Editor's Choice

கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர்.

கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர்.

அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

  • தரிசு நிலத்தை, கோடை உழவு செய்வதால், மண்ணில் புதைந்து இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
  • வயலில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • மழை நீர் பிற வயலுக்கு செல்லாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். புல் வளர்வதை கட்டுப்படுத்தலாம்

கிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மிளகுதக்காளி கீரை, அகத்திக்கீரை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அதிக முதலீடும் தேவை இல்லை. கூலியாட்கள் பிரச்னையும் இல்லை.  ஒரு முறை நடவு செய்யப்படும் கீரை 15 நாளில் வளர்ந்து விடும். 15 நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தலாம். கீரை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில வகை பூச்சி தாக்குதலை சமாளிக்க அதற்கான பொடிகளை பயன்படுத்தப்படுகிறது. மழை, பனி காலங்கள் கீரை சாகுபடி ஏற்றதல்ல.

அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கீரை விளைச்சல் தடைபட்டு விடும்.  ஏக்கருக்கு ஒரு முறை 600 கிலோ வரை கிடைக்கும்.கீரைகளை மார்க்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை சாத்தியமாகும். இல்லையேல் வாடிப்போகும். ஆரோக்கியம் தரும் கீரைக்கு என்றைக்கும் மவுசுதான்.

Editor's Choice

நார்ப்பயிர்களின் அரசனாகவும் வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர். இதை பணப்பயிர் என்றும் கூறுவோம்.
இதில் ஆசிய, ஆப்பிரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஆர்போரியம், காசிப்பியம் ஹெர்பேசியம். அமெரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஹிர்சூட்டம், காசிப்பியம் பார்படன்ஸ். இவை பயிரிட ஏற்ற ரகங்கள்.

பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள போதிலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் உற்பத்தி திறன் மிகவும் குறைவு தான். நம் நாட்டில் பருத்தி 70 சதவீதத்துக்கு மேல் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. விட்டு விட்டு பெய்யும் மழை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல்களினால் உற்பத்தித் திறன் குறைகிறது.

தமிழகத்தில் தேவையை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்கு பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க சரியான தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பது விவசாயிகளின் அவசிய தேவை.
நல்ல ரகங்களே உயர் விளைச்சலுக்கு அடிப்படை. கோவை வேளாண்மைப் பல்கலை மற்றும் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கியுள்ளனர். வேளாண்மைப் பல்கலை பருத்திதுறையில் வெளியிட்டுள்ள எம்.சி.யு 5, எம்.சி.யு.7, கோ 14 மற்றும் கோ 17 ஆகியவை சிறந்த ரகங்கள். எம்.சி.யு.5 மற்றும் கோ14 இரண்டும் மிக நீண்ட இழை பருத்தி வகையை சேர்ந்தது.
கோ 17 ரகம் 125 – 135 நாட்களில் முதிர்ச்சியடையும். குறுகிய காலத்தில் காய் பிடிக்கும். செடியில் கிளை இருக்காது. சராசரியாக எக்டேருக்கு 2361 கிலோ என்ற அளவில் விதை பருத்தி மகசூல் கிடைக்கும். இந்த ரகம் நெல் தரிசாக தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.
பெரம்பலூர், திண்டிவனம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடியில் குளிர்கால மானாவாரிக்கு ஏற்றது. மதுரை, தேனி மற்றும் விருதுநகரில் கோடைகால பாசனத்திற்கும் பயிரிட ஏற்றது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 4, எஸ்விபிஆர் 5 மற்றும் எஸ்விபிஆர் 6 ரகங்கள் அதிக மகசூல் தரக்கூடியது. கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள கேசி 2 மற்றும் கேசி 3 ரகங்கள் மானாவாரிக்கு உகந்தது.
சுத்தமான பருத்திச் சுளைகளை துணிப்பை அல்லது சாக்குப் பையிலோ வைத்துக் கொண்டு தரம் குறைந்த அல்லது கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலும் சேகரிக்க வேண்டும்.

துணிப்பையில் சேமிப்பதால் பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் வெப்பத்தில் காயும்படி விடுவதோ கூடாது. விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

Editor's Choice

நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை  உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற களைகள் மற்றும் பூச்சிகள், பூச்சி கூடுகள், பூச்சி முட்டை போன்றவைகளை கட்டுப்படுத்தி நம்மால் களைய முடியும்.

அப்படி வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் வயலை நன்கு உழுது பின்பு  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பின்பு,நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் இதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த பூச்சி மற்றும் பூஞ்சாண தாக்குதலில் இருந்து நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்களை காப்பாற்ற முடியும்.   தேவையற்ற களைகள் நிலத்தில் வளரும் பொழுது அதனை ஆட்களைக் கொண்டு களை எடுப்பது மிக நல்லது. மிகவும் எளிதான வழியான கோனோவீடர் என்ற கருவியை கொண்டு குறைந்த கூலியில் களைகளை கட்டுப்படுத்த முடியும். நீர் பாசனம் செய்த பின்பு கோனோவீடர் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.

நேரடி நெல் விதைப்பு நிலத்தில் விதைக்கும் பொழுது சிறிது அளவு நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும் நன்கு முளைகட்டிய விதைகளை விதை பெட்டியில் இரண்டு பாகம் நிரப்ப வேண்டும் இதை பின் கதவுகளை நன்கு இறுக்கி மூடி இருக்க வேண்டும் இந்த விதையின் கருவியை முன்னோக்கி நடப்பது போன்று கையில் எடுத்துச் செல்வதன் மூலம் சீரான முறையில் வயலில் விதைக்கப்படும் அவ்வாறு விதைப்பு செய்யும் பொழுது நாம் விதைத்த இடத்தில் இந்த நேரடி நெல் விதைப்புக் கருவியின் சக்கரத்தைக் கொண்டு நாம் பயிரிட வேண்டிய இடத்தை கண்டறிய முடியும்.  ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை விதை விழும் பகுதியை நன்கு பார்த்து விதை விதைப்பு சரியான முறையிலும் குறிப்பிட்ட இடைவெளி உள்ளதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு பேர் சேர்ந்து இரண்டரை ஏக்கர் வரை நெல்  விதைப்பு செய்ய முடியும். இதன் மூலம் ஆட்களின் கூலி அதிகம் மிச்சப்படுத்த முடியும்.

நேரடி நெல் விதைப்புக் கருவி பயன்படுத்துவதன் காரணமாக நாற்று படிப்பது நாற்றங்கால் நடவு செய்வது இதற்காக ஆகும் ஆட்கூலி போன்றவை இல்லாமல் மிகவும் குறைகிறது.

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் நெல்லை நேரடியாக விதைப்பதால் கிடைக்கும் மொத்த அளவில் 25 முதல் 30% வரை விதையின் அளவு குறைகிறது.

நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் விதைப்பின் மூலம்  நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிப்பு மொத்த பரப்பளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நமக்கு சேமிக்க முடிகிறது.

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ஆகும் செலவில் சில ஆயிரங்கள் குறைவதால் நமக்கு கிடைக்கும் லாபமும் அதிகரிக்கிறது.

இந்த விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி  20 சென்டிமீட்டர் என்ற ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

Editor's Choice

சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச் சத்துகள், பொட்டாசியம் என அனைத்தையும் கொண்டுள்ளது. வரகு அரிசியின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அதாவது இது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது.

மேலும் வரகு அரிசியானது சர்க்கரை நோயாளிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது, அதாவது இது ரத்தத்தில் உள்ள‍ ச‌ர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கச் செய்கின்றது.
 

மேலும் மூட்டுவலிப் பிரச்சினைகள், மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.

 மேலும் கண்புரை நோய்கள், கண் வீக்கம் என்ற கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது, மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.

மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது. மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மாதவிடாய்க் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.

Editor's Choice

பயிர் வளர யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட உரங்கள் அவசியமான ஒன்று என்பது விவசாயிகளின் கருத்து. ஆனால், இதற்கு மாற்றாக இயற்கை விவசாயிகள் பயன்படுத்துவது எது தெரியுமா?

அதுதான் தயிர். அப்படியே பயன்படுத்தாமல், தயிரை மாற்றி பொன்னியமாகப் பயன்படுத்துவது தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சம்.

குறைந்த செலவில் நிறைவான லாபத்தை தரும் இயற்கை விவசாயத்தில், ரசாயன உரங்களுக்கு பதிலான இயற்கை மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரையே சற்று மாற்றி யூரியா (Urea ), டி.ஏ.பி-க்கு மாற்றாக விவசாயத்தில் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள் பீகார் விவசாயிகள்.

2 லிட்டர் தயிரைக் கொண்டு 25 கிலோ யூரியாவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் தற்போது அங்கீகரித்துள்ளது.

ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, பயிர்களின் வளர்ச்சிக்கு தயிர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தயிரைப் பொன்னியமாக மாற்றி இயற்கை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்படித் தயாரிப்பது?

  • 5 லிட்டர் தயிரை காற்று புகாத பானையில் வைத்து அடைத்து, அதற்குள் செம்புக் கம்பியைப் போட்டுவிட வேண்டும்.
  • கம்பியின் கால்வாசி பகுதி வெளியே தெரியும் வகையில் வைக்க வேண்டியது அவசியம்.
  • 4, 5 நாட்களுக்கு பிறகு பார்த்தால், தயிர் பச்சை நிறமாக மாறியிருக்கும். இந்தக் கலவைக்கு பொன்னியம் என்று பெயர்.
  • பொன்னியத்துடன் 5 லிட்டர் வேஸ்ட் கம்போஸரை கலந்து எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் பூச்சிகள் பயிர்களை அண்டவே அண்டாது.
  • யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தும்போது, பொன்னியத்தின் அளவைச் சற்று கூடுதலாக சேர்ப்பது நல்லது.
  • நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது.
  • இதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  • பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், பூச்சிகள் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.
  • பொன்னியத்துடன், மண்புழு உரம் கலந்த கலவையை நெற்பயிர் என்றால் தூவலாம்.
  • களர்பாலை நிலங்களில், சில பயிர்கள் விளையாது. அந்த மாதிரியான நிலங்களை மாற்ற இந்த பொன்னியத்தை தென் மாவட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தியது நம்மடைய பாரம்பரியம்.
  • தற்போது இந்த பொன்னியம் டெல்டா மாவட்டங்களில் பிரபலமாகி வருகிறது.
  • யூரியாவை விடக் குறைந்த விலை கொண்ட இந்த பொன்னியத்தை, எருவுடன் சேர்ந்தும் போடலாம்.
  • மண்ணுடன் கலந்தும் பயன்படுத்தலாம்

     

Editor's Choice

இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை திண்டிவனம் பாண்டிச்சேரி கள்ளக்குறிச்சி நாகர்கோயில் மார்த்தாண்டம் திண்டுக்கல் திருவாரூர் அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன.

உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தை படுத்தி வருமாணத்திற்கு வழிவகுக்கின்றனர்.

அந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மாதம் 5% வியாபார லாபமாக 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். 20 மாதங்களுக்கு பிறகு 100% முதலீட்டு தொகையையும் பெற்றிடுங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர். 

பக்கம் 3 / 11