Editor's Choice

அனைவராலும் தோட்டம் அமைப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் ஒரே ஒரு ரோஜா செடி வளர்க்க முடியும். அச்செடி மொட்டுவிடும்பொழுதும் பூப்பூக்கும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது.

ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை வீட்டு தோட்டங்களில் காய்கறி, கீரைகள், பூச்செடிகளை வளர்த்தால் தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்திசெய்ய முடியும். இதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும், நகரத்தில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் மும்பையில் குடிசை பகுதிகளில் தொட்டிகளை வைக்க இடமில்லை என்றாலும் அவற்றை கயிற்றில் கட்டி கூரையின் பக்கவாட்டில் உள்ள கம்புகளில் தொங்கவிட்டு வளர்க்கிறார்கள்.

அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து உழைப்பையும் செலவுகளையும் பகிர்ந்துகொண்டால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நச்சுக்கள் கலக்காத காய்கறிகள் கிடைக்கும் அல்லவா? செடிகளுக்கு தண்ணீர் போற்றுவதும், அதை பராமரிப்பதும் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். அழகாக போது குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாட வரும் அணில்கள் மற்றும் குருவிகளும் யாருக்குத்தான் பிடிக்காது.

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கலாம். சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளின் மேலும் ரோஜா செடிகளை வளர்ப்பதுண்டு. மாடிகளில் வளர்ப்பதற்கு ஏற்றவாறு ஓவல் அமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்கிறது.

நல்ல விளைச்சலை பெற வேண்டுமானால் முதலில் மண் ஆரோகியதுடன் இருக்க வேண்டும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து மீதியை காற்றிலிருந்து பெற்று கொள்கிறது. அதனால் மண்ணும் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

செம்மண்ணும் மணலும் கலந்த கலவையோடு எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையை தொட்டிகளில் இட வேண்டும்.

ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.

Editor's Choice

மதுரை மாவட்டத்தில் காய்கறி பயிர்களில் அதிகளவில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

விவசாயிகள் அறுவடை நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் மருந்தின் வீரியம் காய்கறிகளில் தங்கி விடுகிறது. 2019, 2020 ஆண்டுகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக காய்கறி லாரிகள் இக்காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது மீண்டும் அந்த நிலை உருவாகியுள்ளது.

தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மையானது காய்கறிகளில் 40 நாட்கள் வரை நீடிக்கிறது. கால்நடைகளுக்கும் இதனால் தீங்கு ஏற்படுகிறது. அதிக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது தீமை விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டு மகசூலும் குறைகிறது.

மொத்தத்தில் நிலத்தின் தரம் குறைந்து பயிர் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதையை பயன்படுத்தலாம். ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் சுழற்சி முறையில் மாற்றுபயிர் சாகுபடி செய்யலாம். வெவ்வேறு இனப் பயிர்களை வேலியோரமாக பயிர் செய்வதன் மூலமும் பூச்சிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம், என்றார்.

Editor's Choice

பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுவதில் மாடுகளுக்கு பெரும் பங்கு உண்டு. அவை வெளியேற்றும் வாயுக்களில், மீத்தேன் பெருமளவு இருப்பது தான் அதற்குக் காரணம். மாடுகளின் தீவனத்தோடு, சிறிதளவு கடல்பாசியை சேர்த்தால், மாடுகள் வெளியேற்றும் மீத்தேனின் அளவில், 82 சதவீதத்தை குறைக்கலாம் என, 'பிளோஸ் ஒன்' இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

நம் வளிமண்டலத்திற்குள் வெப்பத்தைத் தேக்கி வைத்து, பூமியை சூடேற்றுவதில், கார்ப்ன் - டை - ஆக்சைடைவிட, மீத்தேனுக்கு அதிக பங்கு உண்டு. மீத்தேனை வெளியேற்றுவதில் விவசாயத்திற்குதான் முதலிடம். என்றாலும், மனிதர்கள் உருவாக்கிய பண்ணைகளில் வளரும் கால்நடைகள், 37 சதவீத பங்கு மீத்தேனை வெளியேற்றுகின்றன.

எனவே தான், இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு, தீவனத்தில் என்ன மாறுதல்களை செய்தால், அவை வெளியேற்றும் மீத்தேன் வாயுவை குறைக்கலாம் என, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சோதனை செய்தனர். இறுதியில், தீவனத்தோடு, மிகச் சிறிய அளவு கடல்பாசியை கலந்து கொடுத்தால், பெருமளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்க முடியும் எனத் தெரியவந்தது.

Editor's Choice

கன்று ஈனுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் மாடு அமைதியிழந்து காணப்படும். தீவனம் சரிவர உண்ணாது. வாலை அடிக்கடி சுற்றும். வாலின் பின் பகுதியை நக்குவதோடு, காலால் தரையை மெல்ல உதைக்கும். படுக்கும், எழுந்திருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.

மாட்டின் வெளி பிறப்புறுப்பு 2 முதல் 6 மடங்கு தடித்தும் தளர்ந்தும் சளி போன்ற திரவம் நீராக மாறி கருப்பை வாய் வழியாக வழியும். மடியானது தடித்தும் பெரிதாகவும் இருக்கும். கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் இருக்கும் போது சில மாடுகளில் மடியிலிருந்து சீம்பால் தானாக கசியும்.

இந்த அறிகுறிகள் தென்படும் பொழுது எந்த தொந்தரவும் இல்லாதவாறு தனியாக தொழுவத்தில் கட்ட வேண்டும். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும்.

கருப்பை வாய் வழியாக கன்றானது வெளியே தள்ளப்பட்டு முதல் பனிக்குடம் உடைகிறது. பிறகு இரண்டாம் பனிக்குடம் வெளிப்பிறப்புறுப்பில் தென்படும்.

கன்றின் கால்கள் மாட்டின் வெளி பிறப்புறுப்பின் வழியாக வந்தவுடன் இரண்டாம் பனிக்குடம் உடையும். இரண்டாம் பனிக்குடம் தானாக உடைய ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். கையால் உடைத்து கன்றை வெளியே எடுக்க முயன்றால் கன்றானது சுவாசிக்க முடியாமல் இறந்து விடலாம்.

இரண்டாம் பனிக்குடம் உடைந்த பிறகு கன்றின் தலை, வயிறு மற்றும் தொடைப்பகுதி மாட்டின் இடுப்புப் பகுதிக்கு வருவதால் மாட்டின் வயிறு வேகமாக விரிவடைந்து சுருங்கும். கன்று வெளியே வருவதற்கு அரை மணியிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழுந்து விடும். அவ்வாறு விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகலாம்.

முறையாக கன்று ஈன வைத்து, நஞ்சு கொடி அகற்றினால் கருப்பை 40 அல்லது 45 நாட்களில் சுருங்கி பழைய நிலைக்கு வந்து விடும். மாடும் வெகு சீக்கிரத்தில் சினைக்கு வந்து விடும். பாலும் நன்றாகக் கறக்கும்.

Editor's Choice

ஜப்பானை சேர்ந்த இயற்கை ஆர்வலர் மூலமாக ‘மியாவாக்கி காடுகள்’ உலகெங்கும் பரவ தொடங்கின. இந்தியாவிலும் இத்தகைய காடுகள் துளிர்க்க ஆரம்பித்திருக்கின்றன.  துவக்கம் என்ற அமைப்பினர், சென்னை போன்ற பெருநகரங்களில் மியாவாக்கி காடுகளை அதிகளவில் உருவாக்கி வருகின்றனர்.

‘‘கட்டிடங்கள் நிறைந்திருக்கும் சென்னை போன்ற பெருநகரத்திற்கு மியாவாக்கி காடுகள் சிறந்தவை. மிகக்குறைந்த இடத்தில் அடர்த்தியான மியாவாக்கி காடுகளை உருவாக்கிவிடலாம். நிறைய மரங்களையும் வளர்க்கமுடியும், நிறைய ஆக்ஸிஜனையும் சுவாசிக்கமுடியும். அந்த முயற்சியில்தான், 2017-ம் ஆண்டு ஜெயின் பப்ளிக் பள்ளியில், 300 சதுர அடியில், 70 மரங்களை நட்டு பராமரிக்கப்பட்டது. மியாவாக்கி காடுகள் உலகளவில் பிரபலமாகி வந்த சூழலில், சோதனை முயற்சியாகவே இதை முயன்று பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட, சிறப்பாகவே காடுகள் வளர்ந்தன’’ என்று கூறுகின்றனர் துவக்கம் அமைப்பினர்.
 
‘‘சோதனை முயற்சிக்கு பிறகு, பூந்தமல்லி பகுதியில் 600 மரங்களை நட்டு மற்றொரு மியாவாக்கி காட்டை உருவாக்கினோம். அது இப்போது நிஜ காடு போலவே காட்சியளிக்கிறது. இதை அடுத்து, முகலிவாக்கம் பகுதியில், 2800 மரங்களை நட்டு பராமரித்தோம். இன்று இங்கு ஆள் உயர மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அதுவும் பட்டாம்பூச்சி, பறவைகள் போன்றவை வந்து செல்லும் இயற்கை சோலைவனமாகவே காட்சியளிக்கிறது. இதற்கிடையில் தூத்துக்குடி நகரில் 2500 மரங்களை கொண்டு ஒரு அடர்வனத்தை உருவாக்கினோம். மணப்பாக்கம், கல்பாக்கம், சிறுசேரி, குரோம்பேட்டை போன்ற பகுதிகளிலும் அடர்வனங்கள உருவாக்கி உள்ளோம். தற்போது சோழிங்கநல்லூர் பகுதியில் 36 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5600 மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கியிருக்கிறோம்’’ என்று துவக்கம் அமைப்பின் நினைவுகளை கூறினார் சிராஜ்.
 
‘‘சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உருவாக்கப்பட்ட ‘அடர்வனம் புராஜெக்ட்’ செழித்து வளர்ந்திருப்பதை தொடர்ந்து, மேலும் பசுமையாக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட காடுகளில் தேனீ வளர்ப்பு பெட்டிகளை அமைத்து தேனீ வளர்ப்பை முன்னெடுக்க இருக்கிறோம். மேலும் சூழலியல் ஆய்வாளர்களின் உதவியோடு, பட்டாம்பூச்சி வளர்ப்பையும் முன்னெடுக்க இருக்கிறோம். மியாவாக்கி முறையிலேயே கனி தரும் காடுகளை உருவாக்க இருக்கிறோம். கொய்யா, சப்போட்டா, சீத்தா பழ மரங்களை பராமரிப்பதினால், பசுமையையும் மீட்டெடுக்கமுடியும். காடுகள் அமையபெற்ற பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்கமுடியும்’’ என்று அசத்தலான திட்டங்களை பட்டியலிட்டார்.
இதேபோல் வியாசார்பாடி பகுதியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்ன.

 

Editor's Choice

நுங்கம்பாக்கம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்டு நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம், மேற்குமாட வீதியில் அமைந்துள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில். கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பல ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள, 15 கிரவுண்ட் நிலத்தை, 30 ஆண்டுகளாக, சீனிவாசன், மோகனா என்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அந்த இடத்தில், பல குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, அறநிலையத்துறை சட்டப் பிரிவு, 78ன் படி, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றியதோடு, கட்டடத்தையும் கையகப்படுத்தி, 'சீல்' வைத்தனர்.

பக்கம் 5 / 11