Editor's Choice

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே 4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், வாட்ஸ்ஆப்புக்கு மாற்றாக 'சிக்னல்' செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, பின்லாந்து, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் 'சிக்னல்' செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஆப் ஸ்டோரின் இலவச பயன்பாடுகள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சிக்னல் நிறுவனம் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, அதில் வாட்ஸ்ஆப் இரண்டாமிடத்திலும், 'சிக்னல்' முதலிடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிக்னல் செயலி நிறுவனத்தின் பங்கு கடந்த வியாழக்கிழமை 527 சதவீதமும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 91 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Editor's Choice

சத்தீஸ்கரின் பஸ்தரில் வினோதமான திருமணம் நடைபெற்றது. ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட அதிசயம் ஜனவரி 5 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரம் தொடங்கியது, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தின் விவசாயியும் தொழிலாளியுமான சந்து மெளரியா 21 வயது பழங்குடி பெண் சுந்தரி காஷ்யப்பை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  ஒரு வருடம் கழித்து உறவினரின் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு சந்தித்த ஹசீனா மீது சந்துவுக்கு காதல் ஏற்பட்டது. 

ஆனால், தனக்கு ஏற்கனவே காதல் இருப்பதை சந்து ஹசீனாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார் ஹசீனா.

“ஹசீனா மற்றும் சுந்தரி இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு என்னை திருமணம் செய்து ஒன்றாக வாழ   ஒப்புக்கொண்டனர். நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தோம், ஆனால் ஒரு நாள் ஹசீனா என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஹசீனா இங்கே வந்துவிட்டதை அறிந்த சுந்தரியும் என் வீட்டிற்கே வந்துவிட்டார. நாங்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக வாழ ஆரம்பித்துவிட்டோம்” என்று சாந்து கூறுகிறார்.

இரண்டு பெண்களும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் யாரையும் விட்டுவிட முடியாது என்றும் சந்து சொல்கிறார். பெண்கள் இருவரும் அவருடன் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டனர்.

Editor's Choice
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.
 
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பல் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.
Editor's Choice

எதற்கும் நேரம் இல்லாமல், பரபரப்பாக செயல்படும் போது, என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியவில்லை.

பெற்றோருக்கு தைராய்டு குறைபாடு இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் வருகிறது. இது தவிர, உணவுப் பழக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. 30 வயதிற்குட்பட்ட பெண்கள் தைராய்டு கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.

வெளியில் கிடைப்பதை, அந்த நேர பசிக்கு வாயில் போட்டுக் கொள்கின்றனர். 'ஜங்க் புட்' அதிகம் சாப்பிடுகின்றனர். 'ஏசி' அறையில் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதில்லை. 'ரிலாக்ஸ்சேஷன்'னுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை.

பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுவ தில்லை. பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவது அதிகம். வறுத்த, பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால், அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் பாரம்பரிய உணவுகளை, பெரும்பாலும் தவிர்த்து விடுவதும், தைராய்டு பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம்.

இட்லியைப் போல சிறந்த உணவு வேறு இல்லை என்பது, உலகம் முழுதும் கூறுகின்றனர்; ஆனால், நாம் அதை தவிர்த்து, நுாடுல்ஸ் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.

அடிப்படையான சில விஷயங்களை பின்பற்ற துவங்க வேண்டும். காலை உணவில், இட்லி, தோசை, இடியாப்பம் என்று, ஆவியில் வெந்த வழக்கத்தில் உள்ளதை சாப்பிட வேண்டும். குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயிற்சி. மனதை ரிலாக்சாக வைக்க தியானம், யோகா என்று இருந்தால், தைராய்டு மட்டுமல்ல, எந்தப் பிரச்னையும் வராது.

Editor's Choice

எல்லா மக்களுக்கும், Pan Card மற்றும் Aadhaar Card இருப்பது மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு அட்டைகள் இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையின் உதவியுடன், நிமிடங்களில் e-pan வழங்கப்படும். 

உடனடி பான் வசதியின் கீழ் ஆதார் அட்டை மூலம் E-PAN அட்டையை வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும் என்று வருமான வரித் துறை (Income Tax Department) தெரிவித்துள்ளது. இந்த வசதியின் கீழ் இதுவரை சுமார் 7 லட்சம் பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

NSDL மற்றும் UTITSL மூலமாகவும் பான்கார்ட் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதிக்காக சில கட்டணம் வசூலிக்கின்றன. மறுபுறம், நீங்கள் வருமான வரித் துறை போர்ட்டல் மூலம் பான் கார்டைப் பயன்படுத்தினால், நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு PDF வடிவத்தில் பான் அட்டை கிடைக்கும். இது ஒரு QR code-யை கொண்டிருக்கும். இதில், உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். உங்கள் e-PAN பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், நீங்கள் 15 இலக்க பதிவு எண் (Acknowledgment number) பெறுவீர்கள். உங்கள் பான் அட்டையின் மென்மையான நகலும் உங்கள் அஞ்சல் ID-க்கு அனுப்பப்படும்.

பான் கார்டை இலவசமாகப் பெறுவதற்கான வழி

1. முதலில், https://www.incometaxindiaefiling.gov.in/home-க்குச் செல்லவும்.

2. உங்கள் இடது பக்கத்தில் இருக்கும் Instant PAN through Aadhaar விருப்பத்தை கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் Get New Pan விருப்பத்தைக் காண்பீர்கள். இதையும் சொடுக்கவும். 

4. இப்போது புதிய பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டை எண்ணை  (Aadhaar Card Number) உள்ளிடுமாறு கேட்கும். உங்கள் ஆதார் எண்ணை இங்கே உள்ளிட்டு 'I Confirm' என்பதைத் தட்டவும்.

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP வரும். அதை தளத்தில் வைத்து சரிபார்க்கவும்.

Editor's Choice

அண்மையில், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், அவரது வெற்றியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு, ஜோபைடன் வெற்றியை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் கூடியது. அப்போது, வாஷிங்டன்னில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், ‛கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய வீடியோக்களை டிரம்ப் டுவிட்டரில் பதிவேற்றினார். அவை வேகமாக பரவியது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக கூறி, அந்த வீடியோவை தங்களது பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. விதிகளை மீறியதற்காக டிரம்ப்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால், அவரின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டிரம்ப்பின் கணக்கை தீவிரமாக ஆய்வு செய்ததில், மேலும் வன்முறையை தூண்டும் அபாயம் உள்ளது. இதனால், அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து டிரம்ப் வெளியிட்ட பதிவு: டுவிட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்கிறது. தன்னை பேசாமல் அமைதியாக இருக்க செய்வதற்காக தனது கணக்கை நீக்கியுள்ளது. டுவிட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கருத்துகளை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில், டுவிட்டருக்கு மாற்றாக சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால், சில நிமிடங்களில் அந்த டுவீட்கள் நீக்கப்பட்டன.

பக்கம் 75 / 90