Editor's Choice

தமிழ் சினிமா நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரைசா வில்சன் சமீபத்தில் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது அழகுக்காகவும் மிருதுவான சருமத்திற்காகவும் புகழ் பெற்ற ரைசா வில்சன், ஒரு தோல் நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது நிலைமைக்கு காரணமான தோல் மருத்துவரை இன்ஸ்டாகிராமில் ரைசா (Raiza Wilson) வெளுத்து வாங்கினார். அந்த மருத்துவர் தனக்கு தேவையில்லாத தோல் சிகிச்சையை மெற்கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ரைசா தனது பதிவில், " ஒரு எளிய முக சிகிச்சைக்காக நேற்று @drbhairavisethil இடம் சென்றேன். எனக்குத் தேவையில்லாத ஒரு சிகிச்சையை மேற்கொள்ளும்படி அவர் என்னை கட்டாயப்படுத்தினார். என் முகத்தின் நிலைமை அதன் விளைவாகும். இன்று என்னைப் பார்க்கவோ அல்லது என்னிடம் பேசவோ அவர் மறுத்து விட்டார். அவர் ஊரில் இல்லை என அங்குள்ள ஊழியர்கள் கூறினார்கள்" என்று எழுதியுள்ளார். 

ரைசாவின் பதிவு வைரலானவுடன், தாங்களும் அதே மருத்துவரால், இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக பலர் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். Behanced Luxe Dermatol என்ற கிளினிக்கை ரைசா தனது பதிவில் டேக் செய்துள்ளார். மக்களுக்கு அந்த நிறுவனம் குறித்த விழிப்புனர்வை அளிக்கவும், அவர்களை உஷார் படுத்தவும் அவர் இப்படி செய்துள்ளார். டாக்டர் பைரவி செந்தில் என்ற மருத்துவரின் பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Editor's Choice
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 
 
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்களுக்கு கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
 
இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “ இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மற்றும் பரப்பும் அபாயம் உள்ளது. 
 
எனவே, இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், பயணத்திற்கு முன்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில்  1,903 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 860 ஆக அதிகரித்தது.
Editor's Choice

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படபிடிப்பு நடைபெற்ற நிலையில், முன்னதாக படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடல் நல காரணங்களை மேற்கோள் காட்டி, நெடுநாட்களாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போவதாக கூறி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போது அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில்  அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் மீண்டும் சிக்கலில் உள்ளது. 

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை போல் தோன்றிய நிலையில், ஹைதராபாத்தில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படபிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, முக்கிய படங்களின் படபிடிப்புகள் அடுத்ததடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்பட ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் (EVP film city) படப்பிடிப்பு நடக்கும் என கூறப்பட்டது. அங்கு தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய  அளவில் படபிடிப்பிற்கான செட்டிங்குகளை அமைத்துள்ளனர், ஹைதராபாத் தவிர படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியைச் சுற்றி நடக்கும் என கூறப்படுகிறது.

Editor's Choice

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகம் (NIT) இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றது. இங்கு பொறியியல் தொழில் நுட்பத்தில் இளநிலைப் பட்டம் தொடங்கி, ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகின்றன. அதனோடு இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையோடு இணைந்து ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில்நுட்ப படிப்புகளுக்காக பெயர் பெற்ற என்.ஐ.டியில் கடந்த ஆண்டு முதல் ஆங்கில முதுகலைப் பட்டப் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டிற்கான (2021 -22)ம் எம்.ஏ ஆங்கில மொழி இலக்கிய படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர்தொழில் முறைக் கல்விக்கேற்பவும் கலை, அறிவியல், தொழில்நுட்பங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் போக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் படைப்பாற்றல், தனித்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள என்.ஐ.டி M.A படிப்பில் சேர வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களை, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்கிற மின்னஞ்சல், http/admission.nitt.edu/ma2021 online portalலிலும் 0431 250 3690, 250 3691,94860 01130 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும்,  சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையத்திலேயே வரும் 30ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.   25 இடங்களுக்கு கடந்த ஆண்டு 236 பேர் விண்ணப்பித்தனர். நடப்பாண்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நகரம் மட்டுமின்றி மாவட்டம், கிராமங்கள் அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.
 
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். போட்டியை கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. 
 
இதையொட்டி 8 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விவரத்தை டி.என்.பி.எல். நிர்வாகத்துக்கு கடந்த 18-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க கெடுவிதிக்கப்பட்டிருந்தது. இதன்படி சமர்பிக்கப்பட்ட அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அஜித்குமார், விக்ரம் ஜாங்கிட் ஆகியோரை விடுவித்துள்ளது. அருண், விஜயகுமார், ஆர்.சதீஷ், ராம் அர்விந்த், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், சந்தானசேகர், எம்.சித்தார்த், சுஜய், ஹரிஷ்குமார், அருண் குமார், பிரசித் ஆகாஷ், என்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், ராகுல் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் பெறப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் என்று மொத்தம் 19 பேர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
கோவை கிங்ஸ் அணி டி.நடராஜன், ஷாருக்கான் அஷ்வின் வெங்கட்ராமன் உள்பட 18 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ் அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, ஷாஜகான், ரோகித் உள்பட 17 வீரர்களையும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் மற்றும் பெரியசாமி, கோபிநாத் உள்பட 15 வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி அனிருதா, ரஹில் ஷா, அந்தோணி தாஸ், முரளிவிஜய் உள்பட 19 வீரர்களையும், நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி பாபா அபராஜித், பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன் உள்ளிட்ட 15 வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், விவேக், ஹரிநிஷாந்த் உள்பட 18 வீரர்களையும், திருப்பூர் தமிழன்ஸ் அணி தினேஷ் கார்த்திக், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட் உள்பட 15 வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. திருப்பூர் தமிழன்ஸ் அணி அபினவ் முகுந்த், மொகித் பன்ஹால், சித்தார்த் அகுஜா, ரூபன்ராஜ், அபினவ் விஷ்ணு ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.
 
விருப்பம் உள்ள விடுவிக்கப்பட்ட வீரர்களும், மற்ற வீரர்களும் டி.என்.பி.எல். வீரர்களின் ஒதுக்கீடு பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்யலாம். tnpl.tnca.cricket என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை அளிக்க அனுமதி இல்லை.
 
வீரர்களின் ஒதுக்கீடு நிகழ்ச்சியை மே 7-ந்தேதி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கு முன்பாக எந்த அணிக்கு முதலில் வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குவது என்பது தொகை மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குரிய அணி நிர்வாகிகளின் சந்திப்பு ஏப்ரல் 30-ந்தேதி நடைபெறும் என்று தெரிகிறது.
Editor's Choice
கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
 
உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்ட அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
 
இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இதில், 100 வயது கடந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
 
இதன்படி தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்து கொள்ளும்.  தனியார் தடுப்பூசி வினியோகம் செய்வோர் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.

பக்கம் 40 / 90