Editor's Choice

மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டு கணவரிடம் விவகாரத்து பெற்ற பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் அந்த நபர் வேலையின்றி வீட்டில் இருந்து உள்ளார்.  தனது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம் தேதி வரை 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளார்.  வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் எல்லாம்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது  குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை மிரட்டியும் அடித்தும் உள்ளார் .
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தங்கையையும் சிறுமியின் தாய் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் . அப்போது  தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அந்தச் சிறுமி தெரியப்படுத்தியதை இந்த சம்பவம் சத்துக்கு வந்து உள்ளது. 
 
இது குறித்து தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என அரசுத்தரப்பில் வாதாடப்பட்டது.
 
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
Editor's Choice

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு வேகமெடுத்துள்ளது. இதனால், பதிவுத்துறையில் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று  பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2018 பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு வருகிது.

ஆரம்பத்தில் பத்திரப்பதிவுகளில் இடர்பாடுகள் இருந்தாலும், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பத்திரப்பதிவில் புதிய இலக்கை  பதிவுத்துறை எட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த 2019 செப்டம்பர் 12ல் 18,581 ஆவணங்களும், 2019 மார்ச் 13ல் 18,674ம், 2020 பிப்ரவரி 26ம் தேதி 18,703, 2019 செப்டம்பர் 4ம் தேதி 18,967ம், 2020 செப்டம்பர் 16ம் தேதி 19,681ம், 2020 செப்டம்பர் 14ம் தேதி  19,769ம், 2020 அக்டோபர் 29ம் தேதி 20,307ம், 2020 நவம்பர் 6ம் தேதி 21,206ம், 2020 டிசம்பர் 14ம் தேதி 21,128 ஆவணங்கள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திர பதிவு 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, காலை 9 மணி முதல் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரவும் அலுவலர்கள்  அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்தப்படி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர்.

தொடர்ந்து, பதிவுக்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பாமல் இரவு வரை பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே திருப்பி அளிக்கப்பட்டது. அதன்பேரில், இதுவரை பத்திரப்பதிவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு நேற்றுமுன்தினம்  மட்டும் 22,686 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 138.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  சார்பதிவாளர் அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவு பத்திரப்பதிவு இல்லாத நிலையில் வருவாய் சரிவு ஏற்பட்டது. இதனால், நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

கடந்த 4 மாதங்களாக பத்திரப்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பத்திரம் பதிவு செய்த  அன்றைய தினமே ஆவணங்களை திருப்பி தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப்பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கண்காணித்து வருகிறார். இதன் விளைவாக,  பதிவுத்துறை தனது இலக்கை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 3,07,849 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.1342.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2019ல் 2,28,239 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.1006.08 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில்  டிசம்பர் வரை ரூ.7030.59 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Editor's Choice

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

Editor's Choice

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா  சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் வசித்து வந்தார். 

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 2017ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி, வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதா மறைந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 28ம் தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேதா நிலையத்தை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்

இதையடுத்து, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய கோர்ட் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை. ஆனால் பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Editor's Choice

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்க டாக்டர் தரும் ஆலோசனைகள் -

வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு
நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.

எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார்.

நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று
இறந்தார்?" என்று வியந்ததுண்டு.

காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

மூன்றரை நிமிடங்கள் மிகவும் முக்கியம்?

நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் உணர்வு  உங்களை எழுப்பும்போது, ​​திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும்,

மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?:

1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள்.

2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்;

3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,

உங்கள் இதயம் பலவீனமடையாது.

இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம். யாருக்கும் நிகழலாம்.

Editor's Choice

வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் அட்டை போன்ற தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை (e-EPIC) செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் உதவியுடன், இப்போது வாக்காளர் அடையாள அட்டைகளையும் (Online Voter Id Card) ஆதார் அட்டைகளைப் போல ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

அனைத்து வாக்காளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வாக்காளர் அடையாள அட்டையின் நகலை எப்போதும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தொலைபேசியில் அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிவு செய்யும் போது மொபைல் எண்ணை வழங்குவது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளிட்ட பிறகு, உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும். இதற்குப் பிறகு, OTP (One Time Password) மூலம் e-EPIC பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் மூலம், நீங்கள் ஒரு புதிய வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஏற்கனவே வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள், டிஜிட்டல் அட்டைக்காக தங்கள் முழு விவரங்களையும் மீண்டும் எழுத வேண்டும். இந்த செயல்முறை வங்கியில் உள்ள KYC-க்கு ஒத்ததாகும். இங்கே நீங்கள் உங்கள் மொபைல் எண்ணையும் மின்னஞ்சலையும் கொடுக்க வேண்டும், இதனால் தொலைபேசி மற்றும் அஞ்சலில் தகவல்களை உங்களுக்கு வழங்க முடியும்.

இந்த அட்டையின் மிகப்பெரிய நன்மை நேர சேமிப்பு. ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், புதிய வாக்காளர் அட்டைகளை உருவாக்க அல்லது பழைய அட்டைகளில் மாற்றங்களைச் செய்ய எங்காவது அலைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொலைபேசியில் மின்னணு வாக்காளர்கள் புகைப்பட அடையாள பயன்பாட்டை (e-EPIC) பதிவிறக்குவதன் மூலம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனால் இந்த பயன்பாடும் செயல்படும். வெறும் ரூ.25 கட்டணம் செலுத்தி மக்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறலாம்.

பக்கம் 66 / 90