Editor's Choice

இலங்கையைச் சேர்ந்த சில யானைகளின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படங்களில், யானைகளின் கூட்டம் காட்டை விட்டு வெளியேறி குப்பைகளில் உணவைத் தேடுகிறது. மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை விலங்குகள் அனுபவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் இந்த படங்கள் இணையம் முழுவதும்  பேசப்டுகின்றன.

இணையத்தில் ஒரு புயலை உருவாக்கிய இந்த படங்களை தர்மபிலன் திலக்சன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்துள்ளார். தர்மபிலன் திலக்சன் விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இந்தப் படத்தை பகிர்ந்து, அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மனித தவறுகளுக்கு விலங்குகள் தண்டனையை அனுபவிக்கின்றன. பிளாஸ்டிக் சாப்பிடுவது விலங்குகளுக்கு மரணம் ஏற்படலாம். பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருவதால் காட்டு விலங்குகள் இப்போது பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

பொதுவாக, யானைகள் தங்கள் இரையை தேடி தினமும் குறைந்தது 28 முதல் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன் தெரிவித்தார். அப்போது அவை பல்வேறு வகையான தாவரங்களை சாப்பிடுகின்றன. ஆனால் இலங்கையை சேர்ந்த இந்த யானைகள் பிளாஸ்டிக் சாப்பிடும் படங்கள் மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். காடுகளை சென்றடையும் நமது கழிவுகளும் குப்பைகளும் காட்டு உயிரினங்களின் குடலை அழித்து வருகின்றன.

பல வன அதிகாரிகளும் இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இது போன்ற குப்பைக் குவியல்களில் யானைகள் பிளாஸ்டிக் சாப்பிடுவதைக் கண்டு சுற்றுச்சூழலில் பணிபுரியும் மக்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர். இந்த கழிவு யானைகளின் வயிற்றுக்கு செல்வது மட்டுமல்லாமல், மலம் வடிவில் காடுகளுக்குச் செல்வதும் மற்ற விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறியுள்ளனர்.

இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வானும் இந்த படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதை விட சோகமான படம் இருக்க முடியாது என்றும் அவர் எழுதியுள்ளார்.

Editor's Choice

இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், சில நாடுகளில் அவை தண்ணீரை விட குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

உலகில் பல நாடுகள் உள்ளன, அங்கு நீங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும். வெனிசுலா, ஈரான் மற்றும் அங்கோலாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது. வெனிசுலாவில் பெட்ரோல் விலை ஜனவரி 4ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 46 காசுக்கு விற்கப்படுகிறது. அதே நாளில், ஈரானில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 24 காசுகள் ஆகவும், அங்கோலாவில் 17 ரூபாய் 88 காசுகளாகவும் விற்பனை ஆனது.

குளோபல் பெட்ரோல் டீசல் பிரைஸ்.காம் இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, பெட்ரோல் ஹாங்காங்கில் லிட்டர். ரூ.169.21 காசுகள், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ரூ.150.29, சிரியாவில் ரூ.149.08, நெதர்லாந்தில் ரூ.140.90. நார்வேயில் ரூ.135.38 ரூபாய், பின்லாந்தில் ரூ.133.90, இங்கிலாந்தில் ரூ.116, சுவிட்சர்லாந்தில் ரூ.115, ஜெர்மனியில் ரூ.116, ஜப்பானில் ரூ.93.62, ஆஸ்திரேலியாவில் ரூ.68.91, அமெரிக்காவில் ரூ.50.13, ரஷ்யாவில் ரூ.42.69. இது தான் உலக நாடுகளில் பெட்ரோலின் விலை.

சார்க் நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் பெட்ரோல் விலை ரூ.72.62, நேபாளத்தில் ரூ.67.41, ஆப்கானிஸ்தானில் ரூ. 36.34, பர்மாவில் ரூ.43.53, பாகிஸ்தானில் ரூ.48.19, பூட்டானில் ரூ. 49.56, இலங்கையில் ரூ.62.79க்கு விற்பனை செய்யப்படுகிறது. .

Editor's Choice

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர் என்று Sunday Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளன்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.  

ராணியின் 95 வது பிறந்தநாளையொட்டி Trooping of the Colour என்று அழைக்கப்படும் ராணுவ அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் தாக்கத்திற்கு பிறகு ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதல் தேசிய கொண்டாட்டமாகவும் இந்த அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்தினர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. தனியாக இந்த அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார் ராணி எலிசபெத்.  
 
தற்போதைய திட்டத்தின்படி, எலிசபெத் ராணியின் பிறந்தநாள் அணிவகுப்பு லண்டனில் இயல்பாக நடைபெற வேண்டும். ஆனால், அந்த நேரத்தில்  நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.   

ஹாரிக்கு அரச குடும்பத்தினருடனான உறவு சீராக உள்ளது என்று கூறப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், 2021 ஆம் ஆண்டில் ராணியின் 95வது பிறந்தநாள் என்ற மெகா நிகழ்வில் மீண்டும் அரசக் குடும்பத்தினருடன் இணைவார்கள்.  

 

Editor's Choice

பாதுகாப்பான முதலீடு என்றால் யாருக்கும் சந்தேகம் என்பதே இல்லாமல் வங்கிகளில் வைக்கும் நிலையான வைப்பு தான். தற்போது வங்கிகள் FDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளன. இதில், மிகப்பெரிய வங்கிகளை விட சிறிய அளவிலான வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்க்கின்றன என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல். 

சிறு-குறு நிதிகள் (Microfinance) என்று சொல்லப்படும் சிறிய அல்லது பிரபலமாகாத வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான எப்டி விகிதங்களை அதிகமாக கொடுக்கின்றன. அதில், ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் (Jana Small Finance Bank), உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank), சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank), நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank) ஆகிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன.

சூர்யோதயா சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank)

சூர்யோதயா வங்கி, மூத்த குடிமக்களின் நிலை வைப்புத் தொகைக்கு 4.5% முதல் 8% வரை வழங்கி வருகிறது. 5 ஆண்டு எஃப்.டிக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank)

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டிகளுக்கு 3.50% முதல் 7.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.  மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் இது.  

ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)

ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புக்கு 3% முதல் 7.75% வரை கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலம் 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. 

நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி (North East Small Finance Bank)

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு 3.5% முதல் 8% வரை வட்டி வழங்குகிறது.  

Editor's Choice

வெதுவெதுப்பான நீரில், கல் உப்பு அல்லது வாசனை எண்ணெய் சில சொட்டுகள் கலந்து குளித்தால், உடல் சுறுசுறுப்பாவதோடு, எப்படிப்பட்ட மன அழுத்தத்தையும் குறைக்கும்; ஆழ்ந்த துாக்கம் வரும்.

மன அழுத்தம் அதிகம் இருந்தால் துாக்கம் வராது; துாக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகமாகும்.போதுமான அளவு துாக்கம் இல்லாவிட்டால், எதிர்ப்பு சக்தி குறையும்.

சுத்தமான துணியில், சில சொட்டுகள் வாசனை எண்ணெய் விட்டு, அவ்வப்போது முகரலாம். இருக்கும் இடத்தில், சில சொட்டுகள் தெளிக்கலாம். துாங்கும் அறையில் தெளிக்கலாம்.
இதனால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியும்.

கார சுவையுள்ள இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பூண்டில் உள்ள, 'அலிசின்', இஞ்சியில் உள்ள, 'ஜின்சரால்' போன்ற வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை உடையவை.



Editor's Choice

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட்டது. பெங்களூரு வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால் நிறைந்த பாதையை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டும். இத்தகைய சவால் நிறைந்த தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான அனுபவமும், திறமையும் கூடிய தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இத்தகைய நீண்ட விமான பயணத்திற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வட துருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் விமானத்தை இயக்கினர். விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி இரவு 8.30 மணிக்கு சான்பிராஸ்கோவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்டது. பின்னர் வடதுருவத்தைக் கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த விமானத்தை இன்று அதிகாலை 3.20 பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள்.

238 பயணிகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு வந்து இறங்கி வரலாற்று சாதனைப் படைத்த கேப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு கெம்பகவுடா சர்வதேச விமான நிலைத்தில் ரோஜாப் பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து  சோயா அகர்வால் கூறுகையில், "வட துருவத்தின் மேல் வெற்றிகரமாக பறந்துள்ளோம். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதுவும் வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறந்தது மகிழ்ச்சிக்கு உரியது. என்னுடன், அனுபவம் வாய்ந்த தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகிய பெண் விமானிகள் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது பெரும் சாதனை கனவாகும்” என்று கூறியுள்ளார்.

பக்கம் 74 / 90