Editor's Choice

பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் ஒரே நோக்கத்திற்காக புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

QR Code

இந்த அம்சம் கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் தொலைபேசியில் புதிய தொடர்புகளை சேமிக்க முடியும். இதற்காக, நீங்கள் மற்றொரு நபரின் வாட்ஸ்அப்பின் QR குறியீட்டை  ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது உங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும். முக்கியமானது என்னவென்றால், இந்த QR குறியீட்டை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் அமைப்புகளில் இந்த விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

Advanced Search Option

வாட்ஸ்அப் பயன்பாட்டின் மேலே இந்த அம்சத்தைக் காண்பீர்கள். இங்கே கிளிக் செய்வதன் மூலம், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணத்தை எளிதாகக் காணலாம்.

Disappearing Messages

இந்த அம்சம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பழைய சாட்களை தானாக நீக்க விரும்புவோருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். பழைய சாட் ஐ நீங்கள் குறுக்கிட விரும்பும் நபரின் சாட் பெட்டிக்குச் சென்று காணாமல் போன செய்தியை இயக்கவும். இந்த அம்சம் இயக்கப்பட்ட பிறகு, 7 நாட்களுக்கு முந்தைய சாட்கள் நீக்கப்படும்.

Editor's Choice

மியான்மர் நாட்டில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதால், அந்நாட்டு ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த போராட்டம் தற்போது வன்முறைப் போராட்டமாக மாறி 50 உயிர்களை பலி வாங்கியுள்ளது.

மியான்மரில் நடக்கும் சில வன்முறை செயல்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதை காண்போரை பதறவைக்கும் காட்சிகள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் மண்டியிட்டு ராணுவ வீரர்களிடம் கோரிக்கை வைக்கும் புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 45 வயதான கன்னிகாஸ்திரி ஆன் ரோஸ், குழந்தைகளை ராணுவம் தாக்கக் கூடாது என்று மண்டியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். இவரது இந்த புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது. குழந்தைகளுக்கு பதிலாக வேண்டுமானால் எனது உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ராணுவத்தினரின் அத்துமீறலால் மியான்மரில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது மனித உரிமை மீறல் எனக் கூறப்படும் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு வன்முறையை தடுக்கவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Editor's Choice

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர், ஈ-காமர்ஸ் பக்கங்களுடன் இணைக்கும் ட்வீட்களைக் காண்பிப்பதற்கான புதிய வழியை சோதித்து வருகிறது.

ஒரு புதிய ட்விட்டர் கார்டு வடிவமைப்பைக் கொண்டு, நிறுவனம் ஒரு பெரிய "ஷாப்" பொத்தானை உள்ளடக்கிய ட்வீட்களை பரிசோதித்து வருகிறது. மேலும், பொருட்களின் பெயர், கடையின் பெயர் மற்றும் விலை ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்களின் விவரங்களை அந்த ட்வீட்டிலேயே நேரடியாக ஒருங்கிணைக்க ட்விட்டர் நிறுவனம் முயற்சிக்கிறது.

"சூப்பர் ஃபாலோ" சந்தாவிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன், ஒரு வடிவமைப்பாளர் தளமாக மாறுவதற்கான ட்விட்டரின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வடிவமைப்பு செயல்படக்கூடும்.

செய்திமடல்கள், உள்ளடக்கம், மற்றும் தள்ளுபடிகள் போன்ற சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான சலுகைகளை பெற ஒரு குறிப்பிட்ட கணக்கைப் பின்பற்ற இந்த புதிய அம்சம் ட்விட்டர் பயனர்களை அனுமதிக்கும்.

மக்களை ஷாப் செய்ய தூண்டும் அளவு போடப்படும் ட்வீட்கள் மூலம், நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்கள் பயனர்களை தங்கள் பொருட்களை நோக்கி அழைத்துச் செல்லலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் கடந்த வாரம் தனது முதலீட்டாளர் தினத்தின்போது ஈ-காமர்ஸில் தான் எடுக்கவிருக்கும் எதிர்கால முதலீடுகளுக்கான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் பற்றி சுருக்கமாகத் தெரிவித்தது. எனினும், இது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

"பிராண்டுகளுடன் தொடர்புகொள்வதற்கும் தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும் மக்கள் ட்விட்டருக்கு வருகின்றனர். இதில் விற்பனையை செயல்படுத்த சில வணிகங்கள் ஏற்கனவே ஆக்கபூர்வமான வழிகளை வளர்த்துக் கொண்டுள்ளது. 

"ஒரு சில கிளிக்குகளில் உங்களுக்கு பிடித்தமான ஒரு பிராண்டிலிருந்து ஒரு புதிய தோல் பராமரிப்பு பிராடெக்ட் அல்லது நவநாகரீக ஸ்னீக்கரை எளிதில் கண்டுபித்து விரைவாக வாங்கவும் முடிந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்" என்று டிவிட்டர் நிறுவனம் கூறுகிறது.

“ட்விட்டர் வர்த்தகத்தின் இகாமர்ஸ் திறனைப் பற்றி உற்சாகமாக இருந்தாலும், இவை அனைத்துமே இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

மேகன் மார்கல் ஓப்ரா வின்ப்ரேவுக்கு கொடுத்த பேட்டி தற்போது பிரிட்டன் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேகன் மார்க்கல் பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தையின் நிறத்தை வைத்து விமர்சித்ததாக பேட்டியில் தெரிவித்திருந்தது தற்போது பிரிட்டன் அரச குடும்பத்தினர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஹாரி-மேகன் ஆகிய இருவரையும் பேட்டிகண்ட பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா, முன்னதாக விளக்கம் ஒன்றை அளித்தார். இளவரசர் பிலிப், ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் மேகன் மற்றும் அவரது மகன் ஆர்ச்சி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் இணைந்த முதல் கருப்பின மருமகள் மேகன் மார்கல் ஆவர். பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு மற்றும் குடிமக்களால் பெரிதும் மதிக்கப்படும் அரச குடும்பத்தில், கருப்பின பெண்ணிடம் இனப்பாகுபாடு காட்டப்பட்டது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெரும் பேசுபொருள் ஆகியது. மேகன்-ஹாரி ஆகிய இருவரும் அரச குடும்பத்திலிருந்து பிரிந்ததற்கு இனப்பாகுபாடுதான் காரணமா என தற்போது ஊடகங்கள் விவாதித்து வருகின்றன.

புகைப்பட நிபுணர் நிசான் ஹாரிமேன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஓபரா வின்ப்ரே பேட்டியில் விரைவில் தங்களுக்கு ஓர் மகள் பிறக்க உள்ளார் என தெரிவித்து இருந்தார் மேகன் மார்கல். அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Editor's Choice

இஸ்ரேலைச் சேர்ந்த டீ-.ஐ.டி., என்ற நிறுவனம், ஆழ்மன நினைவலை என்ற பொருள்படும், 'டீப் நோஸ்டால்ஜியா' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் இந்த நுட்பத்திடம், பழைய புகைப்படம் ஒன்றைக் கொடுத்துவிட்டால், அந்த உருவத்திற்கு அசைவைத் தந்து, கண் சிமிட்டி, சிரிக்கும் சலனப்படமாக மாற்றிக் காட்டி அசத்துகிறது.

காலமாகிவிட்ட ஒருவரை இதுபோல, சலனப்படமாக பார்க்கும்போது ஏற்படும் பெருமகிழ்ச்சியை அளவிட முடியாது. அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை, 'மைஹெரிடேஜ்' என்ற நிறுவனம் தன் இணைய தளத்தில் பயன்படுத்த துவங்கிய சில மணி நேரங்களில், 10 லட்சம் பேருக்கு மேல் தங்கள் காலமான உறவினர்களின் படங்களைத் தந்து, அவர்களது அசைவுகள் அடங்கிய படத்துணுக்கை பெற்றுக்கொண்டனர்.

சிலருக்கு, காலமான உறவினரை இப்படி பார்ப்பது பெரும் அதிர்ச்சியை, சங்கடத்தை தரக்கூடும். எனவே, மைஹெரிடேஜ் நிறுவனம், இது எல்லோருக்குமானது அல்ல என, எச்சரிக்கை செய்கிறது. மேலும் இதை சிலர் தவறாக பயன்படுத்துவர் என்பதால், இத்துடன் குரல் சேர்க்கப்படமாட்டாது எனவும் அறிவித்து உள்ளது.

Editor's Choice

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. இந்த இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18 – 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்திற்கு பதிலாக இறுதி போட்டியை வேறொரு மைதானத்தில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா தொற்றின் பரவலினால் வீரர்களை பயோ பபூளில் வைப்பது சற்று சவாலான காரியம் என்பதால் இந்த திட்டத்தை ஐசிசி முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும் ஐசிசி பேசி வருகிறது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக அது நியூஸிலாந்திலுள்ள சௌதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். சௌதாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மைதானத்தில் பயோ பபுளில் வீரர்களை வைத்து போட்டியை நடத்துவது எளிது என்பதால் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பக்கம் 18 / 74