Editor's Choice

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முழு விவசாயி ஆகவே மாறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார்.

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி அண்மையில் வீடியோ ஒன்றில் விளக்கியிருந்தார். இதேபோல் மற்றொரு வீடியோவில், தோனி இயற்கை முறையில் தர்பூசணி விதைகளை நிலத்தில் ஊன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

தோனி தனது பண்ணை வீட்டில் பயிரிட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Editor's Choice

உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள போதிலும் பலர் பல காரணங்களுக்காக இதை அடிக்கடி தவிர்க்கிறார்கள். அப்படி செய்வது தவறாகும்.

காலையில் எழுந்தவுடன் பெரும்பாலும் நம் அனைவருக்கும் பசி எடுப்பது சகஜம். சிலருக்கு இந்த பசி மிக அதிகமாகவே இருக்கும். ஆனால், நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.

பேரிக்காயில் நார் சத்து உள்ளது. நாம் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ​​அது மென்மையான சளி சவ்வை சேதப்படுத்தும்.

சிட்ரஸ் பழங்களில் பழ அமிலம் உள்ளது. அவற்றை வெற்று வயிற்றில் சாப்பிடும்போது, ​​வாயு பிரச்சினைகள் ஏற்படும்.

வெறும் வயிற்றில் காபி  அல்லது தேநீர் உட்கொள்வது நாள் முழுவதும் உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் அஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பானங்கள் உணவை ஜீரணிக்க தேவையான பித்தம் மற்றும் அமிலத்தை குறைக்கின்றன.

மக்கள் பெரும்பாலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வார்கள். வாழைப்பழங்கள் சூப்பர்-ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இது பசியை அமைதிப்படுத்துகிறது. செரிமானத்திற்கு நல்லது. வாழைப்பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

இதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ​​அது நம் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக் கூடும்.

தக்காளியில்  வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் வெறும் வயிற்றில் இதை உண்பதை தவிர்க்க வேண்டும். தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது உங்கள் வாயு பிரச்சினைகளையும் அதிகரிக்கும்.

காலை எழுந்தவுடன் சாப்பிட ஏற்ற உணவுப்பொருட்கள் :

மிதமான சூடுள்ள தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடலாம்

ஊறவைத்த பாதாம் பருப்பு

தர்பூசணி

பப்பாளிப் பழம்

உலர்ந்த திராட்சை

 

Editor's Choice

உலகளாவிய தொற்றாகி போன கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. புதிய வகை கொரோனா உருமாறி வருகிறது. அதேசமயம் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் ஜன., 2 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கான ஒத்திகை துவங்கி உள்ளது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் நடைபெற்றது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

2021ம் ஆண்டு துவக்கமே கொரோனாவை விரட்டும் விதமாக தடுப்பூசி உடன் துவங்கி உள்ளது. இதனால் மக்கள் பலரும் இதை வரவேற்றுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் #CoronaVaccine என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை வரவேற்றும் டுவிட்டர் வாசிகள் டிரெண்ட் செய்தனர்.

''கொரோனாவே போ... போ... தடுப்பூசியே வா... வா...''. ''இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம், இது வரவேற்ககூடிய ஒன்று''. ''2021 துவக்கத்திலேயே தடுப்பூசி ஆரம்பம். இந்த ஆண்டு எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன்'', ''குட் பை கொரோனா, ஹேப்பி நியூ இயர் கொரோனா வாக்சின்'' போன்ற கருத்துக்கள் டுவிட்டரில் தென்பட்டன.

Editor's Choice

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் (Roger Federer) விலகியுள்ளார். ஆறு முறை சாம்பியனான ரோஜர் பெடரர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு முழங்கால்களிலும் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டார். அவர் இன்னும் பழைய உடற்தகுதியைப் பெறாததால் 2021 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

39 வயதான சுவிஸ் வீரர் பெடரர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீசனின் துவக்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கலந்துக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.   

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, 2021 ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய ஓபன்  டென்னிஸ் போட்டிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து மூன்று வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள தனது ஆஃப்-சீசன்  தளத்தில் பயிற்சி செய்து வந்த பெடரர், போட்டி தாமதமாகத் தொடங்குவது தனக்கு சாதகமாக இருக்கலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஃபெடரர், டென்னிஸ் போட்டிகளில் விளையாடும் அளவு உடற்தகுதி பெறவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் டோனி கோட்ஸிக் கூறினார்.

 

Editor's Choice

பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான முக்கிய காரணம் பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே!

ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சோப்பு போடுவது, தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது. இதற்கான தீர்வு இயற்கை தாவரம் பழத்தை பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

* பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்தால் பாதம் வெடிப்பு நீங்கிவிடும். 

* பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும்.

* பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Editor's Choice

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வென்றது மூலம் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்ததால் தரவரிசையில் 2-ம் இடத்திற்கு சென்றது.

இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புள்ளிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன்  (பி.சி.டி) இரண்டாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து 360 புள்ளிகளை பெற்று 3வது இடத்திலும்,  இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5 வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காள் தேசம் உள்ளன.

இதனிடையே, இந்தியாவுடனான 3 வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்ததால் 3-வது டெஸ்ட்டுக்கான அணியில் வார்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பக்கம் 77 / 90