Editor's Choice

நடிகை நயன்தாரா  அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கிறார்கள். இந்நிலையில் விநியோகஸ்தராகவும் ஆகியிருக்கிறார்.

தயாரித்து முடிக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் வசந்த் ரவி, ரவீணா நடித்த ராக்கி என்ற படத்தை வாங்கியுள்ளார். இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள கூழாங்கல் என்ற படத்தையும் நயன்தாரா வாங்கி வெளியிடுகிறார். தனித்துவமான கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Editor's Choice

ஒரு ஆவணம் பதிவு மறுதளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து மேல்முறையீடு 30 நாட்களுக் குள் மாவட்டப் பதிவாளரிடம் செய்துக்கொள்ளலாம்.

 மாவட்டப் பதிவாளரால் ஒரு ஆவணத்திற்கு குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதை ஏற்காத நிலையில், ஆவணதாரர் பதிவுத்துறைத் தலைவர் மற்றும் முதன்மை வருவாய் கட்டுப்பாடு அலுவலர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.

 வழிகாட்டி மதிப்பினை ஏற்றுக்கொள்ளலாத நிலையில் அந்த ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அன்னாரால் சொத்தின் உரிய சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.

 மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களால் சொத்தின் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய வித்தியாச மதிப்பிற்கு 2 மாத கால கெடுவிற்குள் குறைவு முத்திரைத் தீர்வை செலுத்தப்பட வேண்டும். தவறின் மாதம் ஒன்றுக்கு 1% வட்டி வசூலிக்கப்படும்.

 மாவட்ட வருவாய் அலுவலர்/ தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட சந்தை மதிப்பினை ஏற்றுக்கொள்ளத நிகழ்வுகளில் அன்னாரால் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களுக்குள் பதிவுத்துறைத் தலைவர் / முதன்மை வருவாய் கட்டுபாடு அலுவலர் அவர்களிடம் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.

 கிழிந்து போன, உபயோகிக்கப்படாத முத்திரைத்தாள் மற்றும் முத்திரைத்தாள் திருப்புத்தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு எதிராக பதிவுத்துறைத்துறைத் தலைவர் அவர் களிடம் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.

 சங்கப் பதிவு ரத்து, சங்கப் பதிவு மறுப்பு, செயல்படாத சங்கங்கள் குறித்த மேல்முறையீடுகளை பதிவுத் துறைத் தலைவர் அவர்களிடம் செய்துக்கொள்ளலாம்.

 இன்னபிற விவரங்கள் அறிந்துக்கொள்ள இணையதள முகவரியில் www.tnreginet.gov.in விஜயம் செய்யவும். தகவல்கள்

 பதிவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பதிவு பொதுமக்களால் கோரப்படும் தகவல்களை வழங்க கடமைப்பட்டவர்களாவார்கள்.

 சார்பதிவாளர் அலுவலகங்களில் இருக்கும் விளம்பரப் பலகையில் அனைத்து முக்கிய விவரங் களும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

 அலுவலக நேரத்தில் பதிவு பொதுமக்கள் கோரும் அனைத்து விவரங்களை வழங்க சார் பதிவாளர் கடமைப்பட்டவர்களாவார்கள்.

 சார்பதிவாளர்கள் பதிவு பொதுமக்களுக்கு தேவையான விவரங்களை வழங்கக்கூடிய தகவல் மையமாக உள்ளனர்.

 ஆலோசனைப்பெட்டிகள் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ளன.

Editor's Choice
10 நாடுகள் பங்கேற்ற உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்தது.

இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ உடல்எடை பிரிவு) 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் மாயா கிளைன்ஹான்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனிஷ் (57 கிலோ பிரிவு) 3-2 என்ற கணக்கில் சக நாட்டவர் சாக்‌ஷியை வென்று தங்கத்தை வசப்படுத்தினார். முந்தைய நாளில் இந்திய வீரர் அமித் பன்ஹாலுக்கு (52 கிலோ) தங்கப்பதக்கம் கிட்டியது. மூன்று நாட்கள் நடந்த இந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது. ஜெர்மனி அணி 16 பதக்கங்களுடன் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) முதலிடத்தை பிடித்தது.
Editor's Choice

இரண்டு பங்குதாரர்களுக்கு குறையாமல் உள்ள கூட்டு வணிக நிறுவனங்களை மாவட்டப் பதிவாளரிடம் பதிவு செய்துக்கொள்ளலாம்.

 கூட்டு வணிக பதிவு விண்ணப்பத்தில் வழக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காயரால் ஒவ்வொரு பங்குதாரரின் கையொப்பமும் அத்தாட்சி செய்யப்பட வேண்டும்.

 கூட்டு நிறுவனம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

 பதிவு செய்யப்பட்டு கூட்டு வணிக நிறுவனம் தங்களது முன் ஆண்டு அறிக்கையினை ஒவ்வொரு வருடமும் தவறாமல் தாக்கல் செய்யும் நிலையிலேயே அந்நிறுவனம் தொடர்ந்து நடைபெறுவதாக கருத இயலும்.

 • பங்குதாரர்கள் மாற்றம் குறித்த அறிக்கை கோர்வை செய்திடல் வேண்டும்.

பதிவு பொதுமக்களுக்கு தகவல் அளித்தல்

பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவுத்துறையின் சம்மந்தப்பட்ட தற்போதைய விவரங்கள் உள்ளன.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் முக்கியமான தகவல் அடங்கிய விளம்பரப் பலகை உள்ளது. மேலும் ஒவ்வொரு சார்பதிவாளரும் பதிவு பொதுமக்களுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றனர்.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் குறைகள் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்கப் பட்டுள்ளன

அனைத்து மாவட்டம் மற்றும் மண்டல அலுவலகத்தில் அலுவலர்கள் பிரதி திங்கட்கிழமை பொதுமக்களின் குறைகளை கேட்டறிகின்றனர்.

பதிவுத்துறைத் தலைவர் அலுவலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியுடன் ஒரு பிரிவு ஏற்படுத்தப் பட்டு அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்படுகின்றது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் இருக்கும் தலைமை எழுத்தர் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக செயல்பட்டு பதிவு பொதுமக்களுக்கு வழிகாட்டியாக உள்ளனர்.

Project STAR திட்டத்தில் அனைத்து அலுவலகமும் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய தள முகவரி www.tnreginet.gov.in

இணைதயத்தின் மூலமாக சான்றிட்ட நகல்கள் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் இணைதளத்தின் மூலமாக சான்றிட்ட நகல்கள் குறித்து விண்ணப்பம் செய்து சான்றிட்ட நகல்கள் தயாரான பின்னர் நேரடியாக அலுவலகம் வந்து உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் அல்லது தனியார் அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு பொதுமக்கள் தாங்கள் செலுத்திய தொகைகளுக்கு உரிய ரசீது கேட்டு பெற அறிவிக்கப் படுகிறது.

பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் குறித்த விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டுப் பெறலாம்.

சேவையில் குறைககள் இருக்கும் நிலையில் :-

ஒருவர் தனது ஐயப்பாட்டிற்கு சரியான பதில்கிடைக்காத நிலையிலும் அல்லது

ஏதேனும் ஒரு சேவை பொருத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைபெறாமலும் தாமதமாக ஏற்படும் நிலையில்:

பாதிக்கப்பட்ட நபர் கடிதம் மூலமாகவோ, நேரடியாகவோ மாவட்டப் பதிவாளர் அல்லது மண்டல துணைப் பதிவுத்துறைத் தலைவர் அல்லது பதிவுத்துறைத் தலைவர் அவர்களை அணுகலாம்

அல்லது

புகார் பெட்டியில் புகார் தெரிவிக்கலாம்.

அல்லது

மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மூலம் புகார் தெரிவிக்கலாம்

Editor's Choice


சென்னையில் புறநகர் ரெயில் சேவை எப்போது இயக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.  அக்டோபர்  மாத தொடக்கத்தில் இருந்து புறநகர் ரெயில், அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்டது. பின்னர் அது கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டது. எனினும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னையில் புற நகர் ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார். முதல்வர் பழனிசாமி, ரெயில்சேவையை தொடங்குவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் அனைவரும் பயணிக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நெரிசல் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நெரிசல் நேரம் ஆகும்.
 

 

Editor's Choice

ஒரு சங்கமானது 20 நபருக்கு மேல் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் சங்கத்தின் வரவு அல்லது செலவு ஓர் நிதியாண்டில் ரூ.10,000/-க்கு மேல் இருக்கும்பட்சத்திலும், கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டியதாகும்.

 சங்கம் தொடர்பான பதிவு ஒரே நாளில் மேற்கொள்ளப்படும்.

 பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு அதற்குரிய சட்டப்படி தேவையான விவரங்களை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 கோர்வை செய்யப்பட வேண்டிய ஆண்டறிக்கை

 சங்க உறுப்பினர்கள் மாற்றம் / செயற்குழு உறுப்பினர்கள் மாற்றம் கோர்வை செய்யப்பட வேண்டும்.

 முகவரி மாற்றம்

 சிறப்புத் தீர்மானங்கள்

 சங்கங்களுக்குட்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ஏதும் ஈடு அல்லது வேறு ஏதேனும் பாராதீனம்

 மேற்படி விவரங்கள் உரிய காலக்கெடுவிற்குள் கோர்வை செய்யப்படவில்லை எனில் சங்கப் பதிவினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 எந்த நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே சங்க நிதி செலவிடப்பட வேண்டும்.

 பதிவு செய்யப்பட்ட சங்கம் சட்டப்படி சரிவர செயல்படவில்லை என்றால் அதனை கலைக்கவோ அல்லது அதற்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமித்து அதனை நிர்வகிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது.

 பதிவு பெற்ற சங்கங்கள் மற்றும் அதனுடைய தற்போதைய நிலை பதிவுத்துறையின் இணையதளத்தில் உள்ளன.

பக்கம் 80 / 90