Editor's Choice
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வேளைகளிலேயே வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் மேலும் பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் “டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையின்றி பொது வெளியில் நடமாட வேண்டாம். குளிரை எதிர்கொள்ள வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஆல்கஹால் பானங்கள் அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலங்களில் மக்கள் மதுபானங்களை அருந்த வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

 

 
 
 
 
Editor's Choice
சாவித்ரி தன் கடைசி காலத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வறுமையில் வாடினார். காஞ்சனா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக வேலை செய்தவர். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நான் ஏன் பிறந்தேன்’ ‘சிவந்த மண்’ படத்தில், ‘சாந்தி நிலையம்,’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். சிலரால் ஏமாற்றப்பட்டு சொத்துகளை இழந்தார். வறுமை காரணமாக ஒரு கோவிலில் வேலை செய்தார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்துகளை மீட்டார். அந்த சொத்துகளை எல்லாம் திருப்பதி கோவிலுக்கு எழுதி கொடுத்து விட்டார்.
 
ஸ்ரீவித்யா சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இரவு பகலாக நடித்து உழைத்த பணத்தையும், சொத்துகளையும் இழந்தார். சில்க் சுமிதா சொந்த படம் எடுத்து, சொத்துகளை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இப்போது உள்ள நடிகைகளில் நம்பிக்கை துரோகத்தால் சில கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்தவர், நமீதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும் இரவு பகலாக நடித்து நிறைய சம்பாதித்தார். அந்த பணத்தை ‘ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்தார். சரியான வழிகாட்டுதலும், புத்திசாலித்தனமும் இல்லாமல், பாதி சொத்துகளை இழந்து விட்டார். எஞ்சியிருக்கும் சொத்துகளை காப்பாற்றுவதற்காக திடீர் திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த பட்டியலில், பானுப்ரியாவும் இருக்கிறார். சம்பாதித்த பணத்தை சரியாக காப்பாற்றாததால், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்து விட்டார்.
 
Editor's Choice

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப். 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழ்களுக்கு இது பொருந்தும் என அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுபிக்கவும் கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதலில் ஜூன் 30 வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்பு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதற்கு பின் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் இந்த கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Editor's Choice
Editor's Choice

சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும்.

ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற, புரம், வரம் என முடியும் ஊர்கள், எம்.ஜி.ஆர்.,நகர், கே.கே.நகர் போன்ற, நகர் என முடியும் ஊர்கள், பழமையும் புதுமையும் கலந்தவையே. கொத்தவால் சாவடி, வேலப்பன் சாவடி போன்ற, சாவடி என முடியும் இடங்களில், வரி வசூலிக்கப்பட்டது. சைனாபஜார், பர்மாபஜார் போன்ற, பஜார் என முடியும் இடங்கள், கடை வீதிகளை குறிக்கும்.

 1) 50வது ஊர் என்பதால், ‘ஐம்பத்துார்’ என வழங்கி பின், ‘அம்பத்துார்’ என, மருவியதாகக் கூறப்படுகிறது

2) முஸ்லிம் நவாப் ஒருவரின் குதிரைகளின் பசி போக்கும் பகுதி எனும் பொருளில், ‘கோடா பேக்’ என, வழங்கப்பட்டு, பின், கோடம்பாக்கமாக மருவியது.

3) குதிரை வியாபாரியான, சையது அகமது கான், அடையாறு ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டியதால், சையது ஷா பேட்டை எனவும், பின், சைதாப்பேட்டை எனவும் மாறியது.

4) வேலிச்சேரி, வெலிச்சேரி என்று இருந்த பகுதி, வேளச்சேரி என்று மாறியதாகக் கூறப்படுகிறது.

5) ஆறு தோட்டங்கள் எனும் பொருளில் உள்ள, ‘சே பேக்’ எனும் உருது வார்த்தை மருவியதே, சேப்பாக்கம் என, மாறியதாம்.

6) பசுக்களை வளர்க்கும் இடையர்கள் அதிகம் இருந்த, பல் ஆ புரம், பல்லவபுரம் எனவும், பின் பல்லாவரம் எனவும் மருவியது.

7) மதராஸ் மாகாண முதல்வரான, பனகல் ராஜாவின் நினைவை போற்ற, பனகல் பார்க் என, பெயரிடப்பட்டது.

8) நீதி கட்சி தலைவர் சர் பி.டி.தியாகராஜரின் பெயரால், தியாகராய நகர் உருவானது.

9) புரசை மரங்கள் அடர்ந்த பகுதி, புரசைவாக்கம் ஆனது.

10) மல்லிகை தோட்டம் நிறைந்த பகுதி. திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்து, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு பூ எடுத்து சென்று வழிபட்டார். அப்பகுதி, சமஸ்கிருதத்தில், புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பூந்தமல்லியாக உள்ளது.

11) ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து வந்தவர், முஸ்லிம் துறவியான, ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. அவரை தொண்டியார் எனவும், அவர் வசித்த பகுதியை தொண்டியார் பேட்டை எனவும் அழைத்தனர். தற்போது, தண்டையார் பேட்டை என, மாறி உள்ளது.

12) ஆடு, மாடுகள் மேய்ந்த மைதான பகுதி, மந்தைவெளி.

13) மயிலை எனும், இருவாச்சி பூக்கள் நிறைந்த ஊர், மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் எனும் பொருளில், மயிலாப்பூராக அமைந்தது.

14) முருகன் போர் நடத்தி, திருமணம் செய்த ஊர் என்பதால், போரூர் எனப்பட்டது. பல்லவர் காலத்திலும் இங்கு, போர்கள் நடந்ததாம்.

15) பிரம்பும், மூங்கிலும் அடர்ந்த, பிரம்பூர் பகுதி, பெரம்பூராக மாறியுள்ளது.

16) அல்லி பூக்கள் நிறைந்த கிணற்றுப்பகுதி அமைந்த ஊர், திருவல்லிக்கேணி.

17) மா அம்பலம் இருந்த ஊர், மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்த ஊர், எனும் பொருளில், மாம்பலம் உருவானது.

18) குயவர்கள், மண்ணை குழைத்து சேறாக்கி, மாட்டு வண்டியில் ஏற்றும் இடம் சேற்றுப்பட்டு. தற்போது, சேத்துப்பட்டு.

19) பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த, ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி, அன்று ராயர்புரம்; இன்று, ராயபுரம்.

20) பிரிட்டிஷ் ஆட்சியில், நெசவாளர்கள் குடியேறிய பகுதி, சின்ன தறிகளை வைத்து தொழில் செய்ததால், சின்ன தறிபேட்டையாகவும், தற்போது சிந்தாதரிப்பேட்டை எனவும் உள்ளது.

21) ஆங்கிலேயர் காலத்தில், தங்கம், வெள்ளி காசுகள் அச்சடித்த இடம், தங்கசாலை, தற்போது, மின்ட்.

22) சென்னையில் வசிக்க வரிகட்ட வேண்டும் எனும் திட்டத்தை முன்மொழிந்த, ஆங்கிலேய பேப்பமன்ஸ் பிராட்வேயின் பெயரில் அமைந்தது தான், தற்போதைய பிராட்வே.

23) தோல் தொழிற்சாலைகளான, ‘குரோம் பேக்டரி’கள் இருந்த இடம், குரோம்பேட்டை.

24) தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தென்னம்பேட்டை எனவும் இருந்து, தற்போது தேனாம்பேட்டை ஆனதாக கருதப்படுகிறது.

25) ஆவடி எனும் ஊர், – Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.

Editor's Choice

பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாட்ஸ்அப் இந்தியாவில் சுமார் 2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் வெப்-ல் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் டெஸ்க்டாப் திரையில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய அல்லது பெற அனுமதிக்கிறது.

தற்போது மிக குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வசதியை 2021-ல் அனைவரும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

பக்கம் 79 / 90