Editor's Choice

திருவாரூர் திருவாரூர் மாவட்டம் குடல்வாசல் அருகில் உள்ளது இத்தலம். இத்தலத்து மூலவர் பாம்புரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்திற்கு சேஷபுரம் என்று பெயர் சொல்லப்படுகிறது.

ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் போர் ஏற்பட்டது. வாயு பகவான் காற்றை நிறுத்த சகல உயிர்களும் மூச்சுத் திணறின. தேவர்கள் ஆதிசேஷனையும் வாயுவினையும் போரினைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆதிசேஷன் போரிலிருந்து விலகி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து வழிபட்டார். இதனால் மூலவருக்கு சேஷபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஊர் சேஷபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

இன்னொரு தலபுராணம்

ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும் சிவபெருமானும் அமர்ந்திருந்த சமயத்தில் அங்கு வந்த விநாயகப் பெருமான¢ பெற்றோருக்கு வணக்கம் தெரிவித்தார்.

தனக்கும் சேர்த்துதான் இந்த வணக்கம் என்று சிவபெருமான¢ கழுத்திலிருந்த நாகம் கர்வம் கொண்டு தலையை அசைத்தது.

இதனால் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கட்டும் என்ற சாபம் பெற்றது.

சக்தியை இழந்த நாகங்கள், ஆதிசேஷன் தலைமையில் ஒன்று திரண்டன. வாசுகி, கார்கோடகன், தட்சகன், அனந்தன், சங்கபாலன், குலிகள், பத்மன், மகாபத்மன் என்ற நாகங்களும் இந்தக் கூட்டத்தில் இருந்தன.

அவை அனைத்தும் சிவபெருமானைச் சென்று வணங்கி நாகம் செய்த தவற்றை மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டன.

ஒருநாகம் செய்த தவறுக்காக எங்கள் அனைவரையும் தண்டிப்பதா என்று இறைஞ்சினர்.

சிவபெருமான் கருணை கொண்டு, திருபாம்புரம் தலத்திற்கு சிவராத்திரியன்று சென்று வழிபாடு செய்யுங்கள், சாபவிமோசனம் கிடைக்கும் என்று அருள் புரிந்தார்.

அனைத்து நாகங்களும் அவ்வாறே சாபநிவர்த்தி அடைந்தன.

நாகங்கள் வந்து வழிபட்ட இத்தலத்திற்கு வந்து மக்கள் வழிபாடு செய்தால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம், ராகு, கேது தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Editor's Choice
ராகு--கேது பரிகார ஸ்தலம்
 
மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்*
 
அம்பாள்: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)*
 
ஸ்தல விருட்சம்: வன்னி
 
தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்*
 
வழிபட்டோர்கள் : ஆதிசேஷன் மற்றும் அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள்.
 
இது ஆதி ஷேசன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கோவிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்*..
 
பாம்புகள் இங்கு உலவுவதாகவும் ஆனாலும் பாம்புகள் யாரையும் இங்கு தீண்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்*.
 
விஷம் தீண்டா பதி என்ற சிறப்பு பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
 
குடவாசல் தாலுகா
 
திருப்பாம்புரம்
 
திருவாரூர் மாவட்டம்.
 
- A. Gurumoorthi
Editor's Choice

சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் #மோதகம் என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில்.

இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.

குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புழுக்கம் கொண்ட இடம்.

அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் "

நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல!

கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை.

 

Editor's Choice
வரலாறு சுருக்கம்:
 
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.
 
மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.
 
சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
 
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது
 
சித்தரும் சித்தவைத்தியமும் :-
 
மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.
 
மகாதேவ மலை சித்தர் அமைவிடம்.....
 
சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.
 
 
Editor's Choice
மகாளயபட்சத்தின் மிக முக்கியமான நாளான மகாளயபட்ச அமாவாசை எனும் புண்ணியம் நிறைந்த தினத்தில், முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யுங்கள். மறக்காமல் செய்யுங்கள்.
 
இந்த நாளில், தர்ப்பணம் செய்வது மகத்துவம் மிக்கது. மேலும் நம் முன்னோர்களை நினைத்து, காகத்துக்கு உணவிடுங்கள். யாருக்கேனும், குடை அல்லது செருப்பு அல்லது போர்வை வழங்குங்கள். உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பித்ரு முதலான தோஷங்கள் விலகும். பித்ரு சாபம் நீங்கும். முன்னோர்களின் ஆசியுடன் முன்னுக்கு வருவீர்கள்.
 
மாதந்தோறும் அமாவாசை வரும். அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
 
அதில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சக்தி வாய்ந்தவை. சந்ததி சிறக்கச் செய்யும் நாட்களாக அமைந்திருப்பவை.
 
தை அமாவாசை. அடுத்து ஆடி அமாவாசை. மூன்றாவதாக... புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளில், நாம் செய்யும் பித்ரு வழிபாடானது நம்மை சீரும் சிறப்புமாக வாழவைக்கும். முன்னோர்களின் பரிபூரண ஆசியை நமக்கு வழங்கும்.
 
12 அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்புக்கு உரியவை. இந்த மூன்றில் இன்னும் அதிர்வுகள் கொண்ட நாளாக அமைந்திருப்பதுதான் மகாளயபட்ச அமாவாசை என்கிற புரட்டாசி அமாவாசை.
 
புரட்டாசி அமாவாசை மகாளய பட்ச அமாவாசை எனப்படுகிறது. மகாளயபட்சம் என்பது இந்த அமாவாசைக்கு முந்தைய நாட்கள். அதாவது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்து பிரதமையில் தொடங்கி அமாவாசை வரை உள்ள நாட்கள்.
 
பட்சம் என்றால் பதினைந்து. மகாளயம் பித்ருக்கள், முன்னோர்கள் கூட்டமாக வருவது. ஆகவே மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்களும் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்தில் வருகிறார்கள். நம் வீட்டுக்கு வருகிறார்கள். நாம் செய்யும் ஆராதனைகளையும், தர்ப்பணங்களையும், வழிபாடுகளையும் நேரடியாகவும் சூட்சுமமாகவும் பார்க்கிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதாக ஐதீகம்.
 
மகாளய பட்ச காலத்தின் நிறைவுநாளே மகாளயபட்ச அமாவாசை. நம் முன்னோர்களை மறக்காமல் வழிபடக்கூடிய நாள். இதுவரை முன்னோர்களை நாம் சரியாகவும் முறையாகவும் வணங்கியிருந்தாலும் வணங்காமல் போனாலும், புரட்டாசி மகாளயபட்ச அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களை வணங்க வேண்டும். வழிபடவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும்.
 
அவர்களுக்கு அவர்களின் பெயர்களைச் சொல்லி, மூன்று முறை எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விடவேண்டும். முன்னோரின் படங்களுக்குப் பூக்களிட வேண்டும். அவர்களுக்கு படையலிட வேண்டும். நம் முன்னோர்களுக்கு வைத்த படையலை காகத்துக்கு வழங்கி வேண்டிக்கொள்ளவேண்டும்.
 
நம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் நினைவாக, யாருக்கேனும் புடவை வாங்கிக்கொடுக்கலாம். வேஷ்டி வழங்கலாம். குடை வழங்கலாம். போர்வை வழங்கலாம். சால்வை வழங்கலாம். காலணி வாங்கிக் கொடுக்கலாம். ஐந்து பேருக்கேனும் உனவுப் பொட்டலம் வழங்கலாம். இவை எல்லாமே பித்ரு சாபத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்.
 
பித்ரு தோஷம் முழுவதுமாக நம்மிலிருந்து விலகிவிடும். பித்ருக்களின் பரிபூரணமாக ஆசியைப் பெறலாம். இதனால் இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் விலகும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழையடி வாழையென வம்சம் தழைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Editor's Choice
சோழ வளநாட்டின் தலைநகராம் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன்பேட்டையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைக் குறையாக (ஒரு தீவாக) உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். காவிரியின் கிளைநதியான வெட்டாறு இவ்வூருக்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் இவ்வூருக்குக் கிழக்கில் இணைந்து ஒரே பேராறாக பயணிப்பதால் இவ்வூர், காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே அமைந்த திருவரங்கம், திருவாைனக்கா போன்று ஆற்றிடைக் குறையாகவே விளங்குகின்றது,
 
வளைந்து நெளிந்து செல்லும் வெட்டாறு பாம்புடல் போன்றும், நாகத்தி என்னும் ஊர் பாம்பின் படமெடுத்த தலை போன்றும் விளங்குவதால் இவ்வூருக்கு நாகத் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இது காலப்போக்கில் நாகத்தி என மருவிவிட்டதாகவும் கூறுவர். இயற்கை எழில் சூழ்ந்த இவ்வூரின் கண், ஆழி சூழ்ந்த இவ்வுலகத்தில் வேறு எங்கும் காணவியலாத மிக அரிய பல்லவர் கால ஐயனார் திருமேனி ஒன்று விளங்குவதும், மிகப்பழைய சிவாலயம் ஒன்று காலவெள்ளத்தில் கரைந்து அதன் எச்சங்கள் மட்டுமே இன்று ஐயனார் ஆலயத்தில் காட்சி நல்குவதும் சிறப்புக்குரியவையாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வூரின் வரலாற்றுச் சிறப்புகளையும், தனித்தன்மை பெற்ற பூரணையுடன் திகழும் ஐயனார் ஆலயம் இதுவே
 
நாகத்தி ஐயனார் ஆலயம் பல்லவப் பேரரசர்கள் காலத்திலேயே (இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே) இங்கு ஐயனார் திருவுருவம் அமைக்கப்பெற்றதால் இங்கு ஒரு தேவி மட்டுமே காணப்பெறுகிறார். பீடம் ஒன்றின் மேல் ஐயனார் அமர்ந்திருக்க, அருகே ஒரு தேவி மட்டும் நிற்கும் கோலத்தோடு, ஏறத்தாழ 6 அடி உயரமாக விக்ரகம் வடிக்கப் பெற்றுள்ளது. வலது காலை பீடத்தின் மேல்குத்திட்ட நிலையில் அமர்த்தி, இடது காலை தொங்கவிட்டபடி ஐயன் அமர்ந்துள்ளார். வலக் கரத்தினை குத்திட்ட முழங்கால் மேல் அமர்த்திபக்கவாட்டில் நீட்டியுள்ளார்.
 
இடக்கரமோ பீடத்தின் மேல் ஊன்றப் பெற்றுள்ளது. கிரீட மகுடத்துடன் பரந்த ஜடாபாரம் காணப்பெறுகின்றது. வலக் காதில் குழையும், இடக்காதில் பத்ர குண்டலமும் விளங்க, மார்பை கழுத்தணி அலங்கரிக்கிறது. தடித்துத் திரண்ட புரிநூல் தோளிலிருந்து வயிறுவரை காணப்பெறுகிறது. தொடைவரை இடுப்பாடை விளங்குகிறது. பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய் ஒன்று நின்றிருக்கிறது.
 
தேவியோ நின்ற கோலத்தில் வலக்கரத்தில் தாமரை ஒன்றினை ஏந்தியவாறு பேரழகோடு காணப்பெறுகின்றார். இதனை ஒத்த ஒரு திருவடிவம் வேறு எங்கும் காணமுடியாது. இங்கு நிற்கும் தேவி தாமரையை ஏந்தியுள்ளதால் இவள் பூரணா தேவி என அழைக்கப் பெறுகிறாள்.
 
- A. Gurumoorthi

பக்கம் 8 / 11