- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 143
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவ சேவை அணுகுமுறையில் வரையறை செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு கூறியுள்ளது. இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் தொடர்பான ஆதரவு மற்றும் மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா முன்வந்த நிலையில் இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளது.
மேலும் இந்தியாவில் புதிய கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் கடுமையாக உயர்ந்துள்ளன. புதிய கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையை மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா அமெரிக்க குடிமக்களுக்கு சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி விமானங்களை தேர்வு செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இங்குள்ள குடிமக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆலோசனையும் வழங்கியுள்ளது.


















