Editor's Choice

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென் வயது 40.  தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள 44 வயது கிளார்க் கைபோர்டு என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.

கோடை காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என திட்டமிட்டு உள்ளார்.  எனினும், திருமண தேதியை அவர் வெளியிடவில்லை.
 
திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டது.  இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல.  அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும்.  எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது என்றும் ஆர்டென் குறிப்பிட்டு உள்ளார்.
 
நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார்.  இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். திருமணத்திற்கு
 
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபரில் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்.
 
ஜெசிந்தா ஆர்டெனும், கிளார்க் கைபோர்டும் திருமணத்திற்கு முன்பிருந்தே சேர்ந்து வாழ்கின்றனர். ஜெசிந்தா பிரதமராக உள்ளதால், ஆர்டென் பணியிலிருந்து விலகி குழந்தை பார்த்துக் கொள்கிறார். இதனால் ஜெசிந்தா நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
Editor's Choice

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாக்களை போல் நடத்தப்படும் திருமணங்கள் கூட தற்போது ஸ்மார்ட் திருமணங்களாக நடக்கிறது. ஆன்லைன் திருமணங்களும் நடக்கின்றன.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த மோஹித் சவுகான் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த பிரதிபா தாகூர் ஆகிய இருவரும் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டனர். சாப்ட்வேர் இன்ஜினியர்களான இருவரும், ஆன்லைனில் செய்து கொண்ட திருமணத்தில் இருதரப்பு குடும்பத்தினரும், உறவினர்களும் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால், மணமகனுக்கும், மணமகளுக்கும் ஆன்லைனில் ஆசீர்வாதம் அளித்தனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், திருமணத்தை நடத்தி வைத்த பண்டிதரும் ஆன்லைனில் ஸ்பீக்கர் வசதியுடன் மந்திரங்களை கூறினார். மணமக்களும் பண்டிதர் கூறியபடி, சடங்குகளை செய்தனர்.

‘மோஹித் சவுகான் மற்றும் பிரதிபா ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் ஏப்ரல் 30ம் தேதி நிச்சயக்கப்பட்டது. ஆனால், இருமாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி, கடந்த 1ம் தேதி, மதியம் ஒரு மணிக்கு ‘கூகுள் மீட் ஆப்’ மூலம் திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்தனர். அதன்படி, கூகுள் மீட் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இருதரப்பு உறவினர்களும் ஆன்லைனில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்’ என்றனர்.

Editor's Choice

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

சரியான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில மருந்துகள் மற்றும் புதிய தடுப்பூசிகளைக் கொண்டு நோய் பரவல் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மேலும் அதிர்ச்சியான தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பருவத்தினருக்கு மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுக் குறைபாடு, இதய செயலிழப்பு, இதய வலி ஆகியவை ஏற்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ரத்தம் உறைவு, ரத்தத்தில் அடர்த்தி அதிகம் ஆகியவை ஏற்படுவதாகவும், இதனால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரலில் ஆக்சிஜன் உள்ளிழுக்கும் தன்மை தடைபடுவதாக புனே மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லும்முன் D-Dimer என்ற பரிசோதனையை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், அதில் ரத்தத்தின் அடர்த்தி மற்றும் உறைவு குறித்து அறிந்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர். ஒருவேளை, பரிசோதனையில் ரத்தம் உறையும் தன்மை அதிகம் இருந்தால் அபிக்ஸபான் மருந்தை அடுத்த 3 வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், இதன்முலம் இதய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.
 
Editor's Choice

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது நடிகை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கங்கனா செய்திருந்தது தான் அவரது கணக்கில் இருந்து வெளியான கடைசி ட்வீட் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மம்தா பானர்ஜி குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கங்கனா ஒரு ட்வீட்டில் மம்தா பானர்ஜி தொடர்பான ஒரு மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இப்போது அதிகாரப்பூர்வமாக, கங்கனாவின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கங்கனா ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் தேர்தலுக்குப் பிறகு தாக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.  சமூக ஊடகங்களில் கங்கனாவின் ட்வீட் பல சர்ச்சைகளை ஏற்கனவே எழுப்பியிருக்கிறது. 

சிவசேனாவுக்கு எதிராகவும் கங்கனாவின் கருத்துகள் வெளியாகியிருந்தன.
 
அரசியல் குறித்த கங்கனாவின் வெளிப்படையான கருத்து பரிமாற்றம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மம்தாவின் டி.எம்.சி, சிவசேனா என அரசியல் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் தனது அப்பட்டமான  கருத்துகளை அதிரடியாக வெளியிடுவது   கங்கனாவின் ஸ்டைல்.

அவரது இந்த அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடக தளமான டிவிட்டர் கங்கனாவின் கணக்கை முடக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Editor's Choice

அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாக திகழும் சிட்டி பேங்க், இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 19,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள் 2.9 மில்லியன் அதாவது சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது இந்தியாவில் இருந்து சிட்டி வங்கி வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிட்டி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான அஷு குல்லர் கூறுகையில், “இந்தியாவில் ஆழமாக பதிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் இன்று அறிவிக்கப்பட்ட எதிர்கால நடவடிக்கைகள் சிட்டி வங்கியின் முழு உலகளாவிய சக்தியையும் எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதற்கான நமது திறனை வலுப்படுத்துவதுடன், கார்ப்பரேட், வணிக மற்றும் முதலீட்டு வங்கி, கருவூலம் மற்றும் வர்த்தக தீர்வுகள், அத்துடன் சந்தைகள் மற்றும் பத்திர சேவைகள் ஆகியவற்றில் எங்கள் முன்னணி நிலைகளை வலுப்படுத்துகிறது.

எங்கள் உலகளாவிய வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள 5 சிட்டியின் மையங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். தற்போதைய அறிவிப்பின் மூலம் எந்த ஒரு வாடிக்கையாளரும், ஊழியரும் உடனடியாக பாதிப்பை சந்திக்கமாட்டார்கள். இடைக்காலத்தில்,   எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கூறியுள்ளார்.

அமெரிக்காவை தவிர்த்து பிற சந்தைகளில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ள சிட்டிகுரூப் குழுமம் சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய 4 சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியா , சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா , தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய 13 நாடுகளில் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வெளியேறும் நடவடிக்கை எப்போது நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

Editor's Choice

2 வயது மகனை 18 லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜெஜியாங்கில் சுற்றுலா செல்வதற்காக தனது இரண்டு வயது மகனை விற்ற தந்தையின் போக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவியுடனான சண்டையை தீர்க்கவும், குழந்தையை பராமரிக்கும் சுமையில் இருந்து விலகவும் முடிவு செய்த  ஜியாஜியா (Jiajia) என்ற நபர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 2 வயது குழந்தையை விற்பனை செய்துள்ளார்.

குழந்தையின் பெற்றோருக்கு விவாகரத்து ஏற்பட்ட பின்னர், குழந்தை தந்தையின் பராமரிப்பில் இருந்தது. தாயின் பராமரிப்பில் மற்றொரு பெண் குழந்தை சென்றது. வேறொரு நகரத்தில் பணியில் இருந்ததால், குழந்தையை தனது சகோதரர் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னதாக, ஸீ தனது மகனை தனது சகோதரர் லினிடமிருந்து அழைத்துச் சென்றார், முன்னாள் மனைவி, மகனை பார்க்க விரும்புவதாகக் கூறி குழந்தையை வாங்கிச் சென்றார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகும், சிறுவன் வராததால், குடும்ப உறுப்பினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரிணையில் தான் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாயின. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு 158,000 யுவான் (18 லட்சம் ரூபாய்) தொகைக்கு மகனை அப்பாவே விற்றிருக்கும் அவலம் தெரியவந்தது. அந்த பணத்தைக் கொண்டு தனது புதிய மனைவியை அழைத்துக் கொண்டு உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறார்.

பக்கம் 29 / 90