Editor's Choice

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் துணை மருத்துவ பட்ட படிப்பில் (Paramedical degree course)மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியுள்ளது.

B.P.T (Physiotherapy), B.Pharm, B.Sc (Nursing), B.ASLP, B.Sc Medical Laboratory Technology, B.O.T, B.Sc.Radiology & Imaging Technology, B.Optom, B.Sc Physician Assistant போன்ற 17 துணை மருத்துவ பட்ட படிப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ பட்ட படிப்பிற்கு 1,552 இடங்கள் உள்ளன.

தகுதி (Qualification)

12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இயற்பியல் (Physics),
வேதியியல் (Chemistry)
உயிரியல் (Biology)
அல்லது
இயற்பியல் (Physics),
வேதியியல் (Chemistry)
தாவரவியல் (Botany)
விலங்கியல் (Zoology)படித்திருக்க வேண்டியது அவசியம்.

மதிப்பெண் (Marks)

குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

வயது வரம்பு (Age limit)

 17 முதல் 30 வயது வரை

விண்ணப்பிக்கும் முறை  (Apply)

www.tnmedicalselection.org , https://tnhealth.tn.gov.in/ ஆகிய இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அக்டோபர் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, கீழ்காணும் ஆணவங்களின் நகல்களை (Attested copy) இணைத்து A4 size cloth lined கவரில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும், இதற்க்கு கடைசி தேதி 17-10-2020

THE SECRETARY,
SELECTION COMMITTEE,
162, PERIYAR E.V.R. HIGH ROAD,
KILPAUK, CHENNAI – 600 010.

Editor's Choice

ஓர் ஆவணத்தை இணையதளத்திலும் மற்றும் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மாதிரி ஆவண வரைவுகளை உபயோகப்படுத்தி எழுதிக் கொடுப்பவர்களில் எவரேனும் ஒருவர் வரைவு செய்யலாம்.

 வழக்கறிஞர்கள்

 உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள்

 ஆவணங்களின் மாதிரி வரைவுகள் சார்பதிவாளர் மற்றும் இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

 ஆவணத்தில் வழங்கப்பட வேண்டிய விவரங்கள் :-

 ஆவணத்தில் எழுதிக் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் ஆகியோர்களுக்கு அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண்/கைபேசி எண், புகைப்பட அடையாள அட்டை விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

 சொத்தின் சந்தை மதிப்பு மற்றும் கைமாறுத் தொகை விவரங்கள்.

 சொத்தின் முழு விவரம், கட்டிடம் இருப்பின் அதன் விவரமும் சேர்த்து.

 ஆவணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதிக் கொடுப்பவர் கையொப்பமிட வேண்டும். கடைசி பக்கத்தில் அத்தாட்சி செய்யும் சாட்சிகள் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

 விக்கிரைய ஆவணத்தில் எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதிப் பெறுபவர் கண்டிப்பாக அனைத்து பக்கங்களிலும் கையொப்பமிட்டு, ஆவணம் பதிவு செய்யும் நாளில் இரண்டு சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னர் ஆஜராக வேண்டும்.

 அதிகார ஆவணங்கள் தொடர்பாக முதல்வர் மற்றும் முகவர் ஆவணங்களின் அனைத்து பக்கத்திலும் கையொப்பமிட்டு ஆவணம் பதிவு செய்யும் நாளில் இரண்டு சாட்சிகளின் புகைப்பட அடையாள அட்டையுடன் சார்பதிவாளர் முன்னர் ஆஜராக வேண்டும். அதிகார ஆவணங்கள் பொருத்து சாட்சிகளுடைய கையொப்பம் மற்றும் கைரேகையும் பெறப்படும்.

 ஆவணம் பதிவு செய்வதற்கு தாக்கல் செய்ய காலக்கெடு :-

 ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் தொடர்புடைய சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்கு மேல் எட்டு மாதங் களுக்குள் சார்பதிவாளரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகை செலுத்தி தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு உரிய காரணங்களை விளக்கி மாவட்டப் பதிவாளரிடமிருந்து தாமத மன்னிக்கப் பெறலாம்.

 உயில்களைப் பொருத்து சார்பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்து பதிவு செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.

 ஆவணங்கள் பதிவு செய்ய எங்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

 தமிழ்நாட்டிலுள்ள சொத்துக்களை, தமிழ்நாட்டில் மட்டுமே கீழ்கண்ட அலுவலகங்களில் பதிவிற்காக தாக்கல் செய்யலாம்.

 சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளரிடம் தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்டப் பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்டப் பதிவாளரிடம் பதிவு செய்ய ஆவணம் தாக்கல் செய்யலாம்.

 29.03.1997 முதல் தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களைப் பொருத்து வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் செல்லத்தக்கதல்ல.

Editor's Choice

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புடைய தொழிற்திறன் மேம்பாட்டிற்கு 2 புதிய பாடத்திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகத் துணைவேந்தர் பிச்சுமணி (Pichumani) தெரிவித்துள்ளார்.

உணவுப் பதனிடுதல் பட்டயப் படிப்பு:

3 ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி எனப்படும் உணவுப் பதனிடுதல் (Food Processing), தரக் கட்டுப்பாடு (Analytical) மற்றும் பரிசோதனை தொழில்நுட்பத்தில் (Quality Control Techniques), மூன்று ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி (B.Voc - Bachelor of Vocational Education). இந்தப் பாடத்திட்டத்தில் உணவுப் பதனிடுதல், உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் உணவுப் பரிசோதனையில் உள்ள கோட்பாடுகளை பல்கலைக்கழகத்தில் பாடமாகப் படிக்கும்போதே, உணவுப் பதனிடும் தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிருப்புப் பயிற்சியும் (Internship) வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மை பட்டயப் படிப்பு:

மற்றொரு பாடத்திட்டம், அதாவது இயற்கை வேளாண்மை (Organic Farming) மற்றும் காளான் வளர்ப்பில் (Mushroom Cultivation) மேம்பட்ட பட்டயப் படிப்பு (Advanced Diploma in Agriculture). இந்தப் பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண்மையில் உள்ள அனைத்து அம்சங்களையும், குறிப்பாக இயற்கை வேளாண் பயிர் செய்யும் முறை, நுண்ணுயிர் இயற்கை உரம் (Microbial natural fertilizer) தயாரித்தல், பஞ்ச கவ்யா (Pancha Kavya) தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பல்வேறு முறையில் காளான் வளர்த்தல், மதிப்புக்கூட்டு முறையில் காளான் உணவு தயாரித்தல், பண்ணை மேலாண்மைக் குழு அமைத்தல், விளைபொருள் சந்தைப்படுத்துதல், இயற்கை வேளாண் பொருட்கள் சான்று (Certificate of Natural Agricultural Products) பெறுதல், ஏற்றுமதிக் கொள்கைகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் பல்கலைக்கழகத்தில் பாடமாகப் படிக்கும்போதே, தன்னார்வத் தொண்டு நிறுவனம், தனியார் மற்றும் அரசு வேளாண் பண்ணையில் நேரடி உள்ளிருப்புத் திறன் பயிற்சியும் (Training) குறுகிய காலப் பயிலரங்கம் மூலம் திறன் மேம்பாட்டுடன் கூடிய உடனடி வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

வேலைவாய்ப்பு:

உணவு பதனிடும் தொழிற்சாலையிலும் இயற்கை வேளாண்மைத் துறை சார்ந்த பணிகளிலும் நிறையப் பணியிடங்கள் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியிடங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்ய NSQF (National Skill Qualififcation Framework) என்ற தேசியத் தொழிற்திறன் தகுதி (National Vocational Qualification) வரையறையின்படி மேற்கூறிய 2 பாடத் திட்டங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (Manonmaniyam Sundaranagar University) பாடத்திட்டமாகத் தயாரித்துள்ளது.

மேலும், திறன் மேம்பாட்டிற்கும், உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குப் பல தொழிற்சாலைகள், இயற்கை வேளாண் பண்ணை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை:

உணவுப் பதனிடுதல் மற்றும் இயற்கை வேளாண்மைப் பாடத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் அக்டோபர் 28 ஆம் தேதியாகும். இது தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் UGC Nodal Officer சு. காளிதாஸை (Kalidoss) 0462-2563172, 94430 22508 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Editor's Choice

 சொத்துக்களை வாங்குவதற்கு முன் அந்த சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றுகளில் உள்ள பதிவுகளை / வில்லங்கங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 எவ்வாறு வில்லங்கச் சான்று பெறுவது?

 வில்லங்கச்சான்றுக்கான விண்ணப்பங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும் மற்றும் இணையதளத்திலும் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

 வில்லங்கச்சான்றுக்கான விண்ணப்பத்தில் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்துதல் வேண்டும். சொத்திற்கான சர்வே எண்ணிற்கு பழைய சர்வே எண் விவரம் இருப்பின் அதன் விவரத்தையும் மனுவில் தெரிவித்தல் வேண்டும். இல்லை எனில் பழைய சர்வே எண் தொடர்பான பதிவுகள் விடுபட வாய்ப்புள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட சொத்திற்கும் இணைதளத்தில் வில்லங்கச்சான்று விண்ணப்பிக்கலாம். உரிய கட்டணம் செலுத்தினால் வில்லங்கச்சான்று தங்களுடைய வீட்டிற்கு நேரடியாகவே அனுப்பி வைக்கப்படும்.

 வழிகாட்டி மதிப்பு....

 இணைதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட சொத்திற்கும் வழிகாட்டி மதிப்பு உள்ளது.

 அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த சார்பதிவக எல்லைக்குட்பட்ட கிராமங் களின் வழிகாட்டி மதிப்பு பதிவேடுகள் உள்ளன.

  2002, 2003, 2007, 2012 ஆண்டுகள் மற்றும் தற்போதைய 09.06.2017ம் தேதி முதல் நடைமுறையிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான வழிகாட்டி மதிப்பு இணைய தளத்தில் உள்ளது.

 சொத்து மதிப்பீடு :-

 இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட சொத்து மற்றும் ஒரு குறிப்பிட்ட தன்மை கொண்ட ஆவணத்திற்கு எவ்வளவு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் தேவைப்படும் என்ற விவரம் உள்ளது.

 ஒரு சொத்து தொடர்பாக அடிமனை பொருத்து வழிகாட்டி மதிப்பு, கட்டிடம் இருப்பின் பொதுப் பணித்துறையினரால் வழங்கப்பட்ட கட்டிட மதிப்பீடு, செலுத்தப்பட வேண்டிய முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை தொடர்புடைய சார்பதிவாளரிடமிருந்தோ, இணைய தளத்தின் மூலமாகவோ தெரிந்துக்கொள்ளவும்.

 முத்திரைத் தீர்வை செலுத்துதல் :-

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பொருத்து இ-ஸ்டாம்ப் வசதி மற்றும் இந்த சேவை வழங்கக்கூடிய வங்கி கிளைகள் விவரங்கள். இ-ஸ்டாம்ப் இணையதளத்தில் உள்ளன.

 தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பட்டியல் முழுவதும் இணையதளத்தில் உள்ளது. மேலும் அந்தந்த சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பட்டியல் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விளம்பரப் பலகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 முத்திரைத்தாள்களை அதன் மதிப்பிற்கே உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்.

 முத்திரைத்தாள்களை அதன் மதிப்பிற்கு மேல் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வதாக புகார் பெறப்படின் தொடர்புடைய முத்திரைத்தாள் விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படுவ தோடு அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

 முத்திரைத்தாள்களை சார்பதிவாளர் அலுவலகங்கள், கருவூல அலுவலகங்கள், உதவி கண்காணிப்பாளர் (முத்திரை), சென்னை ஆகியோர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

 முத்திரைக் கட்டணத்தை சார்பதிவாளரிடம் ரூ.1000/- வரை ரொக்கமாகவும், உச்சவரம்பின்றி வங்கி வரைவோலையாகவோ, கருவூல செலுத்துச் சீட்டு மூலமாகவோ செலுத்தலாம்.

Editor's Choice

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி?

அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்?

ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர்.

ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.

டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக்கூடாது.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும்கூட இருக்கக்கூடாது.

ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம்.

ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.

எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள்.

டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும்.

டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம். அதற்கான பதிவுக்கட்டணம் 400 ரூபாய்.

சட்ட ஆலோசகர் S. ஆனந்தன்

 

Editor's Choice

2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 82 / 90