- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 156
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். கடந்த ஆண்டு டிசம்பரில் தனஸ்ரீ சர்மா என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். கடந்த ஆண்டு டிசம்பரில் தனஸ்ரீ சர்மா என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது.
சாலையில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் உரிமம் முக்கியமானது. இது இல்லாமல், வாகனம் ஓட்டும்போது, அபராதம் கட்ட நேரிடும். ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், மீண்டும் புதிய உரிமத்தை பெற முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதாவது முதலில் லேர்னிங் லைசன்ஸ் பெற வேண்டும். அதன் பிறகு நிரந்தர உரிமம் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உரிமத்தின் செல்லுபடியாகும் முன் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
அதற்காக நீங்கள் RTO க்கு செல்ல வேண்டியதில்லை. உங்கள் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகி, கொரோனா தொற்று நோய் காரணமாக, ஆர்டிஓ அலுவலக்ம் சென்று புதுப்பிக்க விரும்பவில்லை என்றால், அதை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- ஒரு லேப்டாப் அல்லது கணினியில் Parivahan.Gov.In என டைப் செய்யவும்
- இப்போது உங்கள் மாநிலத்தையும் நகரத்தையும் தேர்ந்தெடுக்கவும்
- உரிமம் புதுப்பித்தல் ஆப்ஷனை இங்கே கிளிக் செய்யவும்
- அவ்வாறு செய்த பிறகு, உங்கள் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் உள்ளிட வேண்டும்.
- அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், முகவரி ஆதாரம், உங்கள் புகைப்பட அடையாளம் ஆகியவற்றைப் பதிவேற்றவும்.
- இப்போது இதற்கான கட்டணத்தை டெபாசிட் செய்யும் ஆப்ஷன் இருக்கும். அங்கே கட்டணங்களை சமர்ப்பிக்கவும்.
- இந்த செயல்முறையை நிறைவு செய்த பிறகு, அதன் விபரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீகிருஷ்ணா தொடரில் பீஷ்மராக நடித்து பிரபலமானவர் சுனில் நாகர். மகாபலி ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்து இருந்தார். தால் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் கஷ்டப்படுவதாக சுனில் நாகர் தெரிவித்துள்ளார்.
பூமியெங்கும் மக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாயுவை, சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் நாசா
கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் என்ற விண்கலத்துடன் நாசா அனுப்பிய மாக்சி கருவியின் உதவியுடன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு பெட்டியைப் போன்ற வடிவத்தைக் கொண்ட மாக்சி, பெர்செவெரன்ஸ் விண்கலத்தில் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது.
இதே தருணத்தில் மற்றொரு சாதனை செவ்வாயில் படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை செவ்வாயில் பறந்து விஞ்ஞானிகளைச் சிலிர்க்கச் செய்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர், மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது.
தரையில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு மேலே எழுந்து, 2 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்தது இன்ஜெனியூட்டி. பின்னர் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்து தரையிறங்கியது.
அடுத்தடுத்த சோதனைகளின்போது தொலைவு, உயரம், வேகம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆக்சிஜன் தயாரிக்கும் மாக்சியும், செவ்வாயில் பறக்கும் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரும் விண்வெளித் திட்டங்களில் நாசாவின் புதிய முயற்சிகள். இரண்டுமே வெற்றியடைந்திருக்கின்றன.
செவ்வாயின் வளி மண்டலம் 96% கார்பன் டை ஆக்சைடால் நிறைந்தது. ஆக்சிஜன் இருப்பதோ வெறும் 0.13 சதவிகிதம்தான். பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது.
ஆக்சிஜனைப் பிரித்தெடுப்பதை விட கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனைத் தயாரிப்பதே எளிது என விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். கார்பன் டை ஆக்சைடு வாயுவானது இரண்டு ஆக்சிஜன் அணுக்களையும், ஒரு கார்பன் அணுவையும் கொண்டது. இதில் இருந்து ஒரு ஆக்சிஜன் அணுவைப் பிரித்தெடுத்திருக்கிறது மாக்சி. மீதமிருந்த ஒரு கார்பன் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு செவ்வாயின் வளி மண்டலத்திலேயே விடப்பட்டது.
செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம்தான். இதைக் கொண்டு மனிதனால் 10 நிமிடம்தான் சுவாசிக்க முடியும். இதன் மூலம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம். விஞ்ஞானிகளின் பார்வை இதில் வேறு மாதிரியாக இருக்கிறது.
கார்பன் டை ஆக்சைடு செறிந்த செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை மாக்சி தயாரித்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய கருவியை உருவாக்கி விட்டால், விண்வெளி வீரர்கள் ஆக்சிஜனை பூமியில் இருந்து கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது அவர்கள் சுவாசிக்கவும், பூமிக்குத் திரும்பவதற்கான ராக்கெட்டுகள் செயல்படுவதற்கும் பல டன் ஆக்சிஜன் தேவை. அதைக் கொண்டு செல்வது கடினம், அதற்குப் பதிலாக மாக்சி போன்ற கருவியைக் கொண்டு சென்றால் போதும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வரும் நாள்களில் வெவ்வேறு இடங்களில் மாக்சியைக் கொண்டு ஆக்சிஜனை தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாக்சியால் ஒரு மணி நேரத்தில் 10 கிராம் வரை ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
குடிமகன்கள் குடியை நோக்கி சென்றுவிட்டால், மருத்துவமனைப் பற்றாக்குறையும் இருக்காது, இறுதியில் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இல்லை என்கிறார் அதிபுத்திசாலி பெண் டோலி.
சில நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோவை வெளியிட்ட டோலி, எந்தவொரு தடுப்பூசியும் ஆல்கஹால் அளவுக்கு வீரியம் கொண்டதில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆல்கஹால் மட்டுமே சரியான சிகிச்சை தரும், எஞ்சியதெல்லாம் சும்மா என்றும் அவர் சொல்லியிருந்தார். 35 ஆண்டுகளாக தான் மது அருந்துவதாகவும், வேறு எந்த மருந்தும் தேவையில்லை என்றும் டோலி கூறுடிகிறார்.
இன்னொரு வீடியோவில் பேசியுள்ள டோலி, மதுபானக் கடைகளை மீண்டும் திறக்குமாறு அதில் அவர் டெல்லி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கும், தில்லி அரசு இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளாது, ஆக்ஸிஜன் சிலிண்டரின் பிரச்சினையும் நீங்கும். மக்கள் மது அருந்தினால், உடலில் உள்ள கொரோனா வெளியே சென்றுவிடும்”என்று அவர் வீடியோவில் கூறுகிறார்.
இந்த லாக்டவுனிலும் குடிப்பதற்கு உங்களிடம் சரக்கு இருக்கிறதா என்று டோலியிடம் ஒருவர் கேட்கி, தன்னிடம் போதுமான அளவு மது இருந்ததாகவும், ஆனால், இப்போது எல்லாமே தீர்ந்துவிட்டது என்றும் வருத்தப்படுகிறார் ஆண்ட்டி.
அதனால் தான் விரைவில் கடைகளை திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
இவரது வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “தடுப்பூசிகள் போடுவதற்கோ, மருந்துகளை வாங்கி சேர்க்கவோ நான் இங்கு வரவில்லை. வைரஸில் இருந்து என்னை பாதுகாக்க இரண்டு பாட்டில்கள் மதுபானங்களை வாங்க நான் இங்கு வந்துள்ளேன். நான் 35 ஆண்டுகளாக குடித்து வருகிறேன், ஒருபோதும் எந்த மருந்தையும் எடுத்துக் கொண்டதில்லை. குடிப்பவர்கள் அனைவரும் கோவிட்டிலிருந்து பாதுகாப்பாக உள்ளனர்” என அதிரடியாக தெரிவித்தார் டோலி.
வயதான பெண்ணின் தைரியமான மற்றும் வித்தியாசமான அணுகுமுறை பலரை மகிழ்வித்தது, மற்றவர்கள் அவரது கருத்துக்கு மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பது தொடர்பாக ஹவாய் தீவில் வாழ்ந்து வரும் வைதேகி அம்மையார் என்பவர் தொடர்ந்து பேசி வந்தார்.
இவர் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள `தமிழ் இருக்கை அறக்கட்டளை' என்ற அமைப்பு களமிறங்கியது.
இதற்காக 42 கோடி ரூபாய் வரை தேவைப்படவே, மூன்றாண்டுகளாக இதற்கான முயற்சியில் உலக தமிழர்கள் இறங்கினர். 42 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் டாலர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ் இருக்கை அறக்கட்டளை, கனடா தமிழ்க்கழகம் ஆகிய இரண்டும் களமிறங்கின.
`தமிழ் இருக்கைகள் அமைவதனால் என்ன பலன்?' என தமிழ் இருக்கைகளின் குழு ஆலோசகரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான கோ.பாலச்சந்திரன் கேட்டபோது...
``தமிழ் மொழி மற்றும் தமிழரின் வாழ்வின் பண்பாட்டுப் பழைமையைக் காட்டுவதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன. ஒன்று பழந்தமிழ் இலக்கியம். அடுத்து தமிழர்கள் கடலோடிகளாக வாழ்ந்த வணிகத் திறமை, மூன்றாவது தமிழ் இசை ஆகியவை. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கையானது, சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் நோக்கங்களில் ஒன்றாக தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தலைசிறந்த வணிகக் குழுக்களாகத் திகழ்ந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ளது.
அதில், தற்போதுள்ள சூழலில் உலக வணிகத்தின் ஒரு பகுதியை ஆள்பவர்களாக மீண்டும் தமிழர்கள் வர முடியுமா எனவும் ஆராய்வது முக்கிய இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரசீகர்கள், சீனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எப்படி தமிழர்களால் இந்துமகா சமுத்திரத்தை வணிக ஆட்சி நடத்திய மூன்று இனங்களில் ஒன்றாக மிளிர முடிந்தது என்பதை இந்த இருக்கை ஆராயும். அடுத்து, டொரோன்டோ தமிழ் இருக்கையானது, தமிழ் இசையின் பழைமை மற்றும் அதன் சிறப்பு ஆகியவவை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்க இருக்கிறோம்.
இதன்மூலம் பழைமைத் தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டுச் செழுமை தெரிய வரும். இன்றைய தமிழருக்கு அவர்களைப் போல் உயரும் ஊக்கத்தினை அளிக்கும். அதனால் தொடர்ந்து எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்குத் தமிழர்கள் முயல்வார்கள் என்பது எண்ணம்" என தெரிவிக்கிறார் பாலச்சந்திரன்.
பக்கம் 33 / 90



