Editor's Choice

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கேரளா மாநிலம் பதனாம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த தினூப் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கோட்டில் இருந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க திருவல்லாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். ஊரடங்கின்  காரணமாக பேருந்துகள் இல்லாமல் இருந்துள்ளது. கோழிக்கோடிலிருந்து திருவல்லாவுக்கு இடையில் 270 கி.மீ தூரமாகும். 

எனவே தனியார் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை பேருந்தை பார்த்த அவர், அதனை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இரவில் மாவட்ட எல்லைகளைக் கடக்கும்போது காவல்துறையினர் நிறுத்தி பேருந்து செல்வது குறித்து தினூப்பிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, அவர் புலம்பெயர் தொழிலாளர்களை அழைப்பதற்காக பேருந்து செல்வதாக கூறி காவல்துறையிடம் அனுமதி பெற்று அங்கிருந்து சென்றுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை காலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான குமரகோம் பகுதிக்கு சென்றபோது அங்கே காவல்துறையினர் மறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தினூப் மாட்டிக்கொண்டார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Editor's Choice

மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

வெயில் நாட்களில் மண் பானை நீர் அருந்தும்போது தேன் போன்று சுவைக்கும் என்பார்கள். அது உண்மைதான். இயற்கையாகவே மண் பானைகளில் நீர் குளிர்ச்சியாக மாறும். அதுமட்டுமன்றி அந்த நீரின் சுவையும் எதிலும் கிடைக்காத தனித்துவமானது.

இதற்குக் காரணம் மண் பானையில் உள்ள மண் நீரை உறிஞ்சி அதை வெளியேற்றும் இது இயற்கையாக நிகழக்கூடியது. அதேபோல் திறக்கும்போது உட்செல்லும் காற்று உள்ளேயே சூழ்ந்து கொண்டு நீரால் குளிர்சியாகிவிடும். அதனால்தான் நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.

கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர்  சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

காரத் தன்மை என்பது உடலில் பி.எச் அளவை சீராக வைக்க உதவுவது. இது உடலுக்கு நீரின் அளவை தக்க வைக்க உதவக் கூடியது. இது பானை நீரை அருந்தும் போது இயற்கையாகவே உடலுக்கு கிடைக்கிறது.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பானை நீர் சிறந்த தேர்வு.

எனவே வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் நீர் குளுர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

Editor's Choice

கொரோனாவில் இருந்து தப்பிக்க யாகம் செய்வது பலன் தரும் என்று யோசனை சொல்வது ஆன்மீகவாதியோ அல்லது சாமியாரோ அல்ல, ஒரு அமைச்சர் என்பது ஆச்சரியம். 
 
கொரோனாவால் நாடே நிலைகுலைந்து இருக்கும் நிலையில், மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல், கொரோனா பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கும் ஆலோசனைகளுக்கும் பஞ்சமில்லை. 

பல்வேறு விசித்திரமான யோசனைகளை கேட்டிருக்கும் மக்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான யோசனையை அள்ளித் தெளித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர்.

பா.ஜ.க. ஆளும்கட்சியாக இருக்கும் மாநிலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் இப்படி கருத்து சொல்வதில் வியப்பேதும் இல்லை தான். ஆனால், எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

‘அனைவரும் யாகம் வளர்த்து, அதன் நெருப்பில் இரண்டு பொருட்களை போட வேண்டும். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை இது. பெருந்தொற்றை ஒழிப்பதற்கு நீண்டநெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புனிதமான செயல்பாடு ஆகும்.

இது மதவெறியோ, சடங்கோ அல்ல. ஒவ்வொருவரும் இவ்வாறு யாகம் வளர்த்தால், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவை எட்டிக்கூட பார்க்காது என்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற வேதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார் அமைச்சர் உஷா தாக்கூர். பசு எரு வறட்டியை நெருப்பில் இட்டு எரித்தால் 12 மணி நேரத்துக்கு வீடு தூய்மையாக இருக்கும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாரசீக வளைகுடா பகுதியில் சர்வதேச கடற்பரப்பிற்கும், ஈரானின் கடற்பரப்பிற்கும் இடையேயான மிகவும் குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியில் பல முறை அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 
 
ஈரானின் கடல் எல்லை அருகே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கப்பல்கள் வழக்கமான ரோந்துபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அந்த கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.
 
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல் எல்லைக்கு அருகே சர்வதேச எல்லைப்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகள் அமெரிக்க கப்பலை இடைமறித்தன. மேலும், அமெரிக்க கப்பலை ஒன்றுக்கும் மேற்பட்ட ஈரானிய படகுகள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டன.
 
இதனை தொடர்ந்து ரோந்து கப்பல்களுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஈரானிய படகுகளை எச்சரிக்கும் வகையில் 30 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
 
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் அமெரிக்க கப்பலை விட்டு விலகி ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு ஈரான் கடற்படை படகுகள் விலகி சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க ரோந்து கப்பலை இடைமறித்ததாக ஈரான் படகுகளை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க கடற்படை கப்பல் 30 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
Editor's Choice

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பகையின் எதிரொலி ஒரே இரவில் அதிகரித்ததில், காசாவில் 35 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

பல ஆண்டுகளாக தொடரும் பகையின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தொடர் சண்டைகளில் நேற்று இரவு வான்வழிப் தாக்குதல்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.
 
இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிக் குழுக்கள், டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் பீர்ஷெபாவில் (Beersheba) பல ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதால், இஸ்ரேல் புதன்கிழமை அதிகாலை காசாவில் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

காசாவில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது, மற்றொன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் பலத்த சேதமடைந்தது. உளவுத்துறை மையங்கள் மற்றும் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது 2014 காசாவில் நடந்த போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மிகப் பெரிய தாக்குதலாகும், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்துள்ளன.

காசாவில் போர் பேரழிவு தரக்கூடியது, இதில் சாதாரண மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா. தீவிரமாக செயல்படுகிறது. வன்முறையை இப்போது நிறுத்துங்கள் என்று ஐ.நா. மத்திய கிழக்கு அமைதி தூதர் டோர் வென்னஸ்லேண்ட் டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை அதிகாலையில், கசாவில் தங்கள் வீடுகள் அதிர்ந்ததாகவும், இஸ்ரேலிய தாக்குதல்கள், தாக்கும் ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் என வானில் போர் மேகம் சூழ்ந்திருந்தது.
 
காசா நகரில் கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பீர்ஷெபா மற்றும் டெல் அவிவ் நோக்கி 210 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில், அதன் வணிகத் தலைநகரான டெல் அவிவை தீவிரவாதிகள் குறிவைப்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் இஸ்லாமிய ஹமாஸ் குழுவுடன் மோதலில் ஒரு புதிய சவாலை முன்வைப்பதாக இருக்கிறது.

புனித ரமலான் மாதத்தில் எருசலேமில் பல வாரங்களாக ஏற்பட்ட வன்முறைகள் கவலைகளை அதிகரிக்கின்றன. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான அல்-அக்ஸா மசூதி (Al-Aqsa Mosque) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய போலீசார் மற்றும் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

 

Editor's Choice
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த வீரர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து,  சென்னையிலுள்ள மருத்துவமனையில் மைக் ஹஸ்சி சிகிச்சை பெற்று வருகிறார். 
 
நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வரும் ஹசிக்கு 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால், வியாழக்கிழமை  அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பக்கம் 24 / 90