந்து அதிகமாக அத்திப்பழம் எடுக்கும் போது அது ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் பண்பு தீங்கு விளைவ்க்கும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதோடு சர்க்கரை மாத்திரைகளோடு அத்தியும் சேர்ந்து எடுத்துகொண்டால் அது வேகமாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க வாய்ப்புள்ளது.
அத்திப்பழத்தை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இயற்கையாகவே ஒவ்வாமை அலர்ஜி ஆஸ்துமா பிரச்சனை கொண்டிருப்பவர்கள் அத்திப்பழத்தை கண்டிப்பாக எடுக்க கூடாது.
அத்திப்பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்டுகள் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது. கால்சியம் குறைபாடு எலும்புகளின் அடர்த்தியை மென்மையாக்க செய்யும். எலும்புகளை சேதப்படுத்தும். எலும்பு பலவீனமாவதோடு பற்களையும் இவை பாதிக்க செய்யும். அதிகமான அத்திப்பழம் உடல் கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துவதால் கால்சியம் குறைபாடு உண்டாக வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற அத்திப்பழம் உதவக்கூடும். ஆனால் அது ஆக்சலேட்டுகள் நிறைந்தவை என்பதையும் மறக்க கூடாது. இது சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களுக்கான முக்கிய காரணியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அத்திப்பழத்தை அளவான முறையில் எடுத்துகொண்டால் ஆரோக்கியம் காக்கலாம்.