Editor's Choice

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்தியாவிலும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில்,  மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடையால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனக் கூறி தடையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. 
 
உலகில் அமெரிக்காவே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றும் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட்டால் பிற நாட்டவர்களுக்கு கொரோனா பரவாது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். 
Editor's Choice

ஒருவரை பாலியல் துணைவராகப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.  பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்த முறையை அனுமதிக்கிறது. அதுவும் அரசுப் பணத்திலேயே.

டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் ரோனித் அலோனியின் அறை நீங்கள் எதிர்பார்த்தது போலவேதான் இருக்கும். வாடிக்கையளர்கள் அமர சொகுசான சோபா, விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் ஆகியவை உண்டு.

ஆனால் பக்கத்து அறையைப் பார்த்தால் வியப்படைவீர்கள். மெழுகுவத்தி வெளிச்சத்தில் படுக்கை இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதைக் கூறுவார்கள். இணைசேரக் கற்றுத் தருவார்கள்.

"இணைசேரத் துணை இல்லாவிட்டால் பாலியல் சிகிச்சை முழுமையடையாது. துணை இல்லாதவர்களுக்கு அவர்களின் வெற்றிடத்தை வாடகைத் துணைவர் மூலமாக நிரப்புகிறோம்," என்கிறார் அலோனி

இந்தமுறையை விமர்சிப்பவர்கள் இதை விபச்சாரத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் அரசு இந்த முறையை முழுமையாக அனுமதிக்கிறது. வீரர் காயமடைந்து, பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.

பிறருக்கு இன்பத்தை அளிக்க முடியும் அல்லது பிறரிடமிருந்து இன்பம் பெற முடியும் என்று அனைவரும் உணர வேண்டியிருக்கிறது என்கிறார் அலோனி. பாலியல் மறுவாழ்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர்.

"சிகிச்சை பெறவே இங்கு வருகிறார்கள். இன்பமடைவதற்காக வருவதில்லை. அதனால் இது விபச்சாரம் இல்லை" என்கிறார் உறுதியாக.

"இங்கு 85 சதவிகிதம் நெருக்கம், தொடுதல், அளித்தல், பெறுதல், தொடர்புகொள்ளுதல் ஆகியவைதான். இணைசேருவதுடன் சிகிச்சை நிறைவுபெற்றுவிடுகிறது"

"இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே எப்போதும் போர்ச்சூழல்தான் நீடித்து வருகிறது. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் காயமடைந்த, இறந்துபோன ஒருவரையாவது தெரியும். அதனால் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்" என கூறுகிறார் அலோனி.
 
Editor's Choice

இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

அவர் பணிக்குச் செல்லாத போதும், கடந்த 15 ஆண்டுகளில் அவருக்கு சுமார் 5.38 லட்சம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.8 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சியாசியோ அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ஆறு மேலாளர்களிடம், அந்த ஊழியர் வராமல் இருந்ததைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதோடு பணிக்கு வராமல் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவரும், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார் என இத்தாலிய செய்தி முகமை கூறுகிறது.

வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், தன் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என தன் மேலாலரை மிரட்டியதாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

தொடக்கத்தில் இருந்த மேலாளர் பணி ஓய்வு பெற்ற பின், அவர் பதவிக்கு அடுத்தடுத்து வந்தவர்களின் கவனத்துக்கோ, மனித வளத் துறையினர் கவனத்துக்கோ ஒரு நபர் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பது செல்லவில்லை என காவல் துறை கூறியுள்ளது.

Editor's Choice

இந்தோனேசிய கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காணாமல் போன நீர்மூழ்கியின் பெயர் கேஆர்ஐ நாங்கலா 402. அக்கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்தோனீசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், புதன்கிழமை அதிகாலை அந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பிறகு தான், அக்கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தோனேசிய நாடு இயக்கிக் கொண்டிருந்த ஐந்து நீர் மூழ்கிக் கப்பல்களில் ஒன்று இது.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தோனேசியாவின் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போயிருக்கிறது என இந்தோனேசிய கப்பல் படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் உலகத்தில் நடந்திருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜென்டினா பாதுகாப்புப் படையின் நீர் மூழ்கிக் கப்பல் 44 வீரர்களுடன் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குப் பிறகு, காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கிடைத்தன. அதன் பின், அந்த கப்பல் அழிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

மருத்துவ காப்பீடுகள், இரு வகையிலானது, ஒன்றில் நாம் பணம் செலுத்தி விட்டு பின்னர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறுவது. மற்றொன்று, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவது. இதில் காப்பீட்டு நிறுவனங்கள் நேரிடையாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தும். 

இதில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு  செய்துள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இந்திய காப்பீட்டுத் துறை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பேசியதைத் தொடர்ந்து, கோவிட் -19 சிகிச்சைக்கு, காப்பீட்டின் கீழ், பணமில்லா சிகிச்சை வசதியை வழங்காத  மருத்துவமனைகளுக்கு எதிராக  கடும் நடவடிக்கை நடவடிக்கை  இந்திய காப்பீட்டுத் துறை கட்டுப்பாட்டு ஆணையம் (IRDAI)  மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பணமில்லா சிகிச்சை வசதி அளிக்க மருத்துவமனை மறுத்தால், அது தொடர்பாக https://igms.irda.gov.in என்ற IRDAI வலைதளத்தில், புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. @irdai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் அனுப்பலாம் என மருத்துவ காப்பீடு கட்டுபாட்டு ஆணையம் கூறியுள்ளது.

 இது வரை இல்லாத அளவிற்கு, சுகாதார காப்பீட்டிற்கான க்ளைம்கள் வருவதாக கூறியுள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், பணத்தை உடனடியாக கொடுக்க முடியாத அளவிற்கு, மிக அதிகமாக ஒருவருக்கு 1.5 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  1,62,63, 695 என்ற அளவில் உள்ளது.

இது வரை இல்லாத அளவிற்கு, சுகாதார காப்பீட்டிற்கான க்ளைம்கள் வருவதாக கூறியுள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், பணத்தை உடனடியாக கொடுக்க முடியாத அளவிற்கு, மிக அதிகமாக ஒருவருக்கு 1.5 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

Editor's Choice

அமெரிக்காவின் நீண்ட சிறார் சிறை வாசி, அண்மையில் விடுவிக்கப்பட்டார். சுமார் 60 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார் அவர்.

செவிலியராகப் பணி புரிந்த தனது தாயாருடனும் மெக்கானிக்காக இருந்த தந்தையுடனும் தனது தம்பி, தங்கையுடனும் தெற்கு ஃபிலடெல்ஃபியாவிலிருந்து ஒரு தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குக் குடிபெயர்ந்தபோது லிகானுக்கு வயது 13.

1953ஆம் ஆண்டில், ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் அந்தச் சம்பவம் நடந்தது. லிகான் நெருக்கமில்லாத ஒரு சிலருடன் அவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, மது அருந்தியிருந்த சிலர் மீது மோதிவிட, அங்கு தொடங்கியது சிக்கல். மது அருந்தப் பணம் கேட்ட விவகாரம் பெரிதாகியது.

அன்றிரவு ஏற்பட்ட கத்தித் குத்துச் சம்பவத்திலும் தொடர்ந்த வன்முறையிலும் இருவர் உயிரிழந்ததாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் கைது செய்யப்பட்டது லிகான் தான். வீட்டிலிருந்து தொலைவிலுள்ள ஒரு காவல் நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்ட உதவி மறுக்கப்பட்டு, ஐந்து நாட்கள் அங்கு காவலில் வைக்கப்பட்டார். தன்னைப் பார்க்க வந்த தனது பெற்றோர் திருப்பியனுப்பப்பட்டனர். 13 வயதே ஆன அந்தச் சிறுவன், கொலைக்குற்றம் சாட்டப்பட்டான்.

“தான் யாரையும் கொலை செய்யவில்லை,“ என்பது லிகானின் வாதமாக இருந்தது.

குற்றவியல் விசாரணையை லிகான் எதிர்கொண்டார், அங்கு அவர் வழக்கின் உண்மைகளை ஒப்புக் கொண்டார், கொடூரமான இரண்டு கொலைகளைச் செய்ததாக அவர் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. பரோல் இல்லாத கட்டாய ஆயுள் தண்டனை அந்தச் சிறுவனுக்கு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் அவன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது முன்னறிவிக்கப்பட்ட முடிவு என்பதால், இது வழக்கமான நடைமுறை தான். ஆனால் தனது தண்டனையின் முழு விவரங்களையும் அறியாமலேயே சிறைக்குச் சென்றான் அந்தச் சிறுவன்.

AE 4126 என்ற எண் கொண்ட கைதியாகச் சென்ற லிகான் தனது தண்டனைக் காலம் எவ்வளவு என்று ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை.

68 ஆண்டுகளில் ஆறு சிறைகளில் வாழ்ந்த அவர், ஒவ்வொரு முறையும் சிறை வாழ்க்கையின் வழக்கத்திற்குப் பழகிக்கொண்டார்."6 மணிக்கு புல் ஹார்ன் மூலம் எழுப்பி, 'எண்ணிக்கைக்கு எழுந்து நிற்கவும், இது எண்ணிக்கை நேரம், 7 மணி உணவு நேரம், 8 மணி நேரம் வேலை நேரம்," என்று கூறுவார்கள்.

இவர் சில காலம் சமையல் மற்றும் சலவைப்பணியில் ஈடுபட்ட லிகான், பெரும்பாலும் ஒரு துப்புரவுப் பணியை செய்தார்.

”சுமார் 53 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், ஒரு வழக்கறிஞர் லிகானைப் பார்க்க விரும்புவதாக அவரிடம் கூறப்பட்டது.

பிராட்லி எஸ் பிரிட்ஜ். அடுத்த பெரிய சட்டப் பிரச்னையாக அவர் கருதிய, பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சிறார்கள் குறித்த விஷயத்தை கையிலெடுத்தார்.

அந்த நேரத்தில், பென்சில்வேனியாவில் இதுபோன்ற சூழ்நிலைகளில் 525 கைதிகள் இருந்தனர், இது அமெரிக்காவிலேயே மிக அதிகமானது என்று பிரிட்ஜ் கூறுகிறார். ஃபிலடெல்ஃபியாவில் 325 பேர் இருந்தனர். அதிலும் மீக நீண்ட காலம் சிறையில் இருந்தவர் லிகான்.

”இந்தச் சந்திப்பு தான் லிகானின் கண்களைத் திறந்தது. அவரது தண்டனையைச் சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்த மனுவின் நகலை பிரிட்ஜ் அவருக்குக் காட்டியபோது தான் லிகான் தனது சிறைவாசத்தின் விதிமுறைகளை முதல்முறையாக அறிந்து கொண்டார்.

அடுத்த 15 ஆண்டுகளில் அவர் எடுத்த சில முடிவுகளை யாரும் புரிந்து கொள்வது சற்று சிரமம் தான். விடுதலையாக அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நிராகரித்தார். அது வாழ்நாள் முழுவதும் அவருடன் தொடர்ந்து வரும் ஒரு இழிவாகவே அவர் கருதினார்.

2016 ஆம் ஆண்டில், அமெரிக்க உச்சநீதிமன்றம் அனைத்து சிறார் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும் தண்டனை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அடுத்த ஆண்டு, லிகானின் தண்டனைக் காலம் 35 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது அவர் முடித்திருந்த தண்டனைக் காலம் அவரை பரோலுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது.

2020 நவம்பரில் நீதிபதி அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். பிப்ரவரி 11 அன்று லிகானை அழைத்துச் செல்ல பிரிட்ஜ் மாண்ட்கோமெரி கவுண்டிக்குச் சென்றபோது, அந்த முன்னாள் கைதி மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டார்.

"நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டனர். 83 வயதான இவர், இவ்வளவு காலம் காத்திருந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார். என் வாழ்நாள் முழுவதையும் செய்து வந்ததைத்தான் செய்யப்போகிறேன். துப்புரவு பணியை எனக்குக் கொடுங்கள்.” என்கிறார் இவர்.

பக்கம் 38 / 90