Editor's Choice

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 52 கிலோ எடை பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பங்கல் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவ்வுடன் நேற்று மோதினார். இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில், பிபோசினோவை தோற்கடித்து அமித் பங்கல் பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சிவா தாபா 64 கிலோ எடை பிரிவில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனான தஜிகிஸ்தானின் பகோதூர் உஸ்மோனோவை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தார். இதேபோல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 4பேர் இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.

6 முறை உலக சாம்பியனான மேரி கோம் 51 கிலோ எடை பிரிவில், மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்ஸெக்கை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தார். 64 கிலோ எடை பிரிவில்லால் பூட்சைஹி ), 75 கிலோ எடை பிரிவில் பூஜா ராணி , 81 கிலோ எடை பிரிவில் அனுபமா ஆகியோரும் பைனலுக்குள் நுழைந்தனர்.

Editor's Choice

வட கொரிய அதிபர்  கிம் ஜாங்-உன் புறாக்களுக்கு எதிராக ஒரு போரை அறிவித்துள்ளார். புறாக்கள்  அண்டை நாடான சீனாவிலிருந்து கொரோனாவை பறப்புவதாக அவர்  நம்புகிறார். இதை தொடர்ந்து சீனா எல்லையில் வசிக்கும் எல்லை நகரவாசிகள் துப்பாக்கிக்கியால் புறக்களை சுட்டு கொன்று குவித்து வருகிறார்கள்.

அதுபோல் பூனைகளும் கொரோனாவை பரப்புவதாக அதனையும் வேட்டையாட உத்தரவிடப்பட்டு உள்ளது.
 
ஹைசன் மற்றும் சினுஜு ஆகிய நகரங்களில் உள்ள அதிகாரிகள் புறாக்களையும் பூனைகளையும் வேட்டையாட  நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 
ஹைசனில் ஒரு பூனையை ரகசியமாக வளர்த்ததற்காக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. மேலும்  இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பிறகு பூனையின் உரிமையாளர்கள் சிறைவைக்கப்பட்டனர்  அந்த குடும்பத்திற்கு 20 நாட்கள் தண்டனை வழங்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.
Editor's Choice
கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப்பள்ளி அமைப்பில் மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1950 களில்  500 மாணவர்கள் இருந்தனர்.
 
1969 ஆம் ஆண்டில் மத்திய அரசு பள்ளியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது, 1978 ஆம் ஆண்டு வரை அது மூடப்படும்  வரை உள்ளூர் மாணவர்களுக்கான இல்லமாக செயல்பட்டது.
 
சுமார் 1863 முதல் 1998 வரை, 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு இந்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.இந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் மொழியைப் பேசவோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை, மேலும் பலர் தவறாக நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.
 
1978 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள  கம்லூப்ஸ் இந்தியன் உறைவிட பள்ளி மூடப்பட்டது.  தற்போது மூடப்பட்ட இந்த பள்ளியில்  215 மாணவர்களின் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இவர்கள் அனைவரும் பூர்வ குடியின குழந்தைகள் என்பதும், பெரும்பாலானோர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்பது  தெரியவந்துள்ளது.
 
கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் என்ற அமைப்பினர், இவ்வாறு காணாமல் போன மற்றும் உயிரிழந்த சுமார் 4100 குழந்தைகளின் உடல்களை  தற்போதுவரை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர்? எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை.
 
கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் கனடாவின் உறைவிட பள்ளிகளில்  பழங்குடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து கலாச்சார இனப்படுகொலை செய்வது தொடர்பாக  2015 ஆம் ஆண்டில் இருந்து  ஆறு ஆண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
 
1840 கள் முதல் 1990 கள் வரை ஒட்டாவா சார்பாக கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் படித்த 150,000 குழந்தைகளில் பலர் அனுபவித்த கொடூரமான உடல் ரீதியான துஷ்பிரயோகம், கற்பழிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற அட்டூழியங்களை அவர்கள் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
 
இந்த அமைப்பின் தாக்கங்களை ஆவணப்படுத்த 2008 இல் தொடங்கப்பட்ட கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்  ஏராளமான பழங்குடி குழந்தைகள் தங்கள் வீட்டு சமூகங்களுக்கு திரும்பவில்லை என்பதைக் கண்டறிந்தது.
 
இந்த பள்ளியில் படிக்கும் போது 4,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டதாக அது கண்டறிந்தது. ஒரு காலத்தில் கனடாவின் மிகப் பெரிய தங்கி படிக்கும் பள்ளியாக இருந்த அதன் மைதானத்தில் புதைக்கப்பட்ட 215 குழந்தைகளின் இறப்புகள் அந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
 
இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டில், கனடா  அரசாங்கம் முறையாக மன்னிப்பு கோரியது.
 
இதுகுறித்து கனடா  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டில்  இந்த செய்தி என் இதயத்தை உடைக்கிறது - இது நம் நாட்டின் வரலாற்றின் இருண்ட மற்றும் வெட்கக்கேடான அத்தியாயத்தின் வலிமிகுந்த நினைவூட்டலாகும் என கூறி உள்ளார்.
Editor's Choice

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. 

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். 

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் விதித்துள்ள விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் 10 ஆண்டு விசா, 5 ஆண்டு விசாவைப் பெற முடியும். 

துபாயில் 10 ஆண்டு குடியிருப்பு விசாவைப் பெற, ஒரு முதலீட்டாளர் AED 10 மில்லியன் பொது முதலீடு செய்ய வேண்டும்.

முதலீட்டாளர் முதலீடு செய்த தொகை கடனாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

முதலீட்டை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

5 ஆண்டு விசாவிற்கு, 10 ஆண்டுக்கான விதிமுறைகள் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், தேவையான முதலீட்டின் அளவு AED 5 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான திறமையைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 ஆண்டு விசாவிற்கு தகுதி பெற்றுள்ளனர். நாட்டில் முதலிடம் வகிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் (குறைந்தபட்ச தரம் 95 சதவீதம்) மற்றும் 3.75 அல்லது அதற்கு மேற்பட்ட ஜி.பி.ஏ கொண்ட சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு தகுதி பெறுகிறார்கள்.

Editor's Choice
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக சனிக்கிழமை  நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை  தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
 
“ எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். 
 
இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.
Editor's Choice

வீட்டு உபயோகப் பொருட்களை முழு பணத்தையும் கொடுத்து வாங்குவது அரிது. அதற்கு மாற்றாக ஜீரோ வட்டி கடனில் அப் பொருட்களை வாங்கி நுகர்வதுதான் அதிகம். உண்மையில் ஜீரோ வட்டியில் கடன் அளிக்க முடியுமா? இதனால் என்ன பயன்?  

இருக்கிற கடன்களிலேயே விரைவாக வழங்கும் கடன் என்றால் அது நுகர்வு சாதனக் கடன்தான். இந்த நுகர்வு சாதனக் கடனில்தான் ஜீரோ வட்டி என்ற கடன் திட்டம் மிகவும் பிரபலமானது. ஜீரோ வட்டி என்பது உண்மையில் ஜீரோ வட்டி கிடையாது. நீங்கள் வாங்கும் சாதனங்களுக்கு வழங்கும் தள்ளுபடியை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனில் சேர்க்கப்பட்டு நுகர்வோருக்கு ஜீரோ வட்டியில் கடன் அளிப்பது போன்று பாசாங்கம் செய்யப்படுகிறது.

நீங்கள் ஜீரோ வட்டி கடன் திட்டத்தில் நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் தள்ளுபடி எதுவும் செய்யமாட்டார்கள். மேலும் இக்கடனை பரிசீலிக்க கட்டணம் ஒன்றையும் வசூலிப்பார்கள். இது உங்களிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கப்படும் வட்டியாகும்.

நீங்கள் வாங்க ஆசைப் பட்ட செல்போனின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துகொள்ளுங்கள். முழு பணத்தை செலுத்தி செல்போன் வாங்குவதாக இருந்தால் கடைக்காரர் அதை 15 சதவீகிதம் தள்ளுபடி செய்து 12 ஆயிரத்து 750 ரூபாய்க்கு கொடுப்பார். உங்களுக்கு தள்ளுபடியாக 2 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். அதுவே கடனில் வாங்கும் போது மாதம் 15 சதவிகிதம் வட்டி என்ற கணக்கில் மூன்று மாத தவணையில் கொடுக்கும் போது வட்டியாக 2 ஆயிரத்து 250 மறைமுகமாக வசூலிப்பர். 

இதுவே கடன் அளிக்கும் நிறுவனத்துக்கு அளிக்கப்படுவதால் செல்போனை பணத்தை கொடுத்து வாங்கும் போது உங்களுக்கு வழங்கப்படும் விலையான 12 ஆயிரத்து 750யோடு கூட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். இதனை மாதம் 5 ஆயிரம் என்று மூன்று தவணையாக கட்டும் போது 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள். இப்போது மேலே சொன்ன கணக்கோடு ஒப்பிட்டு பார்த்தால்  உண்மை என்ன என்பது விளங்குமே.

இதில் இன்னொரு கூத்தும் இருக்கிறது. எந்த தள்ளுபடியும் கிடையாது. செல்போன் விலை 15 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வட்டியான 2 ஆயிரத்து 250 ரூபாயை சேர்த்து 17 ஆயிரத்து 250 ரூபாய் என்று சொல்லுவார்கள். இதை மூன்று மாத தவணையில் மாதம் 5 ஆயிரத்து 750 ரூபாய் செலுத்துவீர்கள். நீங்கள் செல்போனின் விலையை மடடும்தான் கொடுத்து வாங்கினோம் என்று நினைப்பீர்கள். கூடுதலாக எந்த பணமும் கொடுக்க வில்லை என்று எண்ணுவீர்கள். ஆனால் உண்மை இல்லை.

இந்த நுகர்வோர் சாதனக் கடன் வாங்க சில தகுதிகள் இருக்க வேண்டும். உங்கள் வயது, வேலை, வேலை செய்யும் நிறுவனம், மொத்த சம்பளம், நிகர சம்பளம் ஆகியவற்றை கணக்கீட்டு உங்களுக்கான கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் நுகர்வோர் சாதனத்தின் விலையை அப்படியே கடனாக அளிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்தை செலுத்திய பின்னர்தான் கடனில் அந்த நுகர்வோர் சாதனம் அளிக்கப்படுகிறது.

உதாரணமாக நுகர்வோர் சாதனத்தின் விலை ஒரு லட்சமாக இருக்கும் பட்சத்தில் 80 ஆயிரம் ரூபாய் மடடுமே கடனாக கொடுக்கப் படுகிறது. மீதி 20 ஆயிரம் ரூபாயை மார்ஜின் பணமாக அதை உங்கள் கைவிட்டு கடைக்காரருக்கு அளிக்கிறீர்கள்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனானது குறைந்த காலத்தில் திரும்பி செலுத்தும் விதத்தில் கொடுக்கப் படுகிறது. அதாவது ஆறு மாதம் முதல் அதிக பட்சம் மூன்று வருட காலம் வரைதான் அளிக்கப்படுகிறது. இக்கடனுக்கு எந்தவித வரி சலுகையும் கொடுப்பதில்லை.

இந்த வகை கடன்களை முன்கூட்டியே கடன் செலுத்தும் காலத்திற்குள் திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கட்டணமும் வசூலிக்கப்படும். இது கடன் நிலுவைத் தொகையில் மூன்று சதவிகிதம் முதல் ஐந்து சதவிகிதம் வரை வசூலிக்கப்படும்.

இந்த நுகர்வோர் சாதனக் கடனில் பொருட்களை வாங்குவது சரியா தவறா என்பது உங்களை பொறுத்துதான் இருக்கிறது. அந்த நுகர்வோர் சாதனம் அவசியம் என்றால் இக்கடனில் வாங்கலாம், நண்பர்கள், உறவினர்கள் வாங்கியிருப்பதால் நாமும் வாங்கவேண்டும் என்று வரட்டு கவுரவத்திற்காக வாங்குவது என்றால் அவதிப்பட நேரிடும்.

பக்கம் 11 / 90