- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 158
புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனை ஜோராக உள்ளது. அடுத்து எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இ தற்கான தொழில் நுட்பம், விற்பனை சந்தையை ஆய்வு செய்து வருகிறது. 7 ஆண்டுகளில் 23 புது பைக்குகளை களமிறக்க உள்ளது.
இதில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எலக்ட்ரிக் வகை பைக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் எலக்ட்ரிக் பைக்கை 2023ல் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பீல்டு கிளாசிக் 350 அடிப்படையில் வடிவமைக்கப்படும். பாஸ்ட் சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புளூடூத் மூலம் அலைபேசியை இணைக்கும் வசதி, டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இன்டர்நெட் வசதி, வட்டவடிவ எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை இருக்கை, இரட்டை வண்ணங்கள் போன்ற அம்சங்கள் இடம் பெறும். 10 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். சிங்கிள் சார்ஜில் 250 கி.மீ., துாரம் பயணிக்கலாம்.
ராயல் என்பீல்டு எலக்ட்ரின் பைக்கின் விலை 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எ


















