Editor's Choice

பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் அந்தந்த கிராமத்தைப் பொருத்து தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

உரிய கட்டணம் செலுத்தி பிறப்பு மற்றும் இறப்பு குறித்த சான்றுகள் பெற்றுக்கொள்ளலாம்.

 

சீட்டு

சீட்டுகள் சேரும் முன் அந்த சீட்டுகள் உரிய பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள பொது மக்கள் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சீட்டை துவங்கி நடத்துவதற்காக முன் அனுமதியும், அது தொடர்பான ஆணையும் வழங்கப்படுகிறது.

சீட்டு கம்பெனிகளின் பட்டியல் மற்றும் பதிவு செய்யப்பட்ட சீட்டு குருப்புகளின் விவரங்கள் இணையதள முகவரியான www.tnreginet.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளன.

சந்தாதாரர்களால் சீட்டு தொடர்பான மாத சந்தா உரிய காலத்தில் செலுத்தப்பட வேண்டும்.

சந்தாதாரர்கள் சீட்டு நடத்தும் முன்பண் அவர்களிடம் கீழ்காணும் விவரங்கள் கேட்டு பெறலாம்:

மாவட்டப் பதிவாளரின் சீட்டு நடத்துவதற்கான முன்அனுமதிச் சான்று

சீட்டு உடன்படிக்கை நகல்

சந்தாதாரர்கள் பட்டியல் மற்றும் ஏலம் எடுத்தவர்களின் விவரங்கள்.

ஏலம் எடுத்தவருக்கு உரிய பிணையம் அளித்த பின் 7 நாட்களுக்குள் தொகை வழங்கப்படும்

அவ்வப்போது சந்தா செலுத்தியதற்கு பிறகு சீட்டு ஈவு தொகை பெறுதல்

சீட்டு ஏலம் எடுத்த பின் சந்தாதாரர் திரும்ப செலுத்தவில்லை என்றாலும், சீட்டு கம்பெனி உரிய நேரத்தில் சந்தாதாரருக்கு சீட்டுத்தொகை திரும்ப அளிக்கவில்லை என்றாலும் இது குறித்து ஏற்படும் சச்சரவுகளுக்கு தீர்வுகாண சீட்டு நடுவரிடம் முறையிட்டு வழக்கு தொடர்ந்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.

Editor's Choice

உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.

 உயில் ஆவணம் பொருத்து பதிவிற்கு தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.

 உயில்களை சீலிடப்பட்ட உறைகளுக்குள் வைத்து மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக வைப்பு (Deposit) செய்யலாம்.

 அவ்வாறு பாதுகாக்கப்படும் சீலிடப்பட்ட உறைகளுக்குள் உள்ள உயில்களை உயில் எழுதி வைத்தவர் அவரது ஆயுட்காலத்திற்குள் திரும்ப பெறலாம்.

 உயில் எழுதி சீலிட்ட உறையில் வைப்பு செய்தவர், இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றுடன் அங்கீகரிக்கப்பட்ட நபர் விண்ணப்பிக்கும் நிலையில், மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்.

 சான்றிடப்பட்ட நகல்கள்....

  1 புத்தக ஆவணங்களைப் பொருத்து (கிரையம், பரிவர்த்தனை, ஈடு அடமானம், பிற ஆவணங்கள்) சான்றிடப்பட்ட நகல்களை உரிய கட்டணம் செலுத்தி எவராகிலும் பெற்றுக் கொள்ளலாம்.

 உயில்களைப் பொருத்து உயிலை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே சான்றிட்ட நகல் பெறலாம்.

 உயில் எழுதிக் கொடுத்தவர் இறந்த பின் அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து எவரும் சான்றிட்ட நகலைப் பெறலாம்.

  4 புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகார ஆவணங்களைப் பொருத்து தொடர்புடைய ஆவணதாரர்கள் மட்டுமே சான்றிட்ட நகல்களை பெறலாம்.

Editor's Choice

சிறிய சாக்லேட் முதல் பெரிய டிவி, ஏசி, வாஷிங் மெஷின், சைக்கிள் வரை மிக அழகாக பேக் செய்யப்பட்டு நம் வீடுகளுக்கே வணிக நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல, பெரும்பாலான மளிகைக் கடைகளிலும் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வண்ணப் பைகள், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நோய்களைத் தீர்க்கும் மருந்து, மாத்திரைகள் கூட விதவிதமான உறைகளில் அடைக்கப்பட்டு, பளபளக்கும் அட்டைப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இவையெல்லாம் பேக்கேஜிங் டெக்னாலஜி என்ற அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டால் சாத்தியமானவை. இதனால், பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல நன்மைகள் இருந்தாலும், குறிப்பிடத்தகுந்தவை இரண்டு. ஒன்று, எளிதாக அடுக்கி, குறைந்தசெலவில் அதிக பொருள்களை விற்பனையகங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது. இரண்டு, பொதுமக்களைக் கவர்ந்து, தங்கள் பொருள் தரமானது, பாதுகாப்பானது என்ற உணர்வை ஏற்படுத்துவது. பொதுவாக, காற்றுப் புகாமல் அடைக்கப்பட்ட பெட்டிகளில் இருக்கும் பொருள்கள் கெட்டுப்போகாமல், அழுக்குப்படாமல், சேதமடையாமல், கலப்படம் இல்லாமல் இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருக்கிறது.

இதையொட்டி, சர்வதேச அளவில் பேக்கேஜிங் தொழில்நுட்பமும் இந்தத் தொழில்துறையும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதோடு, எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது. தற்போது உலக அளவில் ரூ. 15 லட்சம் கோடி சந்தை மதிப்புடன், சுமார் 7 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள பேக்கேஜிங் தொழில்துறை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 21 லட்சம் கோடி முதல் 25 லட்சம் கோடி வரையிலான சந்தை அளவைப் பெற்றிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, உற்பத்தி பொருள்களின் எண்ணிக்கை உயர்வதும், அதற்கேற்ப தொழில்துறையில் தானியங்கி இயந்திரங்கள் நுழைவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. என்றாலும், தானியங்கி இயந்திரங்களை இயக்குவது, கண்காணிப்பதற்கான பொறியாளர்கள் முதல் பொருள்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் தொழிலாளர்கள் வரை இந்தத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், இன்றைய நவீன பேக்கேஜிங் முறையில் அதுகுறித்த முறையான கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெறாமல் திறம்பட பணியாற்ற முடியாது. எனவே, இளைஞர்கள் இந்தத் துறையில் அடிப்படை பயிற்சி முதல் உயர்கல்வி வரை ஏதேனும் ஒன்றை பெறுவதன்மூலம் தங்களது வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் The Indian Institute of Packaging (IIP) நிறுவனம் இதுதொடர்பாக 4 விதமான கோர்ஸ்களை வழங்கி வருகிறது.

இதில் 2 ஆண்டுகள் முழுநேர படிப்பான Post Graduate Diploma in Packaging (PGDP), 3

மாதங்கள் முழுநேர படிப்பான Certificate Course in Packaging-Intensive Training Course (ITC), 18 மாதங்கள் கொண்ட Diploma under Distance Education Programme in Packaging (DEP) ஆகிய கோர்ஸ்களில் இளநிலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் படித்த இளைஞர்கள் சேரலாம்.

பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தொழில்துறையினர் தங்களது பணி அறிவை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் Executive Development Programmes (EDP) என்ற ஒருநாள் முதல் ஒருவார காலம் கொண்ட குறுகிய கால பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது.

PGDP கோர்ஸில் சேர ஜூன் மாதம் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த கோர்ஸ் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும்.

3 மாதங்களைக் கொண்ட ITC கோர்ஸும், EDP பயிற்சியும் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய மையங்களில் நடைபெறும். ஐடிசி சான்றிதழ் கோர்ஸில் எந்த பாடத்திலும் பட்டம், டிப்ளமா பெற்றவர்கள் சேரலாம்.

IIP நிறுவனம் உலக பேக்கேஜிங் அமைப்பின் நிறுவனர் உறுப்பினராகவும், அதன் ஒப்புதல் பெற்ற நிறுவனமாகவும், ஆசியன் பேக்கேஜிங் ஃபெடரேஷன் }இன் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் உள்ளதால், இதன் ITC கோர்ஸ் சான்றிதழ் தேசிய, சர்வதேச வேலைவாய்ப்புக்கான தகுதி அங்கீகாரம் பெற்றது.

இந்தியாவில் IIP அல்லாமல்  University college of Science and Technology- kolkata, Tezpur University- Assam, IIT-Delhi, LD College of Engineering- Ahmadabad, Lakshmi Narayan Institute of Technology-Madhya Pradesh, Anna University- TamilNadu, SIES School of Packaging- Mumbai உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் இளநிலை பட்டம் பெற்றவர்கள் வரை பேக்கேஜிங் கோர்ஸ்களில் சேரலாம்.

பன்னாட்டு நிறுவனங்கள், KPO உற்பத்தி நிறுவனங்கள், மாற்றியமைக்கும் தொழில்கள்,  உணவு மற்றும் மருந்து நிறுவனங்கள், தீவிர பெரு நிறுவனங்கள் என பேக்கேஜிங் கோர்ஸ் முடித்த திறனாளர்களுக்கு உலகம் முழுவதும் 100 சதவீத வேலைவாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் தொடங்கி, ரூ. 8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. படிப்பு, அனுபவம், திறமைக்கேற்ப வெளிநாடுகளில் ரூ. 25 லட்சம் தொடங்கி, ரூ. 55 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக கிடைக்கிறது.

Editor's Choice

வழிகாட்டிப் பதிவேட்டில் சர்வே எண் / தெருவிற்கு மதிப்பில்லாத நிலையில்

 விவசாய நிலம் மனையாக மாற்றப்படும் போது அல்லது மாற்றப்படுவதாக சார்பதிவாளர் சந்தேகிக்கும் நிலையில்.

 கட்டிட கள ஆய்வு...

 சார்பதிவாளர் கட்டிடத்தை கள ஆய்வு செய்து அதன் மதிப்பினை நிர்ணயம் செய்வார்.

 கட்டிடம் பொருத்து சார்பதிவாளர் கணக்கிட்ட மதிப்பு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிட மதிப்பைவிட கூடுதலாக இருக்கும் நிலையில் குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் குறைவு பதிவுக் கட்டணம், இணக்க கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

 கட்டிட மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு மேல் உள்ள நிலையிலும், சிறப்பு வகை கட்டிடங்கள் மற்றும் இயந்திரத்தளவாட சமான்கள் உள்ள நிலையில், பதிவுத்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர் அவர்களால் கட்டிட கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை பொருத்து கட்டிட மதிப்பு ரூ.2 லட்சத்திற்கு கீழும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பொருத்து கட்டிட மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு கீழும் உள்ள ஆவணங்களுக்கு கட்டிட கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை.

தனியார் இருப்பிட பதிவு :-

 யாருக்கு....?

 மருத்துவச் சான்றின் பேரில் உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு.

 சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்கு

 பொது இடத்திற்கு மற்றும் நீதிமன்றத்திற்குள் வர விலக்களிக்கப்பட்ட நபர்களுக்கு.

 பொது இடங்களுக்கு வர விலக்களிக்கப்பட்ட பெண்களுக்கு.

 எப்போது....?

 தனியார் இருப்பிட பதிவிற்கு அலுவலக நேரத்தில் சார்பதிவாளரிடம் மனு செய்து உரிய கட்டணம் செலுத்தப்படும் நிலையில்:

 அலுவலக நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ சார்பதிவாளரால் தனிமனை வருகை செய்யப்படும்.

 விடுமுறை நாள் பதிவு - சார்பதிவாளர் விடுமுறைநாளில் அலுவலகத்தில் பணிபுரியும்பட்சத்தில் ஆவணதாரருக்கு அவசர தேவையேற்படின் விடுமுறை நாளில் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.

 கட்டாயப் பதிவு :- 

எப்போது....?

ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர், சார்பதிவாளர் முன்னிலையில் ஆவணத்தை எழுதிக் கொடுத்ததை ஒப்புக்கொள்ள நேரில் ஆஜராகாத நிலையில், ஆவணத்தை எழுதி வாங்குபவர் கட்டாயப் பதிவிற்கு சார்பதிவாளரிடம் மனு செய்யலாம்.

செயல்முறை :-

கட்டாயப் பதிவு தொடர்பாக ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரிடம் சார்பதிவாளரால் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் ஆவணத்தை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டால் ஆவணம் பதிவு செய்யப்படும். இல்லை எனில் ஆவணம் பதிவு மறுதளிக்கப்படும்.

மேல்முறையீடு :-

 கட்டாயப் பதிவு தொடர்பான பதிவு மறுதளிக்கப்படும் ஆணைக்கு எதிராக ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நிர்வாக மாவட்டப் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்துக் கொள்ளலாம். மேல்முறையீட்டின்படி மாவட்டப் பதிவாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதியாணை பிறப்பிக்கப்படும்.

Editor's Choice

இந்து திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள்:

 

 மணமகன் / மணமகள் முறையே 21, 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

 மணமகன் / மணமகள் - இருவரும் இந்து / சீக்கியர்/ஜெயனர்/புத்த மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 இந்து மத முறைப்படி அல்லது சீர்த்திருத்த முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்.

 திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், வயது, முகவரி, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மணமகன் / மணமகள் இருவருக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 கீழ்காணும் எதேனும் ஒரு இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு இந்து திருமணம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

 மணமகனின் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்

 மணமகனிள் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்

 இந்து திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள சார்பதிவகம்

 

 தமிழ்நாடு திருமணப் பதிவு

 

 தமிழ்நாடு திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள் :-

 

 குறிப்பாணை மனுவுடன் இரட்டையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 அவரவர் சமய சட்டத்திற்கு ஏற்ப திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்.

 திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் சார்பதிவாளர் முன்னிலையில் குறிப்பாணை பூர்த்தி செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்கு மேல் 150 நாட்களுக்குள் சார்பதிவாளர் முன்னிலையில் அபராதத்துடன் குறிப்பாணை பூர்த்தி செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், வயது, முகவரி, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் (4+4) மணமகன் / மணமகள் இருவருக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 தமிழ்நாடு திருமணம் நடைபெற்ற இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும்.

 

 சிறப்பு திருமணங்கள் பதிவு

 

 சிறப்பு திருமணப் பதிவிற்கு தேவையான விவரங்கள்

 

 ஏற்கனவே நடைபெற்ற திருமணங்கள் மற்றும் சார்பதிவாளர் முன்னிலையில் முறைப் படுத்தப்படும் திருமணங்கள் பதிவு செய்யப்படும்.

 சார்பதிவாளரால் முறைப்படுத்தப்படும் திருமணம் எனில் மணமகன் / மணமகள் ஆகியோருக்கு முறையே 21, 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற திருமணங்களைப் பொருத்த பதிவு எனில் மணமகன் / மணமகள் ஆகிய இருவருக்கும் 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

 கீழ்காணும் எதேனும் ஒரு இடம் எந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைகிறதோ அங்கு சிறப்பு திருமணம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

 மணமகனின் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்

 மணமகனிள் முகவரி அமைந்துள்ள சார்பதிவகம்

 சிறப்பு திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள சார்பதிவகம்

 சிறப்பு திருமணம் தொடர்பாக அறிவிப்பு மூன்று பிரிதிகளில் சார்பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிவிப்பு நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யப்பட்ட பின்னர், மற்றொரு நகலை மணமகள் அல்லது மணமகன் நிரந்தர முகவரி அமைந்துள்ள எல்லைக்குட் பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி அதனை அந்த சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யப்படும்.

 அறிவிப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தடையின்மைச் சான்று பெறப்பட்டால் திருமணம் முறைப்படுத்தப்படும்/பதிவு செய்யப்படும். பதிவு செய்யும் நாளில் மணமகன் மற்றும் மணமகள் மூன்று சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.

 அறிவிப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்கு பின் மூன்று மாதங்களுக்குள் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும். 3 மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் புதிதாக அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

 

 இந்திய கிருத்துவ திருமணங்கள் பதிவு....

 

 பேராயர் மற்றும் இந்திய கிருத்துவ திருமணச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றவர்கள், திருமணப் பதிவாளர்கள் ஆவார்கள்.

 திருமணங்கள் குறித்த வடிப்பை சென்னை-28, சாந்தோம் நெடுஞ்சாலை, எண்.100ல் உள்ள பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Editor's Choice

எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணம் அசலில்.

 பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பம் ரூ.10/- நீதிமன்ற வில்லையுடன்.

 சொத்தில் கட்டிடம் இருப்பின் பூர்த்தி செய்யப்பட்ட ‘M’ படிவம்.

 அசல் புகைப்பட அடையாள அட்டை.

எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதிப் பெறுபவர் ஆகியோரது புகைப்பட அடையாள அடையின் நகல்கள், அதிகார ஆவணம் எனில் சாட்சிகளின் புகைப்பட அடையாள அட்டையின் நகல் களுடனும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அசல் புகைப்பட அடையாள அட்டைகளை சார்பதிவாளரிடம் சரிபார்த்தலுக்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ள நிலையில் எழுதிப் பெறுபவர் மற்றும் எழுதிக் கொடுப்பவரின் (வருமானவரித்துறையினால் வழங்கப்பட்ட) PAN Card உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும். PAN Card இல்லாத நிலையில் படிவம் 60/61 உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சரியான/குறைவு முத்திரைத் தீர்வை ரொக்கம் அல்லது வரைவுவோலையாக செலுத்தப்படும் நேர்வில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 41ன் கீழான விண்ணப்பித்துடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சந்தை மதிப்புக்கு குறைவாக ஆவணம் தாக்கல் செய்யும் நேர்வில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அசல் ஆவணத்துடன் பதிவஞ்சலில் அனுப்ப ஏதுவாக சுய முகவரிக்கப்பட்ட மூன்று உறைகளை உரிய தபால் தலையுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆவணச்சொத்து 20 சென்டிற்கு கீழ் உள்ள நிலையில் விவசாய நிலம் மனையாக மாற வாய்ப்புள்ளதாக சார்பதிவாளர் கருதும் நிலையில், அசல் ஆவணத்துடன் சொத்தினை அடையாளம் காண்பிக்க ஏதுவாக FMB/Topo வரைபடமும் தாக்கல் செய்யபட வேண்டும்.

அரசு நிலம், இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் அல்லது பிற பதிவு செய்ய தடையுள்ள சொத்து தொடர்பாக ஆவணம் தாக்கல் செய்தால், தொடர்புடைய துறையின் தடையின்மைச் சான்று பெற்று தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அரசிதழ்களில் பிரசுரம் செய்யப்பட்ட 9 மாவட்டங்கள் தொடர்பான சொத்திற்கு ஆவணம் தாக்கல் செய்யும் போது சொத்துக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பட்டா பாஸ் புத்தகம் / 10(1) அறிக்கையுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

பதிவுக் கட்டணம் மற்றும் கணினி கட்டணம் ரூ.100/- செலுத்தப்பட வேண்டும்.

உட்பிரிவு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

சார்பதிவாளரிடம் செலுத்தப்படும் தொகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படும்.

 

ஆவணம் திரும்ப வழங்குதல் - சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிசுமைக்கு ஏற்றவாறு ஆவணங்கள் திரும்ப வழங்கப்படும்.

 

கீழ்கண்ட சில காரணங்கள் தவிர....

ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தில் கட்டிடம் உள்ள நிலையில் அந்த கட்டிடத்திற்குரிய மதிப்பை கணக்கீடு செய்வதற்காக - 15 நாட்கள்.

ஆவணத்தின் தன்மை நிர்ணயம் செய்வதற்காகவும், தெளிவுரை வேண்டியும் - 15 நாட்கள்

சந்தை மதிப்பு குறைவு தொடர்பான ஆவணங்கள் பொருத்து இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A(1) / நிலையாணை எண்.744ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள - 21 நாட்கள்.

பக்கம் 81 / 90