Editor's Choice

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் சார்பில் ஆறுமாதகால சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியைப் பெறுவதன் மூலம் நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாறமுடியும்.

சிறப்பம்சங்கள்

  • சுய வேலை வாய்ப்பு பெறலாம்

  • விற்பனையாளர்களாகலாம்

  • உற்பத்தியாளர் ஆகலாம்

  • விவசாயத் தொழில் முனைவோர் களாகவும் வங்கிகளில் உதவி பெற முடியும்

  • விவசாயத் தொழில் பயிற்சி கொடுப்பவர்களாகச் செயல்படலாம் விவசாய எந்திரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

சான்றிதழ் பாடங்கள்

  • அலங்காரத் தோட்டம் அமைத்தல்

  • அங்கக வேளாண்மை

  • பட்டுப் புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்

  • நவீன பாசன முறை மேலாண்மை

  • திடக்கழிவுகள், மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்களும்

  • தேனீ வளர்ப்பு

  • நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

  • காளான் வளர்ப்பு

  • ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்

  • தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்

  • மூலிகைப் பயிர்கள்

  • பண்ணைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல்

  • தோட்டக்கலைப் பயிர்களுக்கு நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பெருக்க முறைகள்

  • பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல்

  • சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்

  • மலர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்

  • பருத்தி சாகுபடித் தொழில்நுட்பங்கள்

  • காய்கறி விதை உற்பத்தி

  • நவீன களை மேலாண்மை

  • வீடுதோறும் விவசாயம்

  • தீவன உற்பத்தி

  • இரசாயனம் மற்றும் நச்சுப் பொருட்கள் கையாளுதல்

  • தோட்ட மேற்பார்வையாளர்களுக்கான திறன் மேம்பாடு

  • தேயிலை சாகுபடி நுட்பங்கள் (கோத்தாரி வேளாண்மை மையம், குன்னூர்)

  • தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான வேளாண் அடிப்படையிலான ஆடை வடிவமைப்பு

  • வனவியல் தோட்ட தொழில்நுட்பம்

  • தொழில்துறை வேளாண் வனவியல்

நேர்முகப்பயிற்சி வகுப்புகள்

மாதம் ஒரு சனிக்கிழமைகளில் நடைபெறும்

தகுதி

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் பயிற்சி கட்டணம் ரூ. 2,500

வயது

வயது வரம்பு இல்லை

மொழி  

எளிய தமிழ் வழிக் கல்வி

தங்களது மாவட்டங்களில் உள்ள வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள்,வேளாண் அறிவியல் மையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் விபரங்களுக்கு 04226611229 /94421 11048 /9489051046 என்ற தொலைபேசி எண்களையும், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. என்ற மின்னஞ்சல் மற்றும் www.tnau.ac.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Editor's Choice
அரசு ஐடிஐ யில் 2020 - 2021 ஆம் ஆண்டு மாணவ/மாணவிகள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை வரவேற்கப்படுகின்றன
 
10வது மற்றும் 8 வது தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
 
மாத ஊக்கத்தொகை ரூபாய் 500.
 
லேப்டாப்.
 
புத்தகங்கள்.
 
வரைபட கருவிகள்.
 
சைக்கிள்.
 
ஷூ.
 
சீருடை.
 
பஸ் பாஸ்,
 
என அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும்.
 
படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங்( தொழிற்சாலைகளில் பயிற்சி )
 
படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு...
 
பதிவுக்கு
 
 
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் போன்ற இடங்களில் உதவி மையம் மூலமாக நேரடியாக வருகைபுரிந்து விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.
 
1) 8th/10thமதிப்பெண் பட்டியல்.
 
2) மாற்றுச் சான்றிதழ்
 
3) சாதிச்சான்றிதழ்
 
4) ஆதார் அட்டை.
 
5) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
 
6) விண்ணப்பக் கட்டணம் :50 ரூபாய்
 
தொடர்புக்கு:
 
துணை இயக்குநர்/முதல்வர்
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
044-26252453
உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மற்றும்
என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ளவும்..
Editor's Choice

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வரும் 29ம் தேதி இணையவழி அங்கக வேளாண்மை குறித்த சிறப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி, கீழக்கண்டத் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது.

  • இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை

  • இயற்கை முறையில் களை மேலாண்மை

  • இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல்

  • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு

  • அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத்திட்டம்

ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமான 590 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வங்கி விவரம் (Bank Details)

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, (State Bank Of India) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிளை A/C No. 37015410509 IFSC Code - SBIN 002274

கட்டணம் மற்றும் பதிவு குறித்த விவரங்களை 94437 78628 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது organic tnau.ac.in-க்கு மின்னஞ்சல் செய்யலாம்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 641 003

என்ற முகவரியிலும், 0422- 6611206/2455055/9443778628 என்ற எண்களிலும், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Editor's Choice
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் சட்டம்-1961, இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
 
Fitter fresher - 20
 
Electrician fresher - 20
 
பயிற்சி காலம்: 2 ஆண்டு
 
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.
 
கல்வி தகுதி: 2018, 2019 மற்றும் 2020 ஆண் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
Welder fresher - 20
 
Medical Lab Technician Pathology - 10
 
Medical Lab Technician Radiology - 05
 
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.
 
கல்வி தகுதி: அறிவியல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
வயதுவரம்பு: 01.06.2020 தேதியின் படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை:
 
www.nlcindia.com என்ற இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்திதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு அதனுடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது அலுவலகத்தில் உள்ள பெறுதல் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
 
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம் - 20,
நெய்வேலி - 607803.
 
அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் 24.09.2020-இல் இணையதளத்தில் வெளியிடப்படும் .
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2020
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/app-aug-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Editor's Choice

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டயப்படிப்புகளுக்கான 2020-21ம் ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை இணையதளம் வாயிலாகத் துவங்கியது.

பட்டயப்படிப்புகள் (Diploma)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் (TNAU) கீழ் இயங்கி வரும் 3 உறுப்புக் கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்புக் கல்வி நிலையங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் (Diploma) கற்பிக்கப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் உள்ள 860 இடங்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். நீ.குமார் இணையதள வாயிலாகத் துவக்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள https://tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவியாக இருக்கும். மாணவர்களின் வசதிக்காக பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (https://tnauonline.in) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக (online) பூர்த்தி செய்து பின்பு பதிவிறக்கம் (Download) செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரியக் கட்டணம் (Demand Draft)மற்றும் சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை, அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும், இணையதள வாயிலாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

கடைசிநாள் (Last Date)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 16.10.2020. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் (கேட்பு வரைவோலை) தபால் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.10.2020 மாலை 5 மணி ஆகும்.

தரவரிசை (Ranking)

தரவரிசைப்பட்டியல் வரும் 29.10.2020 அன்று வெளியிடப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்க்கை) தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

உயர் கல்வியைத் தொடர இயலாதவர்களுக்கு வேளாண்மைப் பட்டயப் படிப்பில், ஓர் அரிய வாய்ப்பை அளிக்கும் விதமாக மூலிகை அறிவியல் (Herbal Science)பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலைத்தூரக்கல்வி இயக்ககம் சார்பில் இந்த பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பட்டயப்படிப்பைக் கற்பதன் மூலம், பின்வரும் பயன்களை அடைய முடியும்.

அவை

  • மூலிகைப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு

  • மூலிகைப் பயிர்கள் ஏற்றுமதி குறித்த அறிவு

  • மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு

  • சுய வேலை வாய்ப்பு

  • வேளாண் சார்ந்த நிறுவனங்களில் பணிக்கான வாய்ப்பு

  • தனியார் பண்ணைகளில் மேலாளராக வாய்ப்பு

  • வங்கிகளில் வேளாண் கடன் கிடைக்க வாய்ப்பு

கல்வித் தகுதி       - 10ம் வகுப்பு தேர்ச்சி

காலம்                   - ஓராண்டு (இரண்டு பருவங்கள்)

பயிற்று மொழி    -  தமிழ்

வயது வரம்பு        - 18 வயது பூர்த்தியானவர்கள் / உச்சவரம்பு கிடையாது

நேர்முகப் பயிற்சி வகுப்புகள்

மாதத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும். பருவத்திற்கு, 5 மாதங்களில், 10 நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

பயிற்சிக் கட்டணம் - ரூ.10,000/ பருவத்திற்கு

பாடத்திட்டங்கள்

முதல் பருவம்  (First Semester)

  • இயற்கைச் சூழலில் மூலிகைப் பயிர்கள் விநியோகம் மற்றும் பராமரிப்பு மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் நாற்றங்கால் தொழில்நுட்பம்

  • முக்கிய மூலிகைப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி

2ம் பருவம் (Second Semester)

  • முக்கிய நறுமணப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி

  • மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்

  • மூலிகை பொருட்களின் தரக் கட்டுப்பாடு

  • மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்

  • மேலும் விபரங்களுக்கு

04226611229 /94421 11048/9489051046 என்ற தொலைபேசி எண்களிலும், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற E-mailலிலும், www.tnau.ac.in என்ற Website-லிலும் தொடர்பு கொள்ளலாம்.

பக்கம் 84 / 90