Editor's Choice

மத்திய அரசால் அளிக்கப்பட்ட, கால்நடை காப்பீட்டு திட்டமானது பத்தாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் 2005 -2006 மற்றும் 2006-07 லும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007-08 லும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த திட்டமானது தற்போது 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டு திட்டமானது  இரட்டை நோக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.  மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.

இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக  3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும்  (கோவாவை தவிர்த்து) அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமுல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளை தேர்தெடுக்கும் விதம்.

  • உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் இந்த திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும். உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் என்பது, ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் குறிக்கும்.  இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு  அளிக்கப்படுகிறது.
  • வேறு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்க இயலாது.
  • மானியமானது ஒரு பயனாளிக்கு  இரண்டு விலங்குகளுக்கு மூன்று வருடத்திற்கு அளிக்கப்படும்.
  • வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற, விவசாயிகள், மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தில் சேருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். எனினும், விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதையும் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம்  தரப்பட வேண்டும்.
  • சந்தையின் அதிக பட்ச விலைக்கு, காப்பீடு அளிக்கப்படும். இதனை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.

    காப்பீட்டை கோரும் போது, கால்நடையை சரியாக அடையாளம் காண வேண்டும்.  இதனால் காது டேக் இடுவது, சரியாக இருக்க வேண்டும்.  வழக்கமான முறையில் காதில் டேக் இடுதல் அல்லது மைக்ரோசிப் இடுதல் ஆகியவற்றில் ஒன்றை காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது செய்ய வேண்டும்.   இதற்கான செலவை காப்பீட்டு  கழகங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவற்றை பராமரிப்பது பயனாளியின கடமையாகும்.  இதன் தரம் மற்றும் விதம் காப்பீட்டு கழகம் மற்றும் பயனாளி இருவராலும் ஒத்துக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.
  • காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்ள வேண்டும்

    இழப்பீடு தரும் சூழல் நேர்ந்தால், காப்பீடு செய்யப்பட்ட தொகையை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கட்டாயம் அளிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம், காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும், என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கவும், செய்ய வேண்டும்

 

Editor's Choice

கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.

  • கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.
  • இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
  • எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
  • எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.
  • மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.
  • இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
  • வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
  • எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.
  • அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
  • அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.
  • கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
  • இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.
  • ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.
  • எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.
  • கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.
  • குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.
  • அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.
  • சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.
  • ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.
Editor's Choice

மலேசியா, இந்தோனேஷியாவில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் டன் பாமாயிலை இலங்கை இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில், இந்த இறக்குமதிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று திடீரென தடை விதித்தார்.  இது தொடர்பாக அதிபர் கோத்தபய வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாமாயில் இறக்குமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் செம்பனை சாகுபடிக்கும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் செம்பனை மரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ரப்பர் அல்லது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பிற மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இதன் மூலமாக பாமாயில் மற்றும் பனை சாகுபடி இல்லாத இலங்கையை உருவாக்க முடியும். இதன் மூலமாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழிலையும் ஊக்குவிக்க முடியும்,’ என கூறப்பட்டுள்ளது. உலகளவிலான பாமாயில் ஏற்றுமதியில் மலேசியா முன்னிலை வகிக்கிறது. ‘இலங்கையின் இந்த தடையால் தங்கள் நாட்டின் பாமாயில் தொழில்துறை பாதிக்காது,’ என்று  அது தெரிவித்துள்ளது

Editor's Choice

தென் மாவட்டங்களில் அயிரை மீன் மிகவும் பிரபலமான உணவு. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் சுவை. அயிரை மீன் விலை கிலோ ரூ.1,000க்கும் மேல் விற்கப்படுகிறது. இது கடல் மீன்களை விட அதிக விலையாகும். அயிரை மீன் மிகவும் சிறியதாக வளரும் தன்மை கொண்டது. அதிகபட்சம் 2-4 கிராம் எடையுடன் இருக்கும். உடலமைப்பு உருண்டு காணப்படும்.

துடுப்புகளில் கறுப்பு நிற புள்ளிகளுடன், நீண்ட மூக்குடனும், சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிற்று பகுதியில் வட்ட வடிவ துடுப்பு காணப்படும். குளத்தில் அடிப்பகுதிகளில் மண்ணுக்குள் புதைந்து வாழும் உயிரினமாகும். வாய்ப்பகுதி கீழ் நோக்கி அமைந்திருக்கும். வாய்ப்பகுதியின் அருகே உணர்வு நீட்டிகள் காணப்படும். மீனின் இனத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது ஐந்து ஜோடிகள் காணப்படும். கண்கள் சிறியதாகவும், தோல் கொண்டு மூடியும் காணப்படும்.

பெரும்பாலான அயிரை மீன் வகைகளுக்கு செதில்கள் கிடையாது. அப்படி இருந்தாலும் சிறியதாக தோலுடன் ஒட்டி காணப்படும். இவைகளை கண்டறிவது கடினம். இவ்வகை மீன்கள் வளர்ச்சியடையாத காற்றுப்பை கொண்டு இருக்கும். சில வகை அயிரை மீன்கள் காற்றை உட்கொண்டு வாழக்கூடியவை. அயிரை மீன் வளர்ப்பது மிகவும் எளிதாகும். மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் குளங்களை பயன்படுத்தினால் போதுமானது. அயிரை மீன்களை தனியாக வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அயிரை மீன் இளம் குஞ்சுகளை கெண்டை மீன்களுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.

அயிரை மீன் குஞ்சு உற்பத்திக்கு கண்ணாடி தொட்டி மற்றும் சிமென்ட் தொட்டிகளை பயன்படுத்தலாம். அயிரை மீன்கள் கெண்டை மீன்களுடன் இருப்புக்குளத்திலும் கெண்டை மீன் குஞ்சுகளோடு, மீன் குஞ்சு வளர்ப்பு குளங்களிலும் இணைத்து வளர்க்கலாம். பிற மீன்களை உண்ணும் பகை மீன் இனங்கள் உள்ள குளங்களில் அயிரை மீன்களின் பிழைப்புத்திறன் குறைவாகவே இருக்கும்.

அயிரை மீன் வளர்ப்பில் பகை இன மீன்கள் அக்குளங்களில் நுழைவதை முழுவதுமாக தடுக்க வேண்டும். அயிரை மீன்களை கட்லா, ரோகு, மிர்கால் மீன்களுடன் வளர்ப்பதால் பிழைப்பு திறன், நல்ல வளர்ச்சி அடைகிறது. இதனால் அயிரை மீன்களை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் இருப்பு செய்ய வேண்டும். நான்கைந்து மாதத்தில் அயிரை மீன் உற்பத்தி ஏக்கருக்கு 60 கிலோ என்ற அளவில் கிடைக்கிறது. இது கெண்டை மீன்களிலிருந்து பெறும் வருமானத்திற்கு சமமான வருவாயாகும். சாதா கெண்டை மீன்களுடன் அயிரையை வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Editor's Choice

இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் கத்தரிக்காய். இது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் குறைவான கலோரி, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி காணப்படுகிறது.

கத்தரிக்காய் ரகங்கள்

  • அதிக விளைச்சல் தரும் கத்தரிக்காய் ரகங்களில்
  • கோ-2,
  • பி.கே.எம்.-1,
  • பி.எல்.ஆர்.-1,
  • பி.பி.ஐ.-1
  • அண்ணாமலை கத்தரி

இதேபோல் கோ.பி.எச்.-1 மற்றும் 2 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் துல்லிய பண்ணை முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. ஒரு ஏக்கரில் பண்ணை முறையில் சாகுபடி செய்ய சாதாரண ரகம் எனில் 400 கிராம் விதையும், வீரிய ஒட்டு ரகம் எனில் 200 கிராம் விதையும் தேவைப்படும். மேட்டுப்பாத்திகள் அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்ய சுமார் 225 சதுர மீட்டர் நாற்றங்கால் தேவைப்படுகிறது. விதைகளை அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியுடன் ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் கலந்து நிழலில் காயவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது எக்டேருக்கு 300 கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு உரம் இட வேண்டும். இத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை கலந்து வளர்ச்சி ஊடகமாக பயன்படுத்த வேண்டும். சுமார் 15 முதல் 18 நாட்கள் கழித்து நீரில் கரையும் உரத்துடன் நுண்ணூட்டச்சத்து 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுகள் நனையும்படி ஊற்ற வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுகள், 25 முதல் 30 நாட்களில் நடவுக்கு தயாராகிவிடும். குழித்தட்டு முறையில் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 18 ஆயிரத்து 700 நாற்றுகளை உற்பத்தி செய்ய 200 குழித்தட்டுகள் தேவைப்படும்.

சொட்டு நீர் பாசன முறையில் பயிரிடும் போது, குழாய்களை 1.5 மீட்டர் இடைவெளியில் அமைத்து, கிளை குழாய்களில் நீர்சொட்டுவான்களை 60 செ.மீ. இடைவெளியில் இருக்குமாறு அமைக்க வேண்டும். நடவு செய்யும் போது செடிக்கு செடி 60 செ.மீ., வரிசைக்கு வரிசை 75 செ.மீ., பாருக்கு 90 செ.மீ. என்ற அளவில் ஒரு பாரில் 2 வரிசை இருக்குமாறு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் 40 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 25 டன் தொழு உரத்தை அடியுரமாக கடைசி உழவின் போது இட வேண்டும். அதனுடன் 75 சதவீதம் மணிச்சத்தை உரமாக இட வேண்டும். நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரியை எக்டேருக்கு 2 கிலோ என்ற அளவிலும் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

கத்தரிக்காய் சாகுபடியின் போது எபிலாக்னோ வண்டுகள் இலைகளை சேதப்படுத்தி விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்த வண்டுகளின் முட்டைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும். மேலும் குயினால்பாஸ் மருந்தை 1.7 மி.லி. அல்லது டிரைஅசோபாஸ் மருந்தை 2.5 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு, காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகளின் தண்டுப்பகுதி, புழு தாக்கிய காய்களை நீக்கி அழித்து விட வேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது குயினால்பாஸ் மருந்தை 2.5 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த ஒரு மாதத்தில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

நாற்றழுகல் நோயானது முளைக்கும் விதைகளை தாக்கி, மண்ணிற்கு மேல் செடி வளர்வதற்குள் அழுகிவிடுகின்றன. பின்னர் வளர்ந்த இளம் நாற்றுகளை தண்டு பாகத்தில் தாக்கும் போது செடிகள் அழுகி, ஒடிந்து இறந்து விடுகின்றன. இதை உயிர் பூசணக்கொல்லிகளான டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவிலோ கலந்து விதைநேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். வாடல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வாடத்தொடங்கும். ஒரு வாரத்தில் செடி முழுவதும் வாடிவிடும். வேர்கள் அழுகிவிடும். மண் அருகில் உள்ள பூசணத்தின் நூல் இலைகள் வெண்மையாக காணப்படும்.

இதற்கு விதைகளை சூடோமோனஸ் பிளோரசன்ஸ் மருந்து ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவிலோ, டிரைக்கோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ கலந்து விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். கத்தரிக்காய்கள் அறுவடைக்கு தயாரானவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் அறுவடை செய்ய வேண்டும். எக்டேருக்கு 50 – 70 டன் காய்கள் அதிக விளைச்சல் கிடைக்கும். பின்னர் காய்களை தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Editor's Choice

இந்தியாவில் அதிகப்படியாக நன்னீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வேவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து, தேவையான அளவு உரமிடுதலாகும். குளத்தின் பராமரிப்புகள், மண் மற்றும் நீரின் தரத்தை பொருத்ததே.

மீன் குளத்தில் உணவு சுழர்ச்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகிறது. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே இருப்புச்செய்யும் மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகிறது. மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கிறது.

குளத்தில் மீன் உற்பத்திக்கு கார அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன வினைகளை கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் காரஅமிலத்தன்மை உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ளச் சத்துக்களை குறைத்துவிடும்.

பாக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகிறது. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5%க்கு குறைவாக இருக்கக் கூடாது. 0.5-1.5% மற்றும் 1.5 - 2.5%. நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5%க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.

பொதுவாக கரிமம்:நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.

முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தழை, மனி, மற்றும் சாம்பல் சத்துக்களாகும். மீன் குளங்களில் பாஸ்பேட் உரத்திற்கு சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். குளத்து மண்ணில் உள்ள பாஸ்பேட் அளவைப் பொருத்து 156 - 312 கி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அளிக்க வேண்டும். மீன் வளர்ச்சி மற்றும் இருப்பு குளங்களில் செய்யும் போது 250 - 468 கி சூப்பர் பாஸ்பேட் இருக்க வேண்டும். இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் 16 - 32 கி/ஹெ. அல்லது பொட்டாசியம் சல்பேட் 20 - 40 கி/ஹெ. வளர்ச்சி மற்றும் இருப்புச் செய்யும் போது அளிக்க வேண்டும். இதை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையில் சரிபாதியாக பிரித்து அளிக்க வேண்டும்.

குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் மூலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம், குறைந்த உரங்களே தேவைப்படும்.

இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும் போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.

பக்கம் 4 / 11